Sign in to follow this  
Followers 0
வர்ஷா

டி.எம்.எஸ்

13 posts in this topic

Recently+Updated2.jpg

t.m.sounthararajan.jpg

t.m.soundararajan%2B%2Bwith%2Bm.karunani

TM2(1).jpg

vizha11.jpg

vizha10.jpg

எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருக்கு மட்டுமல்லாது மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார் டி.எம். சவுந்தர்ரராஜன்.

எந்த நடிகருக்காக பாடினாரோ, அந்த நடிகரின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் டி.எம். சவுந்தர்ராஜனுக்கு மட்டுமே உண்டு என்று புகழப்பட்டவர்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமியம் என அனைத்து ரசங்களையும் தனது குரலில் வெளிப்படுத்தியவர்.

சிவாஜி நடிப்பில் ‘தூக்குத்தூக்கி’ படத்துக்கு எட்டுப் பாடல்கள் என்று முடிவானது. அப்போதைய முன்னணிப் பாடகர் திருச்சி லோகநாதனை அணுகியது அருணா பிலிம்ஸ். “ஒரு பாடலுக்கு ஐநூறு ரூபாய். எட்டும் பாடுவதற்கு நான்காயிரம்” என்றார் லோகநாதன். நேரம் போனதே தவிர, பேரம் படியவில்லை. “ரேட்டைக் குறைத்துக்கொண்டு என்னால் பாட முடியாது. உங்களுக்கு ஒரு வழி சொல்கிறேன். மதுரையிலிருந்து செளந்தரராஜன் என்கிற புதுப் பாடகர் வந்திருக்கிறார். அவரைக் கேட்டுப்பாருங்கள்” என்ற அவரது ஆலோசனை அனைவருக்கும் பிடித்துப்போனது. ஆளாளுக்கு ஒரு பக்கம் தேடி, அடுத்த நாளே தொகுளுவ மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.ஸைப் பிடித்தார்கள்.


“அறிமுகமான ‘கிருஷ்ண விஜயம்’ படத்திலேயே நான்கு பாடல்கள் பாடியவர். தமிழ் உச்சரிப்பு தெளிவாக இருக்கும். ஆடல்-பாடல் நிறைந்த நமது படத்துக்கு இவரது பின்னணிக் குரல் பொருத்தமாக அமையும்” என்று தயாரிப்பாளர்களின் காதில் நம்பிக்கையையும், டி.எம்.எஸ் நெஞ்சில் உற்சாகத்தையும் வார்த்தார் இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்.


“எட்டுப் பாடல்களையும் நீங்களே பாடுங்கள். மொத்தமாக இரண்டாயிரம் ரூபாய் சம்பளம். ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாமா?” என்றது தயாரிப்புத் தரப்பு. எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாகத் தலையாட்டினார் டி.எம்.எஸ். மதுரை பஜனை மடங்களில் பாடியது, அதற்குச் சன்மானமாக காப்பி ஓட்டலில் காராச்சேவு, பக்கோடா மற்றும் இரண்டு ரூபாய் வாங்கியது, மாதம் ஐம்பது ரூபாய் சம்பளத்தில் கோவை ராயல் டாக்கீஸ் அலுவலகத்தில் வேலை பார்த்தது, இயக்குநர் சுந்தர் ராவ் நட்கர்னி வீட்டில் எடுபிடி வேலை செய்தது, ஹெச்.எம்.வி. கிராமஃபோன் கம்பெனியில் இரண்டு பக்திப் பாடல்களைப் பாட எண்பது ரூபாய் வாங்கியது, ஒருவேளை சாப்பாட்டில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த நாட்களில் ஏ.வி.எம்.மில் கிடைத்த சூடான இட்லி, தோசை என எல்லாம் நினைவுக்கு வந்துபோயின. இனி ஏறுமுகம்தான் என்று மதுரை மீனாட்சியையும் குலதெய்வம் கள்ளழகரையும் வேண்டிக்கொண்டார்.

