Sign in to follow this  
Followers 0
வர்ஷா

ஸ்ரீ மஹா சிவராத்திரி 27.02.2014

96 posts in this topic

சிவராத்திரி அன்று வேத சார சிவ ஸ்தோத்ரத்தை

சிவ சந்நிதியில் 5 முறை அதன் பொருள் உணர்ந்து ஒருமனதோடு தியானத்தில் ஆழ்ந்து பாராயணம் செய்வது மிக விசேஷமானதாகவும், சிவபெருமானின் கிருபா கடாக்ஷத்தை அள்ளித்தரும் அட்சய பாத்திரம் என்றும் வட இந்தியாவில் நம்பப்படுகிறது.

|| வேத³ஸார ஸி²வ ஸ்தோத்ரம்‌ ||

பஸூ²னாம்ʼ பதிம்ʼ பாபனாஸ²ம்ʼ பரேஸ²ம்ʼ

க³ஜேந்த்³ரஸ்ய க்ருʼத்திம்ʼ வஸானம்ʼ வரேண்யம்‌ |

ஜடாஜூடமத்⁴யே ஸ்பு²ரத்³கா³ங்க³வாரிம்ʼ

மஹாதே³வமேகம்ʼ ஸ்மராமி ஸ்மராரிம்‌ || 1 ||

(அனைத்து தெய்வங்களுக்கும் மேலான மஹாதேவா, 'பசு' என்று அறியப்படும் அனைத்து ஆத்மாக்களுக்கும் அதிபதியான ஆத்மநாதா, அனைத்துயிரினங்களின் பாபங்களை எல்லாம் நாசம் செய்யும் பாபவிநாசா, முதன்மையான பிரபுவே, கஜேந்திரன் என்னும் யானையின் தோலை ஆடையாகத் தரித்தவரே (கஜசம்ஹாரமூர்த்தியே), அடர்ந்து வளர்ந்து மகுடம் போல் தங்கள் தலைமேல் அமைந்த ஜடாமுடியில் பிரவகித்து ஓடும் கங்கையைக் கொண்டவரே, காமதேவனின் பாணத்தை வென்றவரே, தங்களை மானஸீகமாக வணங்குகிறேன்.)

மஹேஸ²ம்ʼ ஸுரேஸ²ம்ʼ ஸுராராதினாஸ²ம்ʼ

விபு⁴ம்ʼ விஸ்²வனாத²ம்ʼ விபூ⁴த்யங்க³பூ⁴ஷம்‌|

விரூபாக்ஷமிந்த்³வர்கவஹ்னித்ரினேத்ரம்ʼ

ஸதா³னந்த³மீடே³ ப்ரபு⁴ம்ʼ பஞ்சவக்த்ரம்‌|| 2||

(தேவர்களுக்கெல்லாம் ஈசனான மஹேசனே!, தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழிப்பவரே!, அனைத்துயிரினங்களுக்கும் தலைவரே!(விபுவே), பரந்த பிரபஞ்ச வெளியெங்கும் எதிலும் வியாபித்திருக்கும் விஸ்வநாதா!, திருமேனியெங்கும் திருநீறு அணிந்தருளுபவரே!, சந்திரன், சூர்யன் மற்றும் அக்னி சொரூபமான மூன்று த்ரிநேத்ரங்களை (கண்கள்) உடையவரே!, எப்பொழுதும் தன்னை மறந்து மோன நிலையான ஆனந்த லயத்தில் ஆழ்ந்திருப்பவரே, சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஈசானம் என்னும் திருநாமங்களை உடைய ஐந்து திருமுகங்களைக் கொண்ட பிரபுவே, தங்களை வணங்குகிறேன்.)

