Sign in to follow this  
Followers 0
Sembiyan

பரதேசி - FIR

13 posts in this topic

நல்ல புகைப்படம் எடுக்க விலை உயர்ந்த கேமரா மட்டும் இருந்தால் போதாது. அதுபோலத்தான் சினிமாவும். மாஸ் ஹீரோ, தடபுடல் செலவு... என்று மட்டும் இருந்தால் போதாது. பாலா மீண்டும் ஒரு முறை ஓட்டைக் கேமராவை வைத்து நல்ல படத்தை எடுத்துள்ளார்.

பாலா படங்கள் இப்படி தான் இருக்கும் என்று தெரிந்தாலும் அவரின் படங்களைப் பார்க்க ஆவலாகச் செல்ல வைப்பது அவரின் உண்மையான உழைப்பு. தமிழ் பட இயக்குனர்கள் டிவியில் தோன்றி அடிக்கடி சொல்லும் வித்தியாசமான கதை இவர் படங்களில் இருக்கும்.

படத்தில் யார் ஹீரோ என்று முதலில் பார்த்துவிடலாம் - வறட்சியான கிராமம், தேயிலைத் தோட்டம், மூட்டை முடிச்சுகளுடன் வரும் அந்த ஊர்க் கூட்டம். முதல் ஹீரோ.

நாஞ்சில் நாடான் வட்டார மொழியில் எழுதிய வசனம். முதலில் ஏதோ வேறு மொழி மாதிரி இருந்தாலும் பிறகு நாம் கதைக்குள் சென்றவுடன், இடைவேளையின் போது கேண்டினில் "எலேய் கொஞ்சம் காப்பி தண்ணி குடுலே" என்று கேட்க தோன்றுகிறது. நாஞ்சில் நாடானும் இந்த படத்தில் ஒரு ஹீரோ தான்.

அதர்வா நடிப்பு என்று சொல்ல முடியாது அவர் நிஜமாகவே வாழ்துள்ளார். அவர் அப்பத்தாவாக வரும் அந்த கிழவியின் நடிப்புக்கு உலக நாயகன், சூப்பர் ஸ்டார், தளபதி யாரும் போட்டி போட முடியாது. சிங்கிள் ஆளாக ஒரு பெரிய கிராமத்தையே பிரதிபலிக்கிறார். வடிவுக்கரசி போன்ற சினிமாக் கிழவிகளைப் போடாமல் இந்த மாதிரி நிஜ கிராமத்து மக்களைப் போட்டது பாலாவின் பிளஸ் பாயிண்ட்.

பஞ்சம் பிழைக்க தேயிலை தோட்டத்தை தஞ்சமடையும் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை பார்க்கும் போது படத்தில் விஜய், அஜித் இல்லையே என்ற ஏக்கம் வர செய்கிறது. அவர்கள் இருந்தால் எல்லோருக்கும் 1930லேயே இவர்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும். காந்தி கூட தேவைப்பட்டிருக்க மாட்டார்.

இசை ஜி.வி.பிரகாஷ். பேர் போடும் போதே யாருப்பா இசை என்று கேட்க வைக்கிறார். படத்தில் ஒரு பாடல் இளையராஜா பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது ஆனால் பாடியவரின் குரலே கிட்டதட்ட இளையராஜா மாதிரி தான் பாடியிருந்தார். இசை அடுத்த ஹீரோ.

கொத்தடிமைகள், குடிசைகள், வெள்ளைக்கார துரை என்றால் கூடவே ஏழைகள் வாழும் சூழல், வெள்ளைக்கார துரை பெண்களிடம் பாலியல் பலாத்காரம், வியாதிகள், ஒவ்வொருக்கும் ஒரு சின்ன கதை... எப்போது தப்பிபோம் என்ற ஏக்கம்... என்று எல்லாம் நமக்கு தெரிந்த காட்சிகள் தான்.... ஆனால் படத்தில் அதை எல்லாம் காட்டியிருப்பதில் உள்ள நிஜம் எல்லா கிராம மக்கள் கண்களிலும் அந்த பயத்தை உண்டு செய்துள்ளார்... இயக்குனர் பாலா என்ற படத்தின் ஹீரோ.