Share this post


Link to post
Share on other sites

vizha8.jpg

1102669_522909197781375_2063405683_o.jpg

vizha6.jpg

vizha1.jpg

rajni2.0.jpg


அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ‘பராசக்தி’யில் குரல் கொடுத்த சி.எஸ். ஜெயராமன்தான் பாட வேண்டும் என்பது படத்தின் நாயகன் சிவாஜியின் பிடிவாதமான விருப்பமாக இருந்தது. “ஜெயராம பிள்ளையைப் பாடவைக்காமல், நேற்று வந்தவரை எல்லாம்…” என்று அதிருப்தி தெரிவித்தார்.
“நமது படத்தின் நாட்டுப்புறப் பாடல்களுக்கு அவரைவிட இவரது குரல் பொருத்தமாக இருக்கும்” என்றார் ஜி. ராமநாதன். ‘மறுபடியும் காராச்சேவு, பக்கோடாதான் கதியா?’ என்று தவித்துப்போனார் டி.எம்.எஸ். “பாடுகிறேன். ஒலிப்பதிவு செய்து கேளுங்கள். பிடிக்கவில்லை என்றால் நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொன்னதை அரைகுறை மனதோடு ஒப்புக்கொண்டார் சிவாஜி.


மளமளவென்று மூன்று பாடல்களை ஒலிப்பதிவு செய்து சிவாஜிக்குப் போட்டுக்காட்டினார் ஜி.ராமநாதன். “நல்லா வந்திருக்கு. எல்லாப் பாட்டையும் நீங்களே பாடுங்க” என்ற சிவாஜியின் கரங்களை நெகிழ்வோடு பற்றிக்கொண்டார் டி.எம்.எஸ். ‘பெண்களை நம்பாதே…’, ‘ஏறாத மலைதனிலே…’ உள்ளிட்ட அத்தனை பாடல்களையும் பாடினார்.


கள்ளழகரும் மீனாட்சியும் கருணை காட்டினார்கள். `கூண்டுக்கிளி’யில் சிவாஜிக்காக டி.எம்.எஸ் பாடிய ‘கொஞ்சும் கிளியான பெண்ணை…’ பாடலை ரசித்த எம்.ஜி.ஆர். ‘மலைக்கள்ளன்’ படத்துக்குப் பரிந்துரைத்தார். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில், தஞ்சை ராமையாதாஸ் பல்லவியில், கோவை அய்யாமுத்து சரணத்தில் உருவான ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…’ என்ற பாடலால், எம்.ஜி.ஆரின் முதல் கொள்கைப் பாடலைப் பாடியவர் என்கிற பெருமை செளந்தரராஜன் தோள்களில் உட்கார்ந்துகொண்டது.

Share this post


Link to post
Share on other sites

டி.எம்.எஸ் மறைந்துவிட்டார். ‘பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே’ என்று கணீரென்ற குரலில் பாடிக்கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான குரல் காலதேவனின் கணக்கு முடிந்துபோனவுடன் தன்னுடைய உலக இருப்பை முடித்துக்கொண்டு பயணம் புறப்பட்டுவிட்டது. அவர் அதற்கு முன்னாலேயே பின்னணி பாடிவிட்டார். ‘ராதே நீ என்னைவிட்டுப் போகாதேடி’ என்று பாடியதுதான் அவருடைய முதல் பாடல் என்றெல்லாம் கணக்கு சொல்லப்பட்டாலும் அவர் மக்களிடம் அறிமுகமானதும் திரை ரசிகனின் வியப்புக்களுக்கு ஆளானதும் இன்னமும் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு மிகவும் நெருக்கமாகவும், ஒரு நான்கைந்து தலைமுறை ரசிகர்களின் முதன்மையான குரலாக விளங்கப்போவதற்கான அங்கீகாரம் பெற்றதுவும் நடிகர் திலகத்தின் தூக்குத் தூக்கி படத்தின் மூலம்தான்.

சென்ற வருடத்தில் நானும் கவிஞர் அறிவுமதியும் திண்டுக்கல் மலைப்பிரதேசங்களில் ஊடுருவிச்செல்லும் கோடைக்கானல் மலைப்பகுதிகளின் பின்புறமிருந்த மலைத்தோட்டங்களின் ஊடாக நிறைய கிராமங்களுக்குச் சென்றிருந்தோம். அழகும் இயற்கையும் பின்னிப்பிணைந்து நாகரிகத்தின் வெளிப்பூச்சுக்களும் அலங்காரங்களும் ஆடம்பரங்களும் அவ்வளவாய் குடிபுகாமல் இன்னமும் பளிங்கு போன்ற பரிசுத்தத்துடனேயே மக்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துசெல்லும் பகுதிகள் அவை. ஆடலூர், பன்றியூர், பித்தளைப்பட்டி என்றெல்லாம் நீண்ட பயணங்கள் முடித்துக்கொண்டு திண்டுக்கல்லுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது அறிவுமதி கேட்டார்.