கி³ரீஸ²ம்ʼ க³ணேஸ²ம்ʼ க³லே நீலவர்ணம்ʼ

க³வேந்த்³ராதி⁴ரூட⁴ம்ʼ கு³ணாதீதரூபம்‌|

ப⁴வம்ʼ பா⁴ஸ்வரம்ʼ ப⁴ஸ்மனா பூ⁴ஷிதாங்க³ம்ʼ

ப⁴வானீகலத்ரம்ʼ ப⁴ஜே பஞ்சவக்த்ரம்‌|| 3||

(பர்வதங்களின் (மலைகளின்) தலைவனான பர்வதராஜனே, திருக்கைலாயத்தின் கணங்களுக்கு அதிபதியான கணநாதா, தேவர்களைக் காக்கவென பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த, வாசுகி என்னும் நாகத்தின் ஆலகால‌ விஷத்தை உலகைக் காக்கும் பொருட்டு நீ அருந்தியவுடன், தேவி பார்வதி தன் திருக்கரத்தை வைத்து, அந்த விஷத்தை உனது திருக்கழுத்திலேயே நிலைபெற செய்ததால் கழுத்து நீல நிறமாக உருமாற நீலகண்டன் எனும் நாமகரணம் பெற்றவரே, ரிஷபத்தை வாகனமாக கொண்டவரே,சத்வ, ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட உருவத்தை கொண்டவரே (நிர்க்குணமான பரம்பொருளே), அனைத்திற்கும் மூலமான ஆதிநாதா, திருநீறால் அலங்கரிக்கப்பட்ட அங்கங்களை உடையவரே, தேவி பவானியை அர்த்தாங்கினியாகக் (தன்னில் பாதியாக) கொண்டவரே, ஐந்து திருமுகங்களை உடைய நமசிவாய, தங்களை வணங்குகிறேன்.)

ஸி²வாகாந்த ஸ²ம்போ⁴ ஸ²ஸா²ங்கார்த⁴மௌலே

மஹேஸா²ன ஸூ²லிஞ்ஜடாஜூடதா⁴ரின்‌ |

த்வமேகோ ஜக³த்³வ்யாபகோ விஸ்²வரூப:

ப்ரஸீத³ ப்ரஸீத³ ப்ரபோ⁴ பூர்ணரூப || 4 ||

(பார்வதி தேவியின் மணாளனே!, சம்போ சதாசிவா!, தலையில் பிறைச்சந்திரனை அணிந்தவரே, மகிமை வாய்ந்த ஈசானனே(மஹேசா), ஜடாமுடியுடன் திருக்கரத்தில் திரிசூலத்தை ஏந்தியவரே, எப்பொழுதும் தனிமையில் தியானத்தில் அமர்ந்திருந்தாலும், எங்கும், எதிலும் வியாபித்திருப்பவரே, பூர்ணமான பிரபுவே, தாங்களே எழுந்தருளி (எங்களுக்கு) அருளவேண்டும்.)

பராத்மானமேகம்ʼ ஜக³த்³பீ³ஜமாத்³யம்ʼ

நிரீஹம்ʼ நிராகாரமோங்காரவேத்³யம்‌ |

யதோ ஜாயதே பால்யதே யேன விஸ்²வம்ʼ

தமீஸ²ம்ʼ ப⁴ஜே லீயதே யத்ர விஸ்²வம்‌ || 5 ||

(அனைத்திற்கும் மேலான பரம்பொருளே, பிரபஞ்சத்தின் முதல் ஆதாரமே, ஆசை எனும் மாயையிலிருந்து விடுபட்டவர் என்றதால் ஈசன் எனும் திருநாமம் கொண்டவரே, உருவமில்லாதவரே, ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் தியானத்தின் மூலமாக அறியத் தக்கவரே(பிரணவப்பொருளே), இப்பிரபஞ்சமானது தங்கள் சித்தப்படி படைக்கப்படுகிறது, தங்களால் காக்கப்பட்டு திரும்பவும் தங்கள் சித்தப்படி தங்களிடமே லயமடைகிறது.)

ந பூ⁴மிர்னம்ʼ சாபோ ந வஹ்னிர்ன வாயு-

ந சாகாஸ²மாஸ்தே ந தந்த்³ரா ந நித்³ரா |

ந சோஷ்ணம்ʼ ந ஸீ²தம்ʼ ந தே³ஸோ² ந வேஷோ

ந யஸ்யாஸ்தி மூர்திஸ்த்ரிமூர்திம்ʼ தமீடே³ || 6 ||

(நிலம், நீர், அக்னி, வாயு, ஆகாயம் என்ற பஞ்சபூதத்திற்கு அப்பாற்பட்டவரே, தாங்கள் செயலும் அல்ல சோம்பலும் அல்ல, வெப்பமும் அல்ல தண்மையும் அல்ல, இடமும் அல்ல கற்பனையும் அல்ல, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்று மும்மூர்த்திகளாக வடிவெடுத்தாலும் உண்மையில் ஒரு வடிவமும் இல்லாத பரம்பொருளே தாங்கள். அத்தகைய மகிமை வாய்ந்த ஈசனான தங்களை வணங்குகிறேன்.)