யாராவது வந்து காப்பாத்த மாட்டார்களா என்ற உணர்வு நமக்கு வந்துவிடுகிறது ஆனால் வருவதற்குள் படம் முடிந்துவிடுகிறது. நல்ல வேளை படம் முடிந்தது என்று நினைக்க தோன்றுவது தான் பாலாவின் வெற்றி.

குறை என்றால் - படத்தில் வரும் ஹீரோயின்(வேதிகா) முகத்தில் கருப்பு அடித்துக் காண்பித்தது; ஆரம்பத்தில் செய்யும் சேஷ்டைகள் எல்லாம் கடுப்பாக இருக்கிறது. அதே போல ஆரம்ப காட்சிகளில் அதர்வா சின்னதம்பி பிரபு மாதிரி செய்வது எல்லாம் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்துகிறது. கடைசியாக அந்த டாக்டர் ஆடும் அந்தக் கூத்துப் பாடலை தயவு செய்து எடுத்துவிடுங்கள் பாலா. அதைப் பார்த்தால் எங்களுக்கு சோகம் இன்னும் அதிகமாகிறது !

கொசுறு:

கிறிஸ்தவ டாக்டர் வந்து தாழ்த்தப்பட்ட மக்களை கிறுஸ்துவ மதத்துக்கு மாற்றுவது பற்றி இணையத்தில் விவாதம் நடக்க போகிறது.

அலக்ஸ் பாண்டியன் போன்ற காவியங்கள் வரும் தமிழகத்தில் இந்த மாதிரியும் படம் வருவது தமிழ் நாட்டின் சாபக்கேடு. :-)

இட்லிவடை மார்க் 8.5/10

Share this post


Link to post
Share on other sites

"வடிவுக்கரசி போன்ற சினிமாக் கிழவிகளை..."

அடப்பாவிகளா! நானெல்லாம் வடிவக்கர்சியின் இளமைக்கால படங்களை ரசித்துப்பார்த்தவன்.

இட்லிவடை, என் கையில் கிடைச்சா சட்னி, வடகறி தான்.

Share this post


Link to post
Share on other sites

"வடிவுக்கரசி போன்ற சினிமாக் கிழவிகளை..."

அடப்பாவிகளா! நானெல்லாம் வடிவக்கர்சியின் இளமைக்கால படங்களை ரசித்துப்பார்த்தவன்.

இட்லிவடை, என் கையில் கிடைச்சா சட்னி, வடகறி தான்.

கண்ணியம் போச்சே !

Share this post


Link to post
Share on other sites

கொசுறு:

கிறிஸ்தவ டாக்டர் வந்து தாழ்த்தப்பட்ட மக்களை கிறுஸ்துவ மதத்துக்கு மாற்றுவது பற்றி இணையத்தில் விவாதம் நடக்க போகிறது.

அலக்ஸ் பாண்டியன் போன்ற காவியங்கள் வரும் தமிழகத்தில் இந்த மாதிரியும் படம் வருவது தமிழ் நாட்டின் சாபக்கேடு. :-)

இட்லிவடை மார்க் 8.5/10

உணமை தானே. அவர்கள் அப்படி எல்லாம் செய்தார்கள்

Share this post


Link to post
Share on other sites

அட மாடரேட்டர் யாருங்க! செம ஸ்பீடா எல்லாம் காணாம போச்சே!

Share this post


Link to post
Share on other sites

அட மாடரேட்டர் யாருங்க! செம ஸ்பீடா எல்லாம் காணாம போச்சே!

நானே மாடேரட்டர் , நம்பவா போறீங்க‌ :பெப்பெப்பே:

Share this post


Link to post
Share on other sites

The forum admin has condemned me for writing obscene. I replied to the admin expressing the unexpected situation i got into...

My mail to admin is given below

Admin,

I am sorry. I really thought clinton is speaking in that meaning. I seriously condemned him. But later I came to know, idly vadai is a blog. First time I came to know a blog called idly vadai exists. In india idly vadai means this double meaning. Sorry again. What to do the society has become bad like this and I am forced think in the way of the society

My Apologies to clinton

regards

Srikanth

I stand vindicated . If any forum friend has any doubts please feel free to question me.