“அமுதவன் ஒண்ணு கவனிச்சீங்களா? காலையிலிருந்து நாம எத்தனையோ மலைக்கிராமங்களுக்குப் போனோமே எல்லா இடங்களிலும் தொடர்ச்சியாக ஏதோ ஒரு ஒலிபெருக்கியில் ஏதோ ஒரு பாடல் கேட்டுக்கொண்டே இருந்தது. எல்லாமே எம்ஜிஆர் சிவாஜி காலத்துப் பாடல். எல்லாமே டிஎம்எஸ் சுசீலா பாடல். எல்லாமே விஸ்வநாதன் ராமமூர்த்தி, விஸ்வநாதன் காலத்துப் பாடல். இன்னும் இதையெல்லாம் விட்டே இவங்க வரவில்லையே. இவங்க எப்போ இளையராஜா காலத்துக்கு வந்து எப்போ ரகுமான் ஹாரிஸ் காலத்துக்கெல்லாம் வரப்போறாங்க தெரியலையே. இவங்க இன்னும் கண்ணதாசனில்தான் இருக்காங்க. எப்போ வைரமுத்து காலத்துக்கு வந்து எப்போ அறிவுமதியையும் நா.முத்துக்குமாரையும் கேட்கப்போறாங்க?” அவர் சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில்கூட டிஎம்எஸ் ‘உள்ளம் என்பது ஆமை’ பாடிக்கொண்டிருந்தார்.

இதனை ஒரு குறையாகவோ ஆதங்கமாகவோ ஆற்றாமையிலோ அறிவுமதி சொல்லவில்லை. அந்தக் காலத்துப் பாடல்களுக்கிருந்த வலிமை…அவை உருவான விதம், காலத்தைக் கடந்து நிற்கும் அவற்றின் தொன்மை….. இசையமைப்பாளர், கவிஞர், பாடகர், அந்தப் படத்தின் கதை, அந்தப் பாடலுக்கு நடித்த நடிகர்கள், இயக்கிய இயக்குநர்கள் என்று இத்தனைப்பேரின் கூட்டுமுயற்சியும் ஒரே புள்ளியில் இணைந்த அற்புதங்கள் அவை. இன்றைய பாடல்கள் இவற்றில் ஏதாவது ஒன்றில் முடமாக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரு இடம் பழுது பட்டிருக்கும். ஏதோ ஒரு புள்ளி குறைந்திருக்கும். எங்கோ ஒரு கண்ணி விடுபட்டிருக்கும். இந்தக் காரணங்களால்தான் இன்றைய பாடல்களின் வாழ்நாள் அற்பமாகப் போய்விடுகிறது. பிறக்கும்போதே பல்வேறு குறைகளுடன், அற்ப ஆயுளுடன்தான் பல பாடல்கள் இங்கே பிரசவிக்கப்படுகின்றன.

சாஸ்திர ரீதியான சம்பிரதாயமான பாடல்கள் இடம்பெற்ற பி.யூ.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் காலத்திலிருந்து திரையிசை மக்கள் இசையாக மாற ஆரம்பித்த காலகட்டத்தில் திருச்சி லோகநாதன், சிதம்பரம் ஜெயராமன், கண்டசாலா என்றிருந்த வரிசையில் டிஎம்எஸ் வருகிறார். சிவாஜி எம்ஜிஆர் என்ற இரு பெரும் இமயங்களின் ஆட்சிதான் அடுத்த இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு என்ற விதி ஏற்படுத்தப்பட்டவுடன் இருவரின் குரலாகவும் அவதாரம் எடுக்கிறார் டிஎம்எஸ். இவருக்கு முன் யார் யாரோ சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் பின்னணி பாடியிருந்தபோதிலும் “அட, இவருக்காகத்தானே தமிழ்த்திரையுலகம் காத்திருந்தது” என்பதைப்போல் வாரி அணைத்துக்கொண்டது இவரை. இவருடைய ஆட்சிக்காலம் ஆரம்பித்த அன்றிலிருந்து இன்றுவரை இவருக்கு இணையான- முழுமையான- இன்னொரு ஆண் பாடகர் தமிழில் வரவில்லை. வரவில்லை. வரப்போவதுமில்லை.

