Sign in to follow this  
Followers 0
வர்ஷா

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்!

14 posts in this topic

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்!

சென்னை: இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் துவங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் இவ்விழாவினை தமிழக முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல்வரை தொடர்ந்து பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்தி மாலாவும் விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

முதல்வர் பேசுகையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் நான் பங்கேற்று உங்களுடன் உரையாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா கண்டுபிடிப்புக்கு முன் கலைஞர்கள், நாடகம், இசை, நாட்டியம் மூலம் மக்களை மகிழ்வித்தனர். பின்னர் காலத்தின் மாற்றத்தினால் ஊமைப்படங்கள், பேசும் படங்கள் என சினிமாவின் வளர்ச்சி மாற்றம் அடைந்தது. முன்பு நான் நடிக்கும் காலத்தில் ஒரு படம் 100 நாட்கள் ஓடினாலே அதை மிகப்பெரிய சாதனையாக கருதி விழா எடுத்து அதில் நடித்த நடிகர், நடிகையரை விருது வழங்கி கவுரவிப்பார்கள். இப்போது இந்திய சினிமாவுக்கே நூற்றாண்டு விழா என்று எண்ணும் போது அது நமக்கு மட்டுமல்லாது, இந்த உலகத்துக்கே கிடைத்த பெருமை. அப்படிப்பட்ட சினிமா துறையில் நானும் இருந்தது எனக்கு கிடைத்த பெருமை.

பிறகலைகளை விட மக்களை வெகுவாக ஈர்க்கும் திறன் சினிமா துறைக்கு உண்டு. நாகிரெட்டி, ஸ்ரீராமுலு நாயுடு, சின்னப்பதேவர், பீம்சிங், விட்டலாச்சாரியார், தியாகராஜ பாகவதர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, நாகேஷ், சாவித்திரி, மதுரம், கண்ணாம்பாள், பானுமதி, மதுரம், பத்மினி, சாவித்திரி, அஞ்சலிதேவி, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, இளையராஜா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி, டி.எம்.செளந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, லதா மங்கேஷ்கர், எல்.ஆர்.ஈஸ்வரி உள்ளிட்ட திரையுலகினரின் பங்கு மகத்தானது.

வந்தாரை வாழ வைக்கும் நாடு தமிழ்நாடு. இங்கு தமிழ்நாட்டு கலைஞர்கள் மட்டுமல்லாது பிறமாநில கலைஞர்களும் வெற்றி பெற்று முன்னணி நடிகராக ஜெயித்து வருகிறார்கள். எனது ஆட்சி காலத்திற்கு முன்னர் திரைத்துறை எப்படி செயல்பட்டது என்று உங்களுக்கே தெரியும். ஒருசிலரின் லாபத்திற்காக திரைத்துறை சிலரின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது ஆட்சி காலத்தில் திரைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. எனது ஆட்சி காலத்தில் திரையுலகிற்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. திரைத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது அரசு தொடர்ந்து செய்யும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

பின்னர் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவினை நினைவுபடுத்தும் விதமாக காளிதாஸ் தொடங்கி தற்போதைய சினிமாக்களான சூதுகவ்வும் வரை உள்ள படங்களின் தொகுப்பு அகன்ற திரையில் திரையிடப்பட்டது.