அஜம்ʼ ஸா²ஸ்²வதம்ʼ காரணம்ʼ காரணானாம்ʼ

ஸி²வம்ʼ கேவலம்ʼ பா⁴ஸகம்ʼ பா⁴ஸகானாம்‌ |

துரீயம்ʼ தம:பாரமாத்³யந்தஹீனம்ʼ

ப்ரபத்³யே பரம்ʼ பாவனம்ʼ த்³வைதஹீனம்‌ || 7 ||

(தேவர்களில் உன்னதமானவரான சிவனிடம் புகலிடம் தேடித் தஞ்சம் அடைகிறேன். அவர் அழிவற்றவர், நிலையானவர், எல்லா காரண காரியங்களுக்கும் காரணமானவர், இணையில்லாதவர், ஒளிக்கெல்லாம் ஒளியான‌ ஞான ஒளியானவர், விழிப்பு, கனவு மற்றும் ஆழ் உறக்கம் எனும் மூன்று நிலைகளையும் கடந்து நின்றவர். அறியாமை என்னும் இருளுக்கும் அப்பால் இருப்பவர், ஆதியும், அந்தமும் இல்லாதவர், பாவனமான‌ நிர்குணமானவர், இரு வேறு நிலைகளைக் கடந்த ஒரே பரம்பொருளானவர்(த்வைத ஹீனம்) ,அவரை வணங்குகிறேன்.)

நமஸ்தே நமஸ்தே விபோ⁴ விஸ்²வமூர்தே

நமஸ்தே நமஸ்தே சிதா³னந்த³மூர்தே |

நமஸ்தே நமஸ்தே தபோயோக³க³ம்ய

நமஸ்தே நமஸ்தே ஸ்²ருதிஜ்ஞானக³ம்ய || 8 ||

(இப்பிரபஞ்சமே உருவாக வடிவெடுத்தவருக்கு நமஸ்காரம், நமஸ்காரம், விழிப்பு நிலையில் ஆனந்த லயமே முழு உருவாக வடிவெடுத்தவருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்; தவம் மற்றும் தியானத்தினால் அறியத் தக்கவருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்; வேத நூல்களில் வகுத்துள்ள அறிவுப் பாதையின் மூலமாக அறிய முடிந்தவருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.)

ப்ரபோ⁴ ஸூ²லபாணே விபோ⁴ விஸ்²வனாத²

மஹாதே³வ ஸ²ம்போ⁴ மஹேஸ² த்ரினேத்ர |

ஸி²வாகாந்த ஸா²ந்த ஸ்மராரே புராரே

த்வத³ன்யோ வரேண்யோ ந மான்யோ ந க³ண்ய: || 9 ||

(ஹே பிரபு ! திரிசூலத்தை திருக்கரங்களில் ஏந்தியவரே, பிரபஞ்சத்தின் அதிபதியான விஸ்வநாதா, மஹாதேவரே, நன்மையின் ஆதாரமே, த்ரிநேத்ரங்களை (முக்கண்கள்) உடைய உன்னதமான பகவானே, பார்வதி மணாளா, அமைதியே வடிவானவரே, காமனையும் திரிபுரங்களையும் எரித்தவரே, அசுரர்களின் பகைவரே, ஈடு இணையற்றவரே, தாங்களே பக்தர்களின் நாடுதலுக்கும், போற்றுதலுக்கும், புகலுக்கும்(சரணடைதலுக்கும்) சிறந்தவர்.)

ஸ²ம்போ⁴ மஹேஸ² கருணாமய ஸூ²லபாணே

கௌ³ரீபதே பஸு²பதே பஸு²பாஸ²னாஸி²ன்‌ |

காஸீ²பதே கருணயா ஜக³தே³ததே³க-

த்வம்ʼஹம்ʼஸி பாஸி வித³தா⁴ஸி மஹேஸ்²வரோ(அ)ஸி || 10 ||

நன்மையின் வடிவான சம்போ மஹாதேவா, திரிசூலத்தை கரங்களில் ஏந்தி இருந்தாலும் கருணையே வடிவானவரே (கருணாமய சூலபாணே), தேவி கெளரியின் பதியானவரே (கௌரி பதே), அனைத்து ஆத்மாவிற்கும் இறைவனே, பந்தம், பாசம் என்னும் தளைகளிலிருந்து ஆத்மாக்களை விடுவிப்பவரே (பசுபாசநாசின்), வாரணாசி என்று அழைக்கப்படும் காசியின் தலைவனே (காசிபதே), இவ்வுலகமே தங்கள் திருவிளையாடல் அன்றோ...! தங்களின் அளவில்லாத அபரிமிதமான பெருங்கருணை, இப்பிரபஞ்சத்தை படைத்து, காத்து பின்னர் மீண்டும் தங்களில் இணைத்துக்கொள்கிறது.)