முகமது ரஃபியைப் பார்த்துத்தான் தமது பாடும் பாணியை இவர் வடிவமைத்துக்கொண்டார் என்று சொல்லப்படுவதுண்டு. ‘பாகவதரின் பாடும் பாணிதான் ஆரம்பத்தில் என்னுடையது’ என்று இவரே சொல்லியிருப்பதும் உண்டு. இங்கிருந்து கொஞ்சம் அங்கிருந்து கொஞ்சம் என்பதாக சிறந்த விஷயங்களை சில இடங்களிலிருந்து பெற்றிருக்கலாம். ஆனால் பிற்பாடு அதே முகமதுரஃபி பின்னாளில் இவரைப் பார்த்து வியந்திருக்கிறார். இவரது சில பாடல்கள் இந்தியில் படமாக்கப்பட்டபோது அவற்றைப் பாட நேர்ந்த சமயங்களில் “அடேயப்பா இந்த மாதிரி பாட என்னால் முடியாது. இந்த ஆலாபனையெல்லாம் பாடினால் நான் செத்தே போய்விடுவேன்” என்று முகமது ரஃபி சொன்ன சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

தூக்குத்தூக்கி படத்திற்காக டிஎம்எஸ்ஸை அழைத்துப் பாடவைக்க முயன்றபோது மிக அதிகமான கோபத்துடன் அதனை எதிர்த்தவர் சிவாஜி கணேசன். “எதுக்கு? சிதம்பரம் ஜெயராமன் குரல் நல்லாத்தானே போய்கிட்டிருக்கு….எதுக்காக இப்ப புது ஆளைக் கொண்டுவந்து போட்டு குழப்பம் பண்றீங்க? அதெல்லாம் வேண்டாம். சிதம்பரம் ஜெயராமனே பாடட்டும்” என்றிருக்கிறார்.

“இல்லை இந்தப் பாடல் பாடியிருக்கார். கேட்டுப்பாருங்க. திருப்தியில்லைன்னா நீங்க சொன்னபடியே செய்துறலாம்” என்று சொல்லி டிஎம்எஸ் சிவாஜிக்காகப் பாடிய பாடலைப் போட்டுக்காட்டியிருக்கிறார்கள். கேட்டிருக்கிறார். கேட்டவர் வியந்துபோய் “யார் இவர்? என்னுடைய குரலிலியே பாடின மாதிரி இருக்கு….எல்லாப்பாட்டுமே இவரை வச்சே ரிகார்ட் பண்ணிருங்க” என்று சொல்லிவிட்டாராம்.

பின்னர் லதா மங்கேஷ்கரிடம் பேசிக்கொண்டிருந்தபோது “என்னுடைய குரலுக்கு பின்னணிப் பாட டிஎம்எஸ் கிடைச்சது எனக்குக் கிடைச்ச வரம்” என்றிருக்கிறார்.

அன்றைய தினத்திலிருந்து No looking back…..சிவாஜி என்றால் டிஎம்எஸ்தான் என்றுதான் போய்க்கொண்டிருந்தது. எம்ஜிஆருக்கும் இவர்தான் என்றபோதும் ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் “டிஎம்எஸ் வேண்டாம், புதிய பாடகரை உருவாக்குங்க” என்று விஸ்வநாதனிடம் சொல்லிவிட்டார். எம்ஜிஆரைப் பற்றி டிஎம்எஸ் இலங்கை வானொலியில் அளித்த பேட்டியின் விளைவு அது என்று சொல்லப்படுகிறது.

எம்ஜிஆர் குணம் அதுதான்.

எம்ஜிஆர் அரசியலுக்கு வந்து வெற்றிபெற்று விட்டதாலும், மக்கள் மத்தியில் ஈடு இணையற்ற பெரியதொரு பிம்பம் அவருக்கு ஏற்பட்டுவிட்டதாலும் அவருடைய இம்மாதிரியான குணங்கள் யாவும் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு வருகின்றன. பல உண்மைகளை மக்கள் மத்தியில் வைக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வருவதில்லை. தேவையற்ற புனித பிம்பம் எம்ஜிஆரைச் சுற்றி நிரந்தரமாகப் போடப்பட்டிருக்கிறது.

