Sign in to follow this  
Followers 0
பாலா

பீட்சா

3 posts in this topic

இந்தப் படத்தை பார்த்தீர்களா? நல்ல ஒரு திரில்லர் படம். 6th sense என்ற ஆங்கிலப் படம் மூலம் நைட் சியாமளன் பிரபலமானது போல் கார்த்திக் சுப்பராஜ் பிரபலமாவார் என்று நினைக்கிறேன்! ஆனால் ஆறாம் அறிவுக்கு அப்புறம் தனக்கு ஆறறிவுக்கு மேல் இல்லை என்று ஒத்துக் கொண்டவர் சியாமளன்.

6th sense பற்றி ஏன் சொன்னேன் என்றால் அந்தப் படத்தின் முடிவில் கதையைப் பற்றி எனக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ அதே உணர்வு தான் பீட்சாவின் முடிவிலும் ஏற்பட்டது!

இந்தப் படத்திலும் சில பிழைகள் உள்ளன...! பீட்சா கடை ஓனரின் பெண்ணின் பெயரும் பேய்பங்களாவில் வரும் பெண்ணின் பெயரும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்! அது தற்செயல் தானா அல்லது அதைப்பற்றி விசாரிக்கும் கடை ஊழியர் என்ன சொன்னார் என படத்தில் விடை இல்லை! நல்ல திரைக் கதைக்கு இந்தப் படத்தை பாராட்டி ஆக வேண்டும். கதைக்கும் திரைக் கதைக்கும் எப்படி வேறுபாடு கண்டு பிடிப்பது என்று நினைப்பவர்களுக்கு இப்படம் ஒரு பாலபாடம்!

Share this post


Link to post
Share on other sites

Spoiler Ahead...படம் பார்க்காதவர்கள் படிக்க வேண்டாம்!

முக நூலில் இருந்து...

|

|

|

|

|

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. ஹீரோயின் ஹீரோ 2 பேரும் லிவ்விங்க் டுகெதரா ஒரே வீட்ல 4 வருஷங்களா இருக்காங்க. மேட்டர் முடிஞ்சுடுது, குழந்தை கரு உருவானதும் ஹீரோயின் ஹீரோவை மேரேஜ்க்கு கம்ப்பெல் பண்றா. அப்போ ஹீரோ நாம 2 பேர் சம்பாதிக்கறது நமக்கே சரியா இருக்கு. இதுல கல்யாணம் குழந்தை எல்லாம் எதுக்கு? அப்டிங்கறார். அப்போ உடனே ஹீரோயின் என்ன கேட்கனும்? ஏய்யா. மேட்டருக்கு மட்டும் நான் வேணுமா? இனி பெட் ரூம் பக்கம் வந்துடாதேன்னு அடி மடில கை வைக்க வேணாம்? அதை விட்டுட்டு இனிமே உன் பேண்ட் சர்ட்டை துவைக்க மாட்டேன்னு மிரட்டுது. இதுதான் ஒரு பொண்ணோட மிரட்டல் பாணியா?

2. அதுக்குப்பின் ஹீரோ ஒத்துக்கறார். ஆனா ஊரறிய வேணாம் . இப்போதைக்கு இந்த வீட்ல நம்ம 2 பேருக்கு மட்டும் தெரியற மாதிரி பண்ணிக்குவோம்னு ஒரே ஒரு மோதிரத்தை மோதிர விரல்ல மாட்டி விடறான். உடனே அந்த பேக்கு ஹீரோயின் கெக்கேக்கே பிக்கேக்கேக்கேன்னு சிரிக்குது. பதிவுத்திருமணம் பண்ண என்ன செலவு ஆகிடும்? அட்லீஸ்ட் சாட்சிகள் 2 பேராவது இருக்க வேணாமா? இப்படி வீட்டுக்குள்ளேயே மேரேஜ் பண்ணிக்கவா அத்தனை ஆர்ப்பாட்டங்கள் ?

3. பீட்சா கடை ஓனர் ஒரு கவரை குடுத்து தன் வீட்ல அதை குடுத்துட்டு வான்னு சொல்றார். ஹீரோ அங்கே போனதும் பேய் பிடிச்ச குழந்தையை பார்த்துடறார். உடனே ஓனர் தன் வேலையாள்னு பார்க்காம அவன் கிட்டே பம்மறார். இந்த மேட்டரை யார் கிட்டேயும் சொல்லிடாதேன்னு. நான் ஓனரா இருந்திருந்தா வேலையாளை வீட்டுக்கே அனுப்பி இருக்க மாட்டேன். அல்லது மனைவிக்கு ஃபோன் பண்ணி இப்போ நம்ம வேலையாள் வர்றான். நீ கேட்டுக்கு வெளில நின்னு கவரை வாங்கிக்க. உள்ளே வந்தா நம்ம பொண்ணு மேட்டர் அவனுக்கு தெரிஞ்சுடும்னு சொல்லி எச்சரிச்சிருப்பேன்.