த்வத்தோ ஜக³த்³ப⁴வதி தே³வ ப⁴வ ஸ்மராரே

த்வய்யேவ திஷ்ட²தி ஜக³ன்ம்ருʼட³ விஸ்²வனாத² |

த்வய்யேவ க³ச்ச²தி லயம்ʼ ஜக³தே³ததீ³ஸ²

லிங்கா³த்மகே ஹர சராசரவிஸ்²வரூபின்‌ || 11 ||

(ஹே பிரபு ! அனைத்திற்கும் மூலாதாரமே, காமனை எரித்தவரே, ஜகதீசா, கருணை வடிவினனான கருணாகரனே, பாபங்களை அழிப்பவரே (பாபவிநாசா), இப்பிரபஞ்சம் தங்களிலிருந்தே பிறந்து, நிலைபெற்று, பின்னர் தங்களில் லயமாகிறது. பிரபஞ்சத்தின் இருக்கும் அசையும் மற்றும் அசையா வஸ்துகளின் சங்கமமாக லிங்க உருவில் வடிவெடுத்தவரே தங்களை வணங்குகிறேன்.)

| இதி ஸ்ரீமத்பரமஹம்ʼஸபரிவ்ராஜகாசார்யஸ்ய

ஸ்ரீகோ³விந்த³ப⁴க³வத்பூஜ்யபாத³ஸி²ஷ்யஸ்ய

ஸ்ரீமச்ச²ங்கரப⁴க³வத: க்ருʼதௌ

வேத³ஸாரஸி²வஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் |

Share this post


Link to post
Share on other sites

ரிஷி மார்க்கண்டேயர் அருளிய மஹா மிருத்யுஞ்சய ஸ்தோத்ரம்

ஸ்ரீ மஹா மிருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்

(இது மார்க்கண்டேயரால் இயற்றப்பட்டது. யமபயம் நீங்கும். துர்ஸ்வப்னம் பலிக்காது. எதிரிகள் நாசமடைவார்கள். குரு மறைவுஸ்தானத்திலிருந்து குரு தசை, குரு புக்தி மோசமாயிருப்பவர்கள் தினமும் இதைப் படிப்பது நல்லது.)

ஸ்ரீ கணேசாய நம: ஓம் அஸ்ய ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ர மந்த்ரஸ்ய ஸ்ரீ மார்கண்டேய ருஷி: | அனுஷ்டுப் சந்த: | ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜயோ தேவதா || கௌரீ சக்தி: | மம ஸர்வாரிஷ்ட ஸமஸ்த ம்ருத்யு ஸாந்த்யர்த்தம் ஸகலைச்வர்ய ப்ராப்த்யர்த்தம் ஜபே விநியோக: | அத த்யானம் ||

1. சந்த்ரார் காக்நி விலோசனம் ஸ்மிதமுகம் பத்மத் வயாந்த ஸ்திதம்

முத்ராபாஸ்ம்ருகாக்ஷ ஸூத்ர விலஸத் பாணிம் ஹிமாம் ஸூப்ரபம்

கோடீந்து ப்ரகலத் ஸூதாப்லுததனும் ஹாராதி பூஷோஜ்வலம்

காந்தம் விஸ்வ விமோஹனம் பஸூபதிம் ம்ருத்யுஞ்ஜயம் பாவயேத்

(சந்திரன், சூரியன், அக்னி இவர்களை விழிகளாகக் கொண்டவனும், மந்தகாசமான வதனம் உடையவனும், இரண்டு தாமரை மலர்களில் அமர்ந்தவனும், சின்முத்திரை, பாசம், மான், ருத்ராட்ச மாலை இவைகளால் பிரகாசிக்கின்ற கைகளை உடையவனும், சந்திரனைப் போன்ற ஒளி படைத்தவனும், கோடி சந்திர மண்டலங்களிலிருந்து பெருகுகின்ற அமிர்த தாரைகளால் நனைந்திருப்பவனும், முத்தாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், அழகனும், உலகங்களை மோகிக்கஸ் செய்பவனும், பசுபதியும், காலனை ஜெயித்தவனுமான பரமசிவனைத் தியானிக்க வேண்டும்.)

2. ஓம் ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்ட உமாபதிம்

நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

(பாபம் செய்தவர்களுக்கு துக்கத்தைக் கொடுப்பவனும், அஞ்ஞானத்தை அழிப்பவனும், அழிவற்றவனும், கருநீலமான கழுத்தை உடையவனும், உமா தேவியின் மணாளனுமான மகாதேவனை சாஷ்டாங்கமாய் நமஸ்கரிக்கின்றேன். எங்களை ம்ருத்யு என்ன செய்ய முடியும்? )