இலங்கை வானொலிப் பேட்டியில் அவர் சிவாஜியைப் பற்றியும் அதனைத்தான் சொன்னார். அந்தப் பேட்டி மட்டுமல்ல வெளியூர்களுக்குச் சென்று நடத்தும் இன்னிசைக் கச்சேரிகளிலும் அப்படித்தான் பேசுவார் டிஎம்எஸ். “எம்ஜிஆரையும் சிவாஜியையும் கடைக்கோடி தமிழனுக்கும் கொண்டு சேர்ப்பவன் இந்த டிஎம்எஸ்தான். இந்த டிஎம்எஸ்ஸின் குரலால்தான் அவர்கள் அறியப்படுகிறார்கள். அவர்களின் முகவரியே என்னுடைய குரல்தான்.” என்பார். இன்னும் ஒருபடி மேலே சென்று “எம்ஜிஆரும் சிவாஜியும் என்னால்தான் புகழ் பெற்றார்கள்” என்பார். இந்தத் தொனியில்தான் பேசுவார். அவருக்கு வாய் நீளம் அதிகம்தான். தம்மைப்பற்றி மிக அதிகமாக அவரே பேசிக்கொள்வார் என்பதுதான் அவரிடமிருந்த ஒரே குறை. அவர் பேச்சில் எப்போதுமே இம்மாதிரியான செருக்கு தென்படும். என்னுடைய நண்பர் சொல்லுவார் “அவர் பேசுவதைக் கேட்கக்கூடாது. பாடுவதை மட்டும் கேட்கவேண்டும்”

இப்படிப்பட்ட பேச்சுக்கள் சிவாஜியை அசைத்துப் பார்ப்பதில்லை.

அவர் என்றைக்கோ அதனையெல்லாம் கடந்துவிட்டிருந்தார். சில சம்பவங்கள் சொல்லுவார்கள். சிவாஜி அன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அவருடன் நடித்துக்கொண்டிருந்த நடிகர் அசோகனும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனும் திமுகவைச் சேர்ந்த பேச்சாளர்கள். இவர்கள் அவ்வப்போது நிறைய கூட்டங்களில் பேசுவார்கள். எல்லாக் கூட்டங்களிலும் சகட்டுமேனிக்கு சிவாஜியைப் போட்டுத் தாக்குவார்கள். அவரை நாராச நடையில் கிழிகிழியென்று கிழிப்பார்கள். மறுநாள் காலையில் படப்பிடிப்புக்கு வந்து சிவாஜியின் படத்தில் அவருடன் நடிப்பார்கள். ஒருமுறை அப்படித்தான். இவர்களில் யாரோ ஒருவர் மிகவும் தரம்தாழ்ந்து சிவாஜியைப் பற்றிப் பேசிய பேச்சு அன்றைய தினசரியில் வந்துவிட்டது. நிச்சயம் இந்தப் பேச்சைப் பார்த்தால் சிவாஜி கொதித்தெழுவார் படத்திலிருந்தே அவரைத் தூக்கிவிடுவார். எப்படியும் ரீ ஷூட்தான் செய்யவேண்டியிருக்கும், என்ற பதட்டத்துடன் இருந்திருக்கிறார்கள். சிவாஜி வந்தவுடன்

கையைப் பிசைந்துகொண்டே “அவரை வேண்டுமானால் நீக்கிவிடலாம். வேண்டுமானால் ரீ ஷூட் பண்ணிக்கலாம்” என்றிருக்கின்றனர்.

“ஏம்ப்பா என்ன ஆச்சு?” என்றாராம் சிவாஜி.

“இல்லை உங்களைப் பற்றி இப்படிப் பேசி அது பத்திரிகையிலும் வந்திருக்கு”

மவுனமாக அந்தப் பத்திரிகையை வாங்கிப் பார்த்த சிவாஜி ஒரு சின்னப் புன்முறுவலுடன் “அவன் நம்மளைப் பத்தி இப்படிப் பேசியிருக்கான்னா அரசியல்ல அவனுடைய வயித்துப் பொழைப்பு நடக்கணும்ன்றதுக்காகப் பேசியிருக்கான். நம்மைப் பத்தி இப்படிப் பேசிப் பொழைக்கிறான்னா பொழைச்சிட்டுப் போறான். அதுக்காக அவனுடைய மெயின் வருமானத்துல எதுக்குக் கையை வைக்கணும்? அவன் வயித்துல எதுக்கு அடிக்கணும்? அவனே இருந்துட்டுப் போறான் விட்ருங்க” என்று சொல்லிவிட்டாராம்.

எம்ஜிஆரிடம் இதெல்லாம் நடக்காது. அவரைப் பற்றிச் சின்னதாக கமெண்ட் அடித்தவன்கூட அதற்கான விலையைக் கொடுத்தாகவேண்டும். அவர் படத்திலிருந்து நீக்குவது என்பது மட்டுமல்ல; திரைப்படத்துறையிலிருந்தே காலிசெய்துவிட்டுத்தான் மறுவேலைப் பார்ப்பார்.