சாதனையாளர்களுக்கு விருது

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், கமல்ஹாசன், சிவக்குமார், ரஜினிகாந்த், பிரபு, இயக்குநர் மகேந்திரன், பி.வாசு, தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், ஆர்.பி.செளத்திரி, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, நடிகைகள், சரோஜாதேவி, மனோரமா, எம்.என்.ராஜம், ராஜஸ்ரீ, சாரதா, காஞ்சனா, ஜமுனா, கிருஷ்ணகுமாரி, ‌செளகார்ஜானகி, மீனா, சிம்ரன், த்ரிஷா, ஜெயசுதா, ஜெயபிரதா, ரமேஷ் பிரசாத், விஜயா புரொடக்ஷ்ன் வெங்கட்ராம் ரெட்டி, விநியோகஸ்தர் துறை சார்பாக எல்.சுரேஷ், வெளியீட்டாளர்கள் துறை சார்பில் ஜவஹர், சி.வி.ராஜேந்திரன், இசையில் முத்திரை பதித்த இளையராஜா, என்.ராமசுப்ரமணியம், பின்னணி பாடகர்கள் எல்.ஆர்.ஈஸ்வரி, ஜமுனா ராணி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, கவிஞர் புலமைப்பித்தன், வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.வர்மா, படத்தொகுப்பாளர் பாபு, அபிராமி ராமநாதன், ஸ்டில் கேமிராமேன் சங்கர்ராவ், பின்னணி குரல் கொடுத்த ‌கே.எம்.காளை, அனுராதா, லைட்மேன் சுந்தரம், ராமாராவ், பசி துரை, நடன அமைப்பாளர் சுந்தரம் சார்பாக அவரது மகன் ராஜூ சுந்தரம் உள்ளிட்ட பலருக்கு முதல்வர் ஜெயலலிதா விருது வழங்கி கவுரவித்தார்.

விழாவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக தென்னிந்திய வர்த்தக சபையின் தலைவர் கல்யாண் வரவேற்பு உரையாற்றினார்.

Share this post


Link to post
Share on other sites

சினிமா உலகினர் விழாவென்றால் மிக மகிழ்ச்சி பெறும் அவரை ஒதுக்கியது ரொம்ப பாவம். வரும் இருநூறாவது விழாவிலாவது கதாநாயகனாய் பங்கு பெற்றால் சாந்தி அடையும் அவரது மனது.

Share this post


Link to post
Share on other sites

விடுக்கப்பா விழா நல்லபடியாக நடந்த சரி

Share this post


Link to post
Share on other sites

என்ன தான் இருந்தாலும்,எங்கே கலைஞர் என்று கேட்க படுவது அவருக்கு பெருமையே.அவரை மட்டுமின்றி வேறு சில முக்கியமானவர்களையும் ஒதுக்கியது நிச்சயம் பெரிய குறை,தவறு.

Share this post


Link to post
Share on other sites

கோடிகணக்கான தொண்டர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த தலைவர் ,எம் எஸ் கே ,சிவாஜி ,என்ற பல ஜாம்பவான் உடன் பங்காற்றிய ஒரு சாதனை தலைவர் ...ஒரு நூறு காக்கைகள் எச்ச சோத்திர்காக ஒரு சொம்பு அடிபதர்காக ஒரு கூட்டதிற்கு அழைத்து கவுரிக்கபடவில்லை என்று வருத்தபடுவாரா என்ன ????????????. தினமலர் சொன்ன மாதரி இந்த காக்கா கூட்டத்தை செருப்பு விடும் இடத்தில் விட்டிருந்தால் இன்று அனைவரும் நாடு ரோட்டில் பிச்சை எடுத்திருப்பார்கள் அந்த சொம்புகள் ....அவர்களின் பொய்யான ஆசை வார்த்தைகளை நம்பி அவர்களோடு உறவடியதால் ,,, ஆட்சி போனதிற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது

Share this post


Link to post
Share on other sites

அழைத்தால் மட்டும், தாத்தா வந்து பொளந்து கட்டியிருப்பார் அட போங்கப்பா

Share this post


Link to post
Share on other sites

கலைஞரை மிக கேவல படுத்திவிட்டனர் . திணை விதைத்தவன் திணை அறுப்பான் . வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழி ( கிழமொழி ) ஞாபகம் வருகிறது

Share this post


Link to post
Share on other sites

ஆட்சியாளர் களுக்கு மட்டும் காவடி துக்கி லாபம் பார்க்கும் சினிமா உலகமும் மற்றவனை சுரண்டியே வாழும் அரசியல் உலகமும் பண்புடன் நடந்து கொள்ளும் என்று எதிர் பார்க்கலாமா ? கருணா இருந்தால் ஜெயாவை அழைத்து இருப்பாரா ??????????????. கருத்துகளை நேர்மையாக எழுதுங்கள் விஷத்தை கொட்ட வேண்டாம் ப்ளீஸ்

Share this post


Link to post
Share on other sites

ஜெயாவை விட திரையுலகத்துக்கு கருணாநிதியின் பங்கும் சாதனைகளும் அதிகம். இருந்தாலும் மாற்றாரையும் மதிக்கும் பண்பு கொண்ட கலைஞர் ஜெயாவை அழைப்பதற்கு தடையாக இருந்திருக்க மாட்டார்....