3. காலகண்டம் கால மூர்த்திம் காலஜ்ஞம் கால நாசனம்

நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

(நஞ்சை கழுத்தில் வைத்திருப்பவனும், கால ரூபியும், காலத்தை உணர்த்துபவனும், யமனை சம்கரித்தவனுமான தேவ தேவனை நமஸ்கரிக்கின்றேன். எங்களை ம்ருத்யு என்ன செய்ய முடியும்? )

4. நீலகண்ட விரூபாக்ஷம் நிர்மலம் விமல ப்ரபம்

நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

(நீலமான கழுத்தை உடையவனும், மூன்று கண்களைக் கொண்டவனும், நிர்மலனும், சுத்தமான காந்தி உடையவனுமான தேவனை சிரசு பூமியில் பட நமஸ்கரிக்கின்றேன். எங்களை ம்ருத்யு என்ன செய்ய முடியும்.? )

5. வாமதேவம் மகாதேவம் லோகநாதம் ஜகத்குரும்

நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

(வாமதேவனும் மகாதேவனும் உலகங்களை ரட்சிப்பவனும், எல்லா உலகங்களுக்கும் குருவுமான தேவனை சாஷ்டாங்கமாய் நமஸ்கரிக்கின்றேன். எங்களை யமன் என்ன செய்ய முடியும். ? )

6. தேவ தேவம் ஜகன்னாதம் தேவேஸம் வ்ருஷபத்வஜம்

நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

(தேவர்களுக்கெல்லாம் தெய்வமும், ஜகங்களில் தலைவனும், தேவர்களால் பூஜிக்கப்படுபவனும், விருஷக் கொடி உடையவனுமான ஈசனைத் தலையால் நமஸ்கரிக்கின்றேன். எங்களைக் காலன் என்ன செய்ய முடியும் ? )

7. கங்காதரம் மஹாதேவம் ஸர்வாபரண பூஷிதம்

நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

(சிரசில் கங்கையைத் தாங்கியவனும், மகாதேவனும், சகலவிதமான ஆபரணங்களையும் அணிந்து ஜ்வலிப்பவனும் (பார்வதி, மீனாட்சி திருமண சமயங்களில்) ஆன தேவர் தலைவனை நமஸ்கரிக்கும் எங்களை ம்ருத்யுவால் என்ன செய்ய முடியும் ? )

8. அநாத: பரமானந்தம் கைவல்ய பததாயினம்

நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

(காலங்களுக்கு அப்பாற்பட்ட பரமானந்த வடிவமும், மோட்சத்தைத் தரக்கூடியவருமான பரமேஸ்வரனை நமஸ்கரிக்கும் எங்களை ம்ருத்யுவால் என்ன செய்ய முடியும்)

9. ஸ்வர்கா பவர்கதாதாரம் ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த காரிணம்

நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

(சொர்க்க வாசத்தையும், முக்தியையும் கொடுக்கின்றவரும், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்கின்றவருமான தேவாதி தேவனைத் தஞ்சமெனக் கொண்டவர்களை ம்ருத்யுவால் என்ன செய்ய முடியும்.? )

10. உத்பத்தி ஸ்திதி ஸ்ம்ஹார கர்த்தா ரஞ்சேஸ்வரம் குரும்

நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ ம்ருத்யு: கரிஷ்யதி

(பிறப்பு, வளர்ப்பு, மரணம் ஆகியவற்றை நடத்துகின்றவனும், ஐச்வர்யத்தை உடையவரும், குருவான தட்சிணாமூர்த்தியானவனுமான ஈஸ்வரனைப் பணியும் எங்களை ம்ருத்யுவால் என்ன செய்ய முடியும்.? )

11. மார்கண்டேய க்ருதம் ஸ்தோத்ரம்ய: படேத் ஸிவ ஸந் நிதௌ

தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி நாக்னி ஸௌரபயம் க்வசித்

(மார்கண்டேயரால் செய்யப்பட்ட இந்த ஸ்லோகத்தை சிவசன்னதியில் ஏகாக்ர சிந்தையுடன் படிக்கிறவர் குடும்பத்தில் அகால மரணம் சம்பவிக்காது. நெருப்பு, கள்வர்கள் என்ற சம்சார துக்கங்களும் ஏற்படாது.)

12. ஸதா வர்த்தம் ப்ரகர்த்தவ்யம் ஸங்கடே கஷ்ட நாசனம்

ஸூசிர்பூத்வா படேத் ஸ்தோத்ரம் ஸர்வஸித்தி ப்ரதாயகம்

(தாங்க முடியாத அபாய காலத்தில் நூறு முறை படித்தால் ஆபத்து நீங்கி விடும். மனமும், உடலும் தூய்மையாக இருக்க வேண்டும். இடையூறு ஏற்படும் காரியங்களும் தடை நீங்கிப் பூரணமாகும்.)