கண்ணதாசனுக்கும் அவருக்குமான கருத்துவேறுபாடுகள் வந்தபோது கண்ணதாசனை ஒழித்துக்கட்ட அவர் செய்த வேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. கடைசிவரையில் அவரால் அது முடியாமலேயே போய்விட்டது. கண்ணதாசன் இல்லாமல்தான் எம்ஜிஆரின் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் வந்துள்ளன. இவர்கள் கருத்துவேறுபாட்டினால் முழுமையாக லாபம் பார்த்தவர் வாலிதான்.

எம்ஜிஆரின் அரசியல், திரைப்படம், மற்றும் பொதுவாழ்க்கையில் அவர் முழுமையாகத் தோல்வியடைந்தது ‘கண்ணதாசனை ஒழித்துக்கட்டும்’ விஷயத்தில் மட்டும்தான். கடைசியில் அவரை “வேறுவழியாக சமாதானப்படுத்தி’ தம்முடன் சேர்த்துக்கொள்ளும் விதமாகத்தான் அவரைத் தேடிச்சென்று அவருக்கு அரசவைக்கவிஞர் பதவி வழங்கி சமாதான உடன்படிக்கை போடப்பட்டது.

இதே கண்ணதாசனுடன் சிவாஜிக்கும் பலமுறை கருத்துவேறுபாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆரம்ப காலத்தில் மட்டும் ஒருசில படங்களுக்கு கண்ணதாசன் வேண்டாம் என்றிருந்தார் சிவாஜி.

ஒருமுறை சமாதானம் ஆனபிறகு அவ்வளவுதான். ‘கவிஞர்தான், கண்ணதாசன்தான், செட்டியார்தான்’! “எனக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடு இருப்பது நிசம்தான். ஆனா அது வேறு; தொழில் வேறு. இந்தத் தொழில்ல அவருக்கு இணையா இங்கே யாருமே கிடையாது. நான் பேசலைன்னா என்ன? என்னுடைய படத்துக்குக் கவிஞர்தான் பாட்டு எழுதணும். வேறு ஏதேதோ காரணங்களால் அவர் இல்லைன்னாலோ கிடைக்கலைன்னாலோ வேணும்னா நீங்க வேற யாரையாவது வெச்சு பாட்டு எழுதிக்கங்க” என்பார் சிவாஜி.

Share this post


Link to post
Share on other sites

TM சவுந்தர் ராஜன் நினைவுகளை  இதை விட எளிமையாக அருமையாக தருவது கண்டினம்

 

வர்ஷா வாழ்க நீடூழி

Share this post


Link to post
Share on other sites

welcome back wakeup sir....