Share this post


Link to post
Share on other sites

பிரதர் டென்னவன்,

நடந்ததையெல்லாம் மறந்து, எல்லாரும் பழைய படி நட்புடன் பதிவுகளை இடுவோம். நாம் எல்லாருமே ரிலாக்ஸெஷனுக்காக இங்கே வருகிறோம் - இங்கேயும் டென்சன் பண்ணிக்கொள்ள வேணாம்.

Share this post


Link to post
Share on other sites

பிரதர் டென்னவன்,

நடந்ததையெல்லாம் மறந்து, எல்லாரும் பழைய படி நட்புடன் பதிவுகளை இடுவோம். நாம் எல்லாருமே ரிலாக்ஸெஷனுக்காக இங்கே வருகிறோம் - இங்கேயும் டென்சன் பண்ணிக்கொள்ள வேணாம்.

தென்னவன் தனது Apology letter -ஐ பிரசுரித்து விட்டதால், மன்னிப்பதில் தவறில்லை. அப்படியே மற்ற பதிவர்களை தாக்குவதைப் பற்றியும் ஒரு கடிதாசு போட்டுட்டாருன்னா சரி!

Share this post


Link to post
Share on other sites

தென்னவன் தனது Apology letter -ஐ பிரசுரித்து விட்டதால், மன்னிப்பதில் தவறில்லை. அப்படியே மற்ற பதிவர்களை தாக்குவதைப் பற்றியும் ஒரு கடிதாசு போட்டுட்டாருன்னா சரி!

அது தென்னவன் மட்டுமா எழுதனும், பலர் எழுதவேண்டிவரும். :பெப்பெப்பே:

Share this post


Link to post
Share on other sites

கிளிண்டன் மேல் நான் என்றும் அன்பும் மரியாதையும் கொண்டவன்.

Share this post


Link to post
Share on other sites

கிளிண்டன் மேல் நான் என்றும் அன்பும் மரியாதையும் கொண்டவன்.

சூப்பர். அருமை

Share this post


Link to post
Share on other sites

அற்பத்தனம், அயோக்கியத்தனம் கூடவே முட்டாள்தனம்…பாலாவின் பரதேசி : முருகவேள்

முக நூலில் இருந்து...

கதை திரைக்கதை பாலா என்று போடும் போதே படத்தின் அற்பத்தனமும் மோசடியும் ஆரம்பமாகிவிடுகிறது.

நினைக்க நினைக்க கோபம் பொத்துக் கொண்டு வரச் செய்யும் டாக்டர் …கேரக்டரிலிருந்து தொடங்கலாம்.பாலா சிலப்பதிகாரத்தை படமாக எடுத்தால் சிலம்பைத் திருடியது இளங்கோவடிகள் என்பார்.வாழ்நாள் முழுவது ஏகாதிபத்திய எதிர்பாளனாகவும் சமரசமற்று வெள்ளையரை எதிர்த்து உழைக்கும் மக்களொடு இணைந்து போரடியவருமான பி.எச்.டேனியலின் சாயலில் எரியும் பனிக்காட்டில் ஆபிரஹாம் என்ற மருத்துவர் கதாபாத்திரம் படைக்கப் பட்டிருக்கும்.இந்தப் பாத்திரத்தைத் தான் மதம் பரப்ப குத்தாட்டம் ஆடுபவராகவும் வெள்ளையரின் காலடில் அமர்ந்து குடிப்பவராகவும் சித்தரித்திருக்கிறார் பாலா.

பாலாவையும் நாஞ்சில் நாடானையும் எனது சொந்த செலவில் வால்பாறை அய்யர்படி மருத்துவமனைக்கு அழைக்கிறேன். மூன்று மாடியில் பிரம்மாண்டமாக நிற்கிறது அந்த மருத்துவமனை. உயிரைப் பணயம் வைத்து போராடிய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும், போர்க்குணம் கொண்ட பாட்டாளிவர்க்கமும், எழுத்துப் பணியாளர்களின் பிரதிநிதியாகவும் தலைமை மருத்துவராகவும் இருந்த பி.எச். டேனியலும் இணைந்து நிகழ்த்திய சாதனை அது.பல்லாயிரம் உயிர்களைக் காப்பாற்றிய மருத்துவ மனை அது.கோவை தவிர மலையோரமிருக்கும் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை போன்ற ஒப்பீட்டளவில் பெரிய நகரங்களில் கூட இது போன்றஅரசு மருத்துவமனை இல்லை.யாரை மதம் பரப்ப வந்தவன் என்கிறார் பாலா?