13. ம்ருத்யுஞ்ஜய மஹாதேவ த்ராஹிமாம் ஸரணாகதம்

ஜன்ம ம்ருத்யு ஜரா ரோகை: பீடிதம் கர்ம பந்தனை

(ஓ, யமனை ஜெயித்தவனே ! மஹா தேவனே ! கர்மாவின் விளைவுகளான பிறப்பு, வியாதி, முதுமை, இறப்பு இவைகளில் சிக்கித் தவிக்கும் என்னை, உன்னைச் சரணமடைந்த காரணத்திற்காகவாவது காத்தருள வேண்டும்.)

14. தாவகஸ்த்வத் கத்ப்ராண ஸ்த்வச் சித்தோஹம் ஸதாம்ருட

இதி விஞ்ஞாப்ய தேவேஸம் த்ரியம்ப காக்யம் மனும் ஜபேத்

(சுகத்தை அளிப்பவரே ! நான் எனது உயிரையும், மனதையும் உங்களிடம் கொடுத்துவிட்டேன். "நான் உங்களது சொந்தம்" எனக் கூறி " ஓம் நமசிவாய" என முடிந்தவரை ஜபிக்க வேண்டும்.

15. நம: சிவாய ஸாம்பாய ஹராய பரமாத்மனே

ப்ரண தக்லேஸ நாஸாய யோகினாம் பதயே நம:

(தேவிக்குப் பாதி உடலைத் தந்தவனும், பாபங்களை அழிப்பவனும், சரணமடைந்தவர்களின் மனக் கவலையைப் போக்குகின்றவனும், ஞானிகளுக்குப் பதியுமான பரமேஸ்வரனை நமஸ்கரிக்கின்றேன்.)

Share this post


Link to post
Share on other sites

சிவா சிவா ஸ்துதி

அன்னையும் பிதாவும் முதன்மை என்கின்றன இதிகாச, புராணங்கள். அவர்களைப் பணிந்தாலே போதும், சகல வளமும் நலமும் சேரும் என்பது நிச்சயம். சிவபாலன் முருகன் தன் பெற்றோரைப் பணிந்து பாடிய இத்துதியைச் சொல்வது வற்றாத செல்வமும், குன்றாத ஆயுளும் தரும் என்பது குமரக்கடவுளின் வாக்கு. துதியைச் சொல்வதோடு தூய மனதுடன் உங்கள் தாய் தந்தையரையும் பணியுங்கள். நிச்சயம் உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாகும் - அவர்கள் ஆசியால்.

நமோ நமஸ்தே கிரீஸாய துப்யம்

நமோ நமஸ்தே கிரிகன்யகாயை

நமோ நமஸ்தே வ்ருஷபத்வஜாய

சிம்ஹத்வஜாய ச நமோ நமஸ்தே ||

கயிலை நாதரான கிரீசரைப் போற்றுகிறேன். மலையரசன் மகளான கிரிஜாவை வணங்குகிறேன். ரிஷபக்கொடியுடைவருக்கு நமஸ்காரம். நமஸ்காரம். சிம்மக்கொடியைக் கொண்ட சிவைக்கு வணக்கம்.

நமோ நமஸ்தே பூதிவிபூணாய

நமோ நமஸ்தே சந்தனருஷிதாயை

நமோ நம: பாலவிலோசனாய

நமோ நம: பத்மவிலோசனாயை ||

மகிமைமிக்க விபூதியை தரிப்பவருக்கு வணக்கம். சந்தனாபிஷேகப்ரியரை போற்றுகிறேன். வணக்கம். கொம்பின் நுனி போன்ற கூர்விழியாள் ஈஸ்வரிக்கு வணக்கம். தாமரைக் கண்ணாளைப் போற்றித் துதிக்கிறேன்.

த்ரிசூல ஹஸ்தாய நமோ நமஸ்தே

நமோ நம: பத்மாலமத்கராயை

நமோ நமோ திக்வமனாயதுப்யம்

சித்ராம்பராயை ச நமோ நமஸ்தே ||

திரிசூலமேந்தியவரே, உமக்கு நமஸ்காரம். ஒளிரும் தாமரையைக் கையில் ஏந்தியவளுக்கு வணக்கம். திசைகளையே ஆடைகளாகக் கொண்ட திகம்பரருக்கு நமஸ்காரம். பல வண்ண ஆடைகளை உடுத்தும் சிவைக்கு வணக்கம்.