Share this post


Link to post
Share on other sites

நாம் கடைசியாக கருத்து பரிமாறிய நாட்களில் உங்களுக்கு திருமணம் ஆன சமயம் 

இப்ப எத்தனை மழலைகள்

Share this post


Link to post
Share on other sites

இப்ப இன்றும் என்னுடன் பக்கத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் பாடகர் என் மதிப்புக்குறிய டி.எம்.எஸ் ஐயாவின் பாடல்கள் தான். கிட்டத்தட்ட என்னிடம் அவரின் எல்லா பாடல்களும் உண்டு. நான் சின்ன வயதில் 9 வயதில் பாடசாலை வகுப்பு கட் அடித்து எம்.ஜி.ஆர் முதல் சோ பார்க்கும், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். எம்.ஜி.ஆரின் படம் பார்க்கபோவதானால் ஒரு தெருச்சண்டியன் போல இருக்கவேஏன்டூம் என்பதற்க்காக அந்தக்கால புகழ் புருஸ்லீயின் படங்களை பார்த்து விட்டு கராட்டே பழகி பள்ளிமாணவர்களுக்குள் நான் பெரும் சண்டியனாக பெயர் எடுத்துக்கொண்டு, என் அப்பரின் பணத்தில் ஒரு குட்டி ராஜாவாகவே ஒரு திடுக்கிடும் வாழ்க்கையினை, தியேட்டர்களில நாலு பேருக்கு, இன்னாரின் மகன் தான் இவன் படம் கள்ளமாக பார்க்க வந்திருக்கிறான் என்று தெரியாத வகையில் வீட்டுக்குத்தெரியாமல், என் சிறுவயது நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் வகுத்து ஒரு சின்ன தாதா போல, எம்.ஜி.ஆர் படம் பார்த்தவன். ஆனால் பாருங்கள் அன்று என்னை எம்.ஜி.ஆருடன் இணைத்தவர் டி.எம்.எஸ் என்றால் மிகையாகாது. நான் இலங்கையில் 22 ஆம் வயதில் மேடையில் டி.எம்.எஸ் குரலில், அன்றைய முன்ண்னி பாடகியாக இருந்த மட்டக்களப்பு மாநகர் தந்த நிலாமதி பிச்சையப்பாவுடன் கொழும்பு மேடைகலில் குறிப்பாக குழும்பு கதிரேசன் கோலில், அப்ஸ்சராசின் இசையமைப்பில் நான் அனேகமான எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் வந்த டி.எம்.எஸ்ஸின் பாடல்களை பாடியிருக்கிறேன். குறிப்பாக...புதிய வானம் புதிய பூமி...யாருக்காக இது யாருக்காக, எங்கே நிம்மதி...நாளை நமதே, ஒளிமயமான எதிர்காலம், செல்லக்கிளிகளாம் பள்ளியிலே, நல்லதுக்கண்னே கனவு கழிந்தது நன்றியுணக்கு..பச்சைக்கிளி முத்துச்சரம்....இப்படி எழுதிக்கொன்டே போக‌லாம்.

மற்றும் வருஷா சொல்லாத ஒரு பெரும் கதையுமொன்ரு இங்கேயுண்டு எம்.ஜி.ஆரினைப்பற்றி. எம்.ஜி.ஆர் இளம் நடிககைகளுடன் சல்லாபிப்பதில் சக்கரவர்த்தி.இதனாலேயே இவர் அடிக்கடி தன் நடிகைகளை மாற்றிக்கொள்ளுவார்.நாளை நம‌தேயில் லதாவினை அரைகட்டை காட்சட்டைபோட்டு படம் பிடித்தார். இதயக்கனியில் ராதா சுலோசனாவினை என்ன பாடு படுத்தினார். மஞ்சுளாவினை தன் ரிக்ஸாக்காரனில் தோல் உரித்துக்காட்டினார். வர்ஷா சொன்ன இந்தக்குணங்களினாலேயே இவர் மு.கவுடன் முரண்பாடுபட்டிருக்கலாம்.காரனம் மு.க வும் இதில் மன்னர். டி.எம்.எஸ் ஒரு தடவை தன் மிகப்பெரிய வாயினூடு கொழும்பில் இப்படிச்சொன்னார் டி.எம்.எஸ்..தன் குரலுக்காகவே எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் வெற்றி விழாக்கண்டன என்று.அதுவும் ஒரு காரனமாக இருந்திருக்கலாம். காரணம் நாம் இப்போதும் அவர் பாடல்களை விரும்பிக்கேட்பதால், அப்போதும் மிகவும் ஆவேசமாக இருந்திருக்கிறோம் என்பது நிதர்சனம். ஆனாலும் சிவாஜியின் முகச்சாயலில், அல்லது எம்.ஜி.ஆரின் முகச்சாயலில் டி.எம்.எஸ்சின் பாடல்களை நாம் நினைவு கூர்ந்த படங்கழும் இருந்திருக்கின்றன.உதாரணசமாக பாபு படம் உலகம் சுர்ரும் வாலிபன், வசந்த மாளிகை சொர்க்கம்,ராஜ ராஜ சோழன்..இதயக்கனி, நினைத்ததை முடிப்பவன், நல்ல நேரம்...இப்படி...அதேபோல டி.எம்.எஸ்சுக்காக எங்கே நிம்மதி பாடல்...இரன்டு மனம் வேண்டும் ( இங்கே சிவாஜியும் தன் நடிப்பால் அசத்தியுள்ளார்)..அம்மம்மா தமியென்ரு நம்பி, சோதனைமேல் சோதனை...தேவனே என்னைப்பாருங்கள்...

ஆகவே கொழும்பில் முன்னனியில் இருக்கும் நாங்கள் ஒரு பாட்டு முடிந்த கையுடன் சத்தம்போட்டு, ஐயா, சிவாஜியின் அந்தப்பாட்டைப்பாடுங்கள், எம்.ஜி.ஆரின் இந்தப்பாட்டைப்பாடுங்கள் என்று குரல்கொடுப்போம்.