தோழர் லட்சுமணன் எழுதியது போல டேனியல் இல்லை என்றால் ரெட் டீ இல்லை, ரெட் டீ இல்லை என்ன்றால் எரியும் பனிக்காடு இல்லை.இந்தப் பரதேசியும் இல்லை.ஏதேதோ வாக்குறுதிகள் அளித்து சிபாரிசுகள் பிடித்து பமீலா மோசஸிடம் உரிமம் பெற்றபிறகு இப்படி ஒரு பச்சையான அயோக்கியத்தனம்.

டேனியல் ஒருவேளை மிஷனரி ஆதரவாளராக இருந்து அப்படிப்பட்ட மதமாற்றும் வேலைகள் ஏதாவது செய்திருந்தால் நாவலில் சொல்லப்பட்டாலும் படாவிட்டாலும் காட்ட பாலாவிற்கு உரிமை உண்டு. எஸ்டேட்டுகளின் மிஷனரிகளின் பணி ‘கூலி மிஷன்’ என்று அழைக்கப்பட்டது.அன்றிலிருந்து இன்றுவரை ஒடுக்கப்பட்ட மக்களிடையே சர்ச் ஏகாதிபத்திய ஆதரவு பொதுவுடமை எதிர்ப்புப் பிரச்சாரம்தான் செய்து வருகிறது.அந்தக் கூலி மிஷன் குறித்து இந்தக் கும்பலுக்கு என்ன ஆய்வு இருக்கிறது?கூலி மிஷனில் டேனியல் சம்பந்தப் பட்டிருந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?அப்படி ஒன்று இருந்ததாகவாவது தெரியுமா இவர்களுக்கு?ஆய்வெல்லாம் செய்யக் கூடியவர்களா இவர்கள்?

அப்புறம் படத்தின் கதை மாந்தர்கள் தலித்துகள் என்பதை மறைக்க பலா படும் பாடு இருக்கிறதே அது தனது நடிகர்களை பாலா படுத்திய பாட்டைவிட அதிகம் போலிருக்கிறது.எஸ்டேட்டுகளில் வேலை செய்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலித்துகள் என்பது ஊரரிந்த விஷயம்.கதையிலும் அது தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது.அப்புறம் எதற்காக அதை மறைக்க நாஞ்சில் நாடனின் இடலக்குடி ராசாவைக் கொண்டு வந்து எரியும் பனிக்காட்டின் மீது சூப்பர் இம்போஸ் செய்ய வேண்டும்?

தலித் கதாநாயகர்களை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற பத்தாம் பசலித் தனமான வாதங்கள் எப்போதோ உடைக்கப்பட்டுவிட்டன.பேராண்மை, வெண்ணிலா கபடிக்குழு, வழக்கு எண் 18/9 , இப்போது வந்த அட்டக் கத்தி இந்தப் படங்களில் எல்லாம் சர்வசாதாரணமாக மக்கள் தலித் பாத்திரங்களை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் அல்லவா? மாட்டுக் கறி விவகாரம் கூட அட்டக் கத்தியில் உடைக்கப்பட்டுவிட்டது.பரதேசியில் மாட்டுக் கறி என்ற சொல்லே உச்சரிக்கப் படுவதில்லை.சரி அந்தமாதிரி ஏதாவது சந்தேகம் இருந்தால் எரியும் பனிக்காட்டிற்கு ஏன் வர வேண்டும்?நாட்டாமை, சந்தர பாண்டியன் மதிரி ஏதாவது எடுத்துவிட்டுப் போக வேண்டியதுதானே?

ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். தான் பணம் போட்டு எடுக்கும் படத்தில் இவர்களைப் போயா காட்டுவது என்ற சாதிக் கொழுப்பு மட்டுமே காரணமாயிருந்திருக்கமுடியும்.டேனியலையும் தலித் கிருத்துவர் என்று கருதிக் கொண்டுதான் இந்த அயோக்கியத் தனத்தைச் செய்திருக்கிறார் போலிருக்கிறது.

நாஞ்சில்நாடனை நான் என்னவோ என்று நினைத்திருந்தேன்.கோவையைச் சேர்ந்த கனக தூரிகா என்ற மிக இளம் எந்ழுத்தாளர் இருள் தின்னும் இரவுகள் என்று ஒரு நாவல் எழுதியிருந்தார்.நாவல் கால் சென்டர் வாழ்க்கை பற்றியது.அது பேசும் அரசியலிலும் சரி, மொழி நடையிலும் சரி மிக நல்ல நாவல்.அதற்கு முன்னுரை எழுதிய இந்த நாஞ்சில் நாடன் நாவலின் ஆசிரியரை உருட்டி மிரட்டி துவைத்து எடுத்திருப்பார். ஒரு கண்டிப்பான கணக்கு வாத்தியாரிடம் சிக்கிக் கொண்டதைப் போன்ற உணர்வு படிப்பவர்களுக்கே ஏற்படும். சொல்லப் போனால் நாஞ்சில்நாடனின் தலைகீழ் விகிதங்களைவிட் இந்த நாவல் பலமடங்கு சமூக உணர்வுடன் அற்புதமானதாக இருந்தது.

ஒருவேளை பாரதியார், ஜெயகாந்தன் வழியில் வந்த சிங்கம் போலிருக்கிறது. அப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் . இந்தப் பரதேசியைப் பார்த்தபிறகுதான் தெரிகிறது இது சிங்கம் இல்லை மூக்கணாங்கயிறு போட்டு கொல்லையில் கட்டப்பட்டிருக்கும் சாதுவான பசு என்று.பசுக்களை பாலாவுக்கு மிகவும் பிடிக்கும் என்பது புரிகிறது.ஒருநாவலும் அதன் களமும் சிதைக்கப் படுகிறது என்றால் ஒரு எழுத்தாளனுக்கு கோபம் வரவேண்டாம்?இவருடைய சிறுகதையையும் சேர்த்துத் தானே கதை திரைகதை என்று போட்டுக் கொள்கிறது அந்த ஜீவன்?

எரியும் பனிக்காட்டில் முதலிரண்டு அத்தியாயங்களில் கிராமங்களில் தலித்துகளின் நிலை பற்றி தெளிவாக விளக்கப்பட்டிருக்கும். பஞ்சம், மழையின்மை போன்ற சூழல்களில் சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் தலித்துகள் வறுமையிலும் பட்டினியிலும் வாடும்படி விடப்படுவதும் அந்தக் கையறு நிலையில் இருப்பவர்களை ஏகாதிபத்தியம் கங்காணிகள் மூலம் வளைத்து அடிமையுழைப்பிற்கு அழைத்துச் செல்வதும் விரிவாக இடம்பெற்றிருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகள் இல்லை என்கிறார் பாலா.சரி இடைநிலைச் சாதிகள் பஞ்சத்தில் பாதிக்கப் படவே இல்லையா?அது ஏன் படத்தில் இடம் பெறவில்லை?முட்டாள்தனமா அல்லது தனது மக்கள் பசி பட்டினியால் வதைபட்டார்கள் என்று காட்ட மனம் வரவில்லையா?

எனக்கு ஒரு விஷயம் புரியவே மாட்டேனென்கிறது.டேனியல் குடும்பத்தினர் ரெட் டீக்கு உரிமம் கொடுத்துவிட்டனர்.நாஞ்சில்நாடன் கையைப் பிடித்துக் கொண்டு சாதுவாக பின்னால் வந்து கொண்டே இருக்கின்றார்.எனவே அந்த இலக்கியங்களைச் சிலுவையில் அடிக்கிறீகள், நெருப்பில் வாட்டுகிறீர்கள், கடலில் முக்குகிறீர்கள்.கேட்டால் காப்பிரைட் பேப்பர்களை முகத்துக்கு நேரே வீசி ஆட்டுவீர்கள்.போகட்டும்.ஆனால் ஆதவன் தீட்சண்யா எரியும் பனிக்காடு குறித்து அவர் பத்திரிக்கையில் எழுதிய கவிதையை ஏன் ஐயா உல்டா பண்ணி பாலா என்று போட்டுக் கொள்கிறீகள்?