சந்த்ராவதம்பாய நமோ நமஸ்தே

நமோஸ்து சந்த்ராபரணாஞ் சிதாயை

நம: சுவர்ணாங்கித குண்டலாய

நமோஸ்து ரத்னோஜ்வல குண்டலாயை ||

சந்திரனை அணியாகக் கொண்டவருக்கு வணக்கம். ஒளிரும் பல ஆபரணங்களை அணிந்து திகழும் சிவைக்கு நமஸ்காரம். பொன்னாலான தோடுகளை அணிந்தவர்க்கு வணக்கம். ரத்னங்கள் பதித்த காது வளையங்களணிந்த சிவைக்கு நமஸ்காரம்.

நமோஸ்து தாராக்ரஹ மாலிகாய

நமோஸ்து ஹாரான்வித சுந்தராயை

சுவர்ண வர்ணாய நமோ நமஸ்தே

நம: ஸ்வர்ணாதிக சுந்தராயை ||

நட்சத்திரங்களையும் கோள்களையும் மாலையாக அணிந்தவர்க்கு வணக்கம். தோள்களில் மாலை துவள ஒளிரும் சிவைக்கு நமஸ்காரம். பொன்னார் மேனியனுக்குப் போற்றி வணக்கம். பொன்னை விட அழகான, ஒளிரும் மேனி பெற்ற சிவைக்கு நமஸ்காரம்.

நமோ நமஸ்தே த்ரிபுராந்தகாய

நமோ நமஸ்தே மது நாசனாயை

நமோ நமஸ்துத்வந்தக சூதனாயை

நமோ நம: கைடப சூதனாயை ||

த்ரிபுராசுரனை அழித்தவனே போற்றி. மது என்னும் அரக்கனை அழித்தவரே போற்றி. அந்தகனை அழித்தவரே போற்றி. கைடபரை அழித்தவரே போற்றி. வணக்கம்.

(மது, கைடபர் இருவரையும் திருமால் அழித்தார். பரமனின் ஒரு பாதி பார்வதி என்பது போல சங்கர நாராயணனின் ஒரு பகுதியானவர் நாராயணன். பார்வதியின் பகுதி தான் அவளின் சோதரன் நாராயணன் பகுதி. அப்பகுதிக்குரிய பெருமைதான் மது, கைடப சம்ஹார வைபவம். சிவ பாகம் பொன்மேனி. பார்வதி பாகம் கருமை. நீலமேக வண்ணம் திருமாலுடையது.)

நமோ நமோ ஞான மயாய நித்யம்

நமஸ் சிதானந்தன ப்ரதாயை

நமோ ஜடா ஜுட விராஜிதாய

நமோஸ்து வேணி பணி மண்டிதாயை ||

பரமஞான வடிவானவர்க்கு நமஸ்காரம். வானமழைபோல் அருளை அள்ளிப் பொழியும் சிவைக்கு வணக்கம். பனித்த சடையுடைய ஜடாதரனைப் போற்றுகிறேன். வணக்கம். கருநாகம் போன்ற கருங்குழலையுடையவளுக்கு வணக்கம்.

நமோஸ்து கற்பூர சாகராய

நமோ லமத் குங்கும மண்டிதாயை

நமோஸ்து வில்வாம்ர பலார்ச்சிதாய

நமோஸ்து குந்தப்ரஸவார்ச்சிதாயை ||

கற்பூர வாசனையில் மகிழ்பவரே போற்றி ! குங்குமம் தரிப்பதில் ஆனந்திக்கும் சுந்தரியாளே போற்றி ! வில்வம், மாம்பழம் ஆகியவற்றை பிரசாதமாக விரும்பி ஏற்றுக் கொள்பவரே நமஸ்காரம். மல்லிகை மணத்தால் கவரப்பட்டவளே வணக்கம்.

நமோ ஜகன் மண்டல மண்டனாய

நமோ மணிப்ராஜித மண்டனாயை

நமோஸ்து வேதாந்த கணஸ்துதாய

நமோஸ்து விஸ்வேஸ்வர சம்ஸ்துதாயை ||

பூமண்டலம் அனைத்தையும் அலங்கரிப்பவரே வணக்கம். அழகான அபூர்வமான மணிகளாலான ஆபரணங்களால் ஜொலிப்பவளே வணக்கம். வேத வேதாந்தங்களால் போற்றப்படுபவருக்கு வணக்கம். அந்த விஸ்வேஸ்வரராலேயே நாளும் போற்றப்படுபவளுக்கு நமஸ்காரம்.