Share this post


Link to post
Share on other sites

நிச்சயமாக கருணாநிதி ஜயாவை மதித்து அழைத்திருக்கமாட்டார். ஏதாவது மூன்றாந்தர ஆட்கள் மூலம் அழைப்பு விடுப்பார். இவ்வளவு பேசுபவர்கள், சேது சமுத்திர திட்ட துவக்க விழாவில் எந்த பதவியிலும் இல்லாத சோனியா பெயரை போட்டு அழைத்தார்கள். அன்று முதல்வராக இருந்த ஜெயா பெயர் விடப்பட்டது. கருணாநிதிக்கு மனிதர்களை மதிக்கும் சுபாவம் கிடையாது அதனால் அவரை ஏன் மற்றவர்கள் மடிக்க வேண்டும்....

Share this post


Link to post
Share on other sites

கருணாவுக்கு மானாட, மயிலாட நிகழ்ச்சி இருந்தால் தான் கலந்து கொள்வார். குஷ்பூ, நமீதா,ரோஜா,ஷகிலா இருந்தால் மட்டுமே

Share this post


Link to post
Share on other sites

நடிப்பு வசனத்தை என்று நம்பி ஓட்டளிக்க ஆரம்பித்தார்களோ அன்றே பிடித்தது கேடுகாலம்......

Share this post


Link to post
Share on other sites

தமிழ்நாட்டின் சாபக்கேடு சினிமா.... உண்மைகளை எடுத்தரைத்த காலம் போய் , அநியாயங்களை நியாயப்படுத்தும் சினிமாவுக்கு விழா, அரசின் உதவியுடன். விளங்கிடும்.

Share this post


Link to post
Share on other sites

சினிமா நடிகர்,நடிகையர் இக்காலம் கூறுகிறது, அக்காலத்தில் கூத்தாடிகள் என்று கவுரமாக அழைத்தார்கள்... ஒரு வரம்புடன் தான் இருந்தார்கள். ஆனால் மனநிலை காரணமாக காண்போர் கூடி கூத்தாடிகள் கோடிசுவரர்களாக வளம் வரும் நிலை.. பல பிளாட்பார மக்களின் வருமானத்தில் கூத்தாடிகள் ப்ளைட்டில் பயணம் செய்ய, அவர்களுக்கு உதவியோர் நடைப்பயணம்...சிந்திக்கும் ஆற்றல் மாறி சீண்டும் வழியில் இளைஞர் படை பயணத்தால் சினிமா பூக்கோலம்பூண்டு வளம் வருகிறது.. நடிப்பவர்கள் உல்லாசமாக வலம்.. பார்ப்பவர்கள் பரதேசிகளாக வலம்.. சிந்தித்தால் அனைவரும் ஓரளவுக்கு மனிதர்களாக வாழலாம்... சினிமா..பலரின் வாழ்கையை சீரழித்து சிலருக்கு வாழ்வை சிறப்பாக்கியுள்ளது ... அந்த வகையில் முன்தொழில் அமைப்பின் இழுப்பின் மூலம் முதல்வர் முற்படுத்தி கலந்துள்ளார்... என்ன இருந்தாலும் சினிமா நடிப்பு மூலம் சிறகடித்து எல்லைகள் இன்றி வாழ்ந்து என்றும் செல்வியாக வாழ நடிகர்,நடிகைகள் வாழ்த்த விழா தொடங்கியதே ... சிறப்புதான்...

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0