ஒருவரிடம் உரிமை வாங்கிவிட்டால் பக்கத்து வீட்டுக்காரர் எதிர் வீட்டுக்காரர் எல்லார் பக்கெட்டிலும் கை விடலாம் என்று சட்டம் இருக்கிறதா என்ன?எல்லையற்ற பரந்த வெளியில் தறிகெட்டு அலைகிறது பாலாவின் அற்பத்தனம்.

படத்தில் ஆங்கில ஏகாதிபத்தியம் குரித்து ஒரு வரி கூட ஒழுங்காகப் பேசப்படவில்லை.ஏதோ கங்காணிகளே எல்லாவற்றையும் நடத்துவது போலக் காட்டப்படுகிறது. இங்கிலாந்திலிருக்கும் பங்குதாரர்களின் நன்மைக்காகவே நாம் இவ்வாறு செய்ய வேண்டியுள்ளது என்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் நாவலில் வெள்ளையர்கள் பேசுகிறார்கள். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் அமைப்பு முறையே மக்களை கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்தது என்பதை புரிந்து கொள்ளுமளவிற்கு விரிவான சிந்தனை பாலாவிற்கு இல்லை என்று நினைக்கிறேன்.

அரசியல்தளத்தில் மன்னிக்க முடியாத தவறுகள் இழைக்கும் பரதேசி மேக்கிங் எனப்படும் திரைப்படமாக்கப் பட்ட விதத்திலும் ஒவ்வொரு இடத்திலும் தோல்வியே அடைகிறது.

எந்த இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் வரப்பிரசாதமாக தோன்றக் கூடிய காட்சிகளை படம் தவிர்த்துச் செல்கிறது.50 ஆண்டுகளுக்கு முன் மலைகளில் கொட்டித் தீர்த்த மழை… படத்தில் இடம் பெறுவதே இல்லை.மழையே பெய்யாத மலையை பாலா எங்கே பிடித்தார்?

மலைகளின் காலநிலை பற்றியும் அவை அங்கு வாழும் மக்கள் மேல் செலுத்தும் செல்வாக்கு பற்றியும் எந்தப் புரிதலும் இயக்குனருக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

அப்புறம் இயக்குநரும், தயாரிப்பாளருமான பாலா, ரொம்பக் கடுமையாக லாபி செய்திருப்பார் போல. உடைகளுக்கு விருது கிடைத்திருக்கிறது.தமிழன் சாக்கைப் போட்டுக் கொண்டு திரிந்தான் என்ற அபாண்டம் சரித்திரத்தில் பதிவாகிவிட்டது.

48 நாட்கள் நடந்தால் விந்திய மலைகளைக் கடந்துவிட முடியாதா? அதென்ன ஒரு மண்டலம்?நாவலில் 1925ல் ரயிலில் போகிறார்கள் என்று வருகிறது. படத்தில்1939ல் சகாரா பாலைவனம் போன்ற ஒரு இடத்தில் மக்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.இந்த 1939 என்பதே ஒரு மோசமான விஷயம்.1939லிருந்து 50 வரையிலான் ஆண்டுகள் மலைகளிள் மக்கள் போராட்டங்கள் பற்றியெரிந்த ஆண்டுகள். ஏகாதிபத்தியத்தின் அத்தனை கைகூலிகளையும் பொதுவுடமைப் புரட்சியாளர்களின் தலைமையில் மக்கள் கடும் போரட்டங்களுக்கும் தியாகங்களுக்கும் பின்பு வெற்றி கொண்ட ஆண்டுகள். இந்தப் படத்தையும் அரசியல் அறிவையும் வைத்துக் கொண்டு பாலா கேன்ஸ் சென்றாராம்.மீனம்பாக்கத்தோடு திரும்பிய அவரது சுய மதிப்பிட்டை வியந்து பாராட்டுகிறேன்.அவருக்கு தனது படைப்பின் தரம் தெரிந்தே இருக்கிறது.நம்மிடம் தான் வேடம் போடுகிறார்.

நாவலை அப்படியே படமெடுக்க முடியுமா? ஒரு படைப்பாளியான இயக்குனருக்கு மாறுதல்கள் செய்ய உரிமை இல்லையா என்ற கேள்வி எழலாம்.சிலப்பதிகாரத்தை படமெடுக்கும் போது சிலம்பைத்திருடியது இளங்கோவடிகள்தான் என்ற மாறுதலைச் செய்ய கட்டாயம் இயக்குனருக்கு உரிமை இல்லை.தவிர நாவலைத் தண்டிச் சென்ற நாவலை விட அற்புதமான படைப்பாக நின்ற பல படங்களை சொல்ல முடியும்.

தாகூரின் சாருலதா சாதாரணமான ஒரு கதை.அதில் அவரது சொந்த வாழ்க்கையின் கூறுகள் இருந்ததாலேயே முக்கியமானதாகக் கருதப்பட்டது.சாருலதா திரைப்படம் மிக அற்புதமானது.எல்லாத் தளங்களிலும் அது நாவலைத் தாண்டிச் சென்றது.அழகியலிலும் அரசியலிலும் அது நாவலைவிட கூர்மையானதாக இருக்கிறது.கவுதம் கோஷின் அந்தர் ஜாலி ஜாத்ரா கூட, ஒரு நாவலைத்தழுவியதுதான். நாவலின் தாந்திரீக மாயாவாத விவரணைகளை படம் கடந்து சென்று மரணத்தை எதிர் நோக்கும் கிழவனையும் அவன் மரணமடைந்தால் உடன்கட்டை ஏற்றப்படப்போகும் அவனது இளம் மனைவியையும் கங்கையோர வெட்ட வெளிகளிலும் இருளிலும் மழையிலும் பல்வேரு உணர்வு நிலைகளிலும் படம் ஓவியமாகப் பதிவு செய்திருக்கும்.

மிகயீல் லேர்மந்தவின் நம்காலத்து நாயகன், ஷொலகாவின் அவ்ர்கள் தாய்நாட்டுக்காகப் போரிட்டார்கள் போன்ற நாவல்கள் படமாக்கப் பட்டுள்ளன.ஒரு எழுத்துக் கூட மாறாமல் விலகாமல் அற்புதமான படங்களாக் இன்றும் உள்ளன.

நமது கண் சிவந்தால் மண் சிவக்கும் குருதிப்புனல் நாவலை அடிப்படையாகக் கொண்டது. நாவலின் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த விவகாரங்கள்(உண்மையோ பொய்யோ) களையப்பட்டு படம் நேரடியானதாக இது கிழ்வெண்மணி சம்பவம் என்று மக்கள் உணரக்கூடியதாக படம் இருந்தது.

ஜனநாதன், அதிகாலையின் அமைதியில் ருஷ்ய நாவலை மிக அழகாக இந்தியத் தன்மைக்கு மாற்றி பழங்குடி மக்களின் வழ்வியலையும் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசு நிறுவனங்களில் சந்திக்கும் சோதனைகளையும் பேராண்மையில் காட்டியிருப்பார்.

மேற்குறிப்பிட்ட எல்லாப் படங்களில் காணப்படும் அறிவு கூர்மையும் நேர்மையும் திரைப்பட அறிவும் பாலாவின் பரதேசியில் இல்லவே இல்லை. அதில் இருப்பதெல்லாம் எல்லா மாலைகளையும் தானே அணிந்து கொள்ளும் அற்பத்தனம், உண்மையான கதையின் நாயகர்களை இருட்டடிப்புச் செய்து எழுத்தாளனை வில்லனாக்கி கோமாளியாக்கி தனது இந்துத்துவ அரசியலை நுழைக்கும் அயோக்கியத்தனம் இவை எல்லவற்றையும் மூளையைக் கழற்றிவிட்டுச் செய்த முட்டாள்தனம்.

Edited by பாலா

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0