நமோஸ்து சர்வாமர பூஜிதாய

நமோஸ்து பத்மார்ச்சித பாதுகாயை

நம: சிவாலிங்கித விக்ரஹாய

நம: சிவாலிங்கித விக்ரஹாயை ||

அனைத்து தேவர்களாலும் பூஜிக்கப்படுபவருக்கு வணக்கம். பத்மா (மகாலக்ஷ்மி) யால் சமர்ப்பிக்கப்பட்ட பாதுகையை உடையவனுக்கு வணக்கம். சிவையால் ஆலிங்கனம் செய்யப்பட்ட சிவனுக்கு நமஸ்காரம். சிவனால் ஆலிங்கனம் செய்யப்பட்ட சிவைக்கு வணக்கம்.

நமோ நமஸ்தே ஜனகாய நித்யம்

நமோ நமஸ்தே கிரிஜே ஜனன்யை

நமோ நமோ அனங்கஹராய நித்யே

நமோ நமோ அனங்க விவர்தனாய ||

உலகின் ஆதியான பிதாவைப் போற்றுகிறேன். வணக்கம். மலைமகளாகிய மகேஸ்வரிக்கு வணக்கம். மன்மதனை அழித்தவரே போற்றி. பக்தர்கள் வேண்டியவற்றை நிறைவேற்றும் காமாட்சியே போற்றி.

நமோ நமஸ்தேஸ்து விஷாசனாய

நமோ நமஸ்தேஸ்து சுதாசனாயை

நமோ நமஸ்தேஸ்து மகேஸ்வராய

ஸ்ரீசந்தனே தேவி நமோ நமஸ்து ||

பிரபஞ்சத்தை ஆலகால விஷத்திலிருந்து காப்பாற்ற தானே அதை உண்டவரே வணக்கம். அமுதத்தையே தானாக வரித்து அமுதமயமானவளே வணக்கம். உலக ரட்சகரான மகேஸ்வரனுக்கு வணக்கம். மணம் கமழும் சந்தனமயமான தேவிக்கு வணக்கம். உலகத்துக்கே தாயும் தந்தையுமாக விளங்கும் உமாமகேஸ்வரனுக்கு வணக்கம். உமது ஆசியால் சகல வளமும் நலமும் பெருகிட அருள்வீராக...!

(சிவசிவா துதி நிறைவு)

Share this post


Link to post
Share on other sites

தாரித்ர்ய துக்கதஹந ஸ்ரீ பஞ்சாக்ஷரீ சிவஸ்தோத்ரம்

விச்'வேச்'வராய நரகார்ணவதாரணாய

கர்ணாம்ருதாய ச'சி'சே'கரதாரணாய

கர்பூரகாந்தி தவலாய ஜடாதராய

தாரித்ர்ய து:க தஹநாய நம:சிவாய ||

கௌரீ ப்ரியாய ரஜ நீச' கலாதராய

காலாந்தகாய புஜகாதி பகங்கணாய

கங்காதராய கஜராஜ - விமர்தநாய

தாரித்ர்ய து:க தஹநாய நம:சிவாய ||

பக்திப்ரியாய பவரோக பயாபஹாய

உக்ராய துர்கபவஸாகரதாரணாய

ஜ்யோதிர்மயாய குணநாமஸு ந்ருத்யகாய

தாரித்ர்ய து:க தஹநாய நம:சிவாய ||

சர்மாம்பராய சவ பஸ்ம விலேபநாய

பாலேக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய

மஞ்ஜீர பாதயுகலாய ஜடாதராய

தாரித்ர்ய து:க தஹநாய நம:சிவாய ||

பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய

ஹேமாம் சுகாய புவநத்ரய மண்டிதாய

ஆநந்த பூமி வரதாய தமோமயாய

தாரித்ர்ய து:க தஹநாய நம:சிவாய ||

பாநு ப்ரியாய பவஸாகர தாரணாய

காலாந்தகாய கமலாஸந பூஜிதாய

நேத்ர த்ரயாய சுபலக்ஷண லக்ஷிதாய

தாரித்ர்ய து:க தஹநாய நம:சிவாய ||

ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய

நாக ப்ரியாய நரகார்ணவதாரணாய

புண்யேஷு புண்யபரிதாய ஸுரார்சிதாய

தாரித்ர்ய து:க தஹநாய நம:சிவாய ||

முக்தேச்வராய பலதாய கணேச்வராய

கீதப்ரியாய வ்ருஷபேச்வர வாஹநாய

மாதங்க சர்மவஸநாய மஹேச்வராய

தாரித்ர்ய து:க தஹநாய நம:சிவாய ||

வஸிஷ்டேந க்ருதம் ஸ்தோத்ரம்

ஸர்வரோக நிவாரணம்

ஸர்வ ஸம்பத்கரம் சீக்ரம்

புத்ரபௌத்ராபி வர்தநம்

த்ரிஸந்த்யம் ய: படேந் நித்யம்

ஸ ஹி ஸ்வர்