4. ஹீரோவோட ஃபோன்ல செல் அவுட் கோயிங்க் போகலை, அதனால கால் பண்ண முடியலைன்னு ஓனர் கிட்டே சொல்றார். அந்த லேடியோட ஃபோன் இருக்கு. செல் ஃபோன் இருக்கு. அதுல இருந்து ஏன் கூப்பிடலை?ன்னு ஓனர் கேட்கவே இல்லையே?

5. பீட்சா கடை ஓனர் பேய் ஓட்டுபவர் அல்லது மந்திரவாதியை நம்பறார், ஆலோசனை கேட்கறார் , ஓக்கே ஆனா மன நல நிபுணரை ஏன் கலந்து ஆலோசிக்கலை. ? ஏன்னா ஒரு பெண் குழந்தையோட அப்பா தன் குழந்தை குணம் ஆகனும்னா சாத்தியமான எல்லா வழிகளையும் முயற்சி பண்ணி பார்ப்பார், உதாரணமா கடவுள் நம்பிக்கை பேய் நம்பிக்கை இல்லதவங்க கூட தன் பெண் குழந்தைக்கு ஒரு ஆபத்துன்னா தாயத்தா? சரி கட்டித்தான் பார்ப்பமேன்னு நினைப்பான். அதே போல மன நல சிகிச்சை பற்றியும் சிந்திச்சிருக்கனும்..

6. இந்தக்காலத்துல ஆளாளுக்கு டபுள் சிம் ( டூயல் சிம் ) ஃபோன் வெச்சிருக்காங்க. அல்லது 2 செல் ஃபோன் வெச்சிருக்காங்க.. அப்படி இருக்கும்போது 2 கோடி ரூபா அபேஸ் பண்ணும் மேட்டரில் ஒருவர் தன் செல் ஃபோனை கழட்டி சிம்மை மாற்றி பேசிட்டு மீண்டும் பழைய சிம்மை பொருத்துவதும் அந்த இடைப்பட்ட கால அளவில் யாராவது கூப்பிட்டா தன் சதி தெரியும் என பயப்படுவதும் ஏத்துக்கவே முடியலை.. அட்லீஸ்ட் ஒரு பேசிக் மாடல் ஃபோன் கூடவா எக்ஸ்ட்ரா வெச்சுக்க மாட்டான்?

7. பீட்சா கடைல 3 பேர் வேலை செய்யறாங்க. ஒண்ணா சரக்கு அடிக்கறாங்க.ஆனா ஹீரோ மனைவியை யாருமே பார்த்ததில்லை என்பதும், பீட்சா கடை ஓனரும் பார்த்ததில்லை என்பதும் நம்ப முடியலை. இப்போவெல்லாம் கடை ஓனர்ங்க ஃபுல் டீட்டெயில்ஸ் தெரியாம வேலையே தர மாட்டாங்க.. 3 வருசமா ஒர்க் பண்ற ஆளை பற்றிய விபரம் தெரிஞ்சுக்காமயா இருப்பார்?

8. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம் தான். ஆனா அது ஹாலிவுட் திகில் படங்களுக்கு சரி.. இந்த க்ரைம் படத்துக்கு அந்த ஆவி ட்விஸ்ட் தேவை இல்லை,. இதை ஒரு பகுத்தறிவுப்படமாவே முடிச்சிருக்கலாம்

வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் -அபாரமான திரைக்கதை உத்தி,க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம் ,சபாஷ் படம், புதுமையான கதையை விரும்பும் அனைத்துத்தரப்பும் பார்க்கலாம் ஹீரோ பின்னால் ஓடாமல் திரைக்கதை அமைக்கத்தெரிந்தால் ஒரு சாதா படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்பதற்கு இது ஒரு உதாரணம்

Share this post


Link to post
Share on other sites

சமீபத்தில் சென்னை சென்றிருந்தபொழுது இப்படத்தை தியேட்டரில் பார்த்தேன் 2.5 மணிநேரம் நம்மை படம் கட்டிப்போட்டிருந்தது

லாஜிக் பார்க்க நாம் விமர்சகர்கள் அல்ல பொழுதுபோக்கை எதிர்பார்த்து செல்கிறோம் அது வரை இப்படம் மாபெரும் வெற்றியே

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0