Sign in to follow this  
Followers 0
வர்ஷா

கார்ல்சன் புதிய உலக செஸ் சாம்பியன்

1 post in this topic

பட்டத்தை பறிகொடுத்தார் ஆனந்த்: கார்ல்சன் புதிய உலக சாம்பியன்

jaya_inaguration.jpg

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10வது சுற்று டிரா ஆனது. இதன் மூலம், நார்வேயின் கார்ல்சன் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். சொந்த மண்ணில் ஆனந்த் ஏமாற்றம் அடைந்தார்.

சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. "நடப்பு சாம்பியன்' இந்தியாவின் ஆனந்த், 43, நார்வேயின் இளம் வீரர் கார்ல்சன், 22, இதில் பலப்பரீட்சை நடத்தினர். மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியின், ஒன்பது சுற்று முடிவில் கார்ல்சன் 6 புள்ளிகள், ஆனந்த் 3 புள்ளிகள் பெற்று இருந்தனர். இன்று 10வது சுற்று நடந்தது. இதில் ஆனந்த் கறுப்பு காய்களுடன் விளையாடினார். வெள்ளைக் காய்களுடன் களம் கண்ட கார்ல்சன் தனது ராஜாவுக்கு முன்னால் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தினார்.

ஆனந்த் தனது மந்திரிக்கு முன்னால் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தினார். 14வது நகர்த்தலில் கார்ல்சன் தனது குதிரையை வைத்து, ஆனந்த் மந்திரியை காலி செய்தார். இதற்கு பதிலடியாக, ஆனந்த் தனது ராணியால், கார்ல்சன் குதிரையை வெளியேற்றினார். 34வது நகர்த்தலில் கார்ல்சன் தனது ராணியை வைத்து, ஆனந்த் ராணியை வெட்டினார். பதிலடியாக, ஆனந்த் தனது குதிரையால், கார்ல்சனின் ராணியை வெளியேற்றினார். 65வது நகர்த்தலில் போட்டியை "டிரா' செய்ய இரு வீரர்களும் சம்மதித்தனர்.

இதன் மூலம், 10வது சுற்று முடிவில், கார்ல்சன் 6.5 புள்ளிகள் பெற்று உலக சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றார். ஆனந்த் 3.5 புள்ளிகள் மட்டும் பெற்றார். இதனால் மீதமுள்ள 2 சுற்று போட்டிகள் நடக்காது.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0