ஏன் எமக்கு முன்னால் இருக்கும் கொழும்பு வாழ் முஸ்லீம் சற‌க்கட்டு சண்டியன்கள், இன்னும் ஒரு படிமேலே சென்று..ஜோவ் இந்தாள் எம்.ஜி.ஆர், சிவாஜி மாதிரியே பாடுரார் யோய் என்று கத்துவான்.அப்ப‌டி க‌திக‌ல‌ங்க‌ வ‌ந்த‌வ‌ர் டி.எம்.எஸ் அதுவும் ....அவ‌ர் ஒரு த‌ட‌வை சொன்னார்...இந்த‌ டி.எம்.எஸ்ச்சுக்கு வ‌ய‌து வ‌ந்துவிட்ட‌து எனி இவ‌ரால் பாட‌மாட்டார்க‌ள் என்கிறார்க‌ள். ஆனால் அவ‌ர்க‌ள் சொவ‌தையெல்லாம் மீறி இந்த‌ டி.எம்.எஸ் மேலே எழுmpuவான். த‌ம்பி..இந்த‌ ஒருவ‌ர் meethu ஒருவர் சாய்ந்து மியூசிக்கினைப்போடுங்கள் என்று சொல்லிவிட்டு, சுசீலா அம்மாவுடன் எதோ சில்மிசங்களைக்காட்டிவிட்டு ...பாட‌த்தொட‌ங்கினார் பாருங்க‌ள்...ர‌சிக‌ர்க‌ளின் க‌ர‌கோச‌ம் ம‌ண்ட‌ப‌த்தினை அதிர‌வைத்துக்கொண்டே இருந்த‌து.

Edited by kiri

Share this post


Link to post
Share on other sites

இன்று பார்த்தீர்கள் என்றால்....சிவாஜி, எம்.ஜி.ஆரை விட...டி.எம்.ஏஸ்ஸுக்கென்றே பல இணயத்தளங்களில் அவரின் குரலில் உருவான பாடல்கள் என்று வரிசைப்படுத்தி வெப்சைட் இறக்கிவிடப்பட்டுள்ளது. பாட்டை கேட்க்கும் போது அடேய் இது இவர் என்று சொல்லுமளவு....டி.எம்.எஸ்ஸே கடைசிவரை எம்முடன் வாழப்ப்போகின்றார். என்னிடம் ஆயிரத்துக்கு மேலான பழைய படங்கள் உண்டு. ஆனால் நேரம் கிடைப்பதில்லை பார்ப்பதற்க்கு. ஆனால் நாள் தோறும் பாட்டுகள் கேட்பேன். சோ...பாடகரும் அதன் பின் பாடல் வரிகளைத்தந்த பாடலாசிரியர், இவையெல்லாத்தையும் தந்த மெல்லிசை மன்னர்களை நாம் என்றுமே நினைவு கூறுகின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

"நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், புது மகாராணி உனைக்காண ஓடோடு வந்தேன் "- ஜெய்சங்கருக்காக வல்லவனுக்கு வல்லவன் இவர் பாடிய இனிமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். 

Share this post


Link to post
Share on other sites

"நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன், புது மகாராணி உனைக்காண ஓடோடு வந்தேன் "- ஜெய்சங்கருக்காக வல்லவனுக்கு வல்லவன் இவர் பாடிய இனிமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். 

 

அம்மாடி, பாப்பாவிற்கு ரொம்ப வயசு கம்மி போல் இருக்கு.  நான் இளைஞனாக (படு நோஞ்சனாக) இருக்கும் போது வந்த பாட்டாச்சே இது.

Share this post


Link to post
Share on other sites

நாம் கடைசியாக கருத்து பரிமாறிய நாட்களில் உங்களுக்கு திருமணம் ஆன சமயம் 

இப்ப எத்தனை மழலைகள்

ஒன்றே ஒன்று. பேஸ்புக்குல போட்டோ போடுறாரு வேக்கப் சார்...

Share this post


Link to post
Share on other sites

நாம் கடைசியாக கருத்து பரிமாறிய நாட்களில் உங்களுக்கு திருமணம் ஆன சமயம் 

இப்ப எத்தனை மழலைகள்

yes Sir...

onne onnu kanne kannu!!!

Share this post


Link to post
Share on other sites

ஒன்றே ஒன்று. பேஸ்புக்குல போட்டோ போடுறாரு வேக்கப் சார்...

Thanks sir...

Wakeup sir.. please add me in ur fb ...thanks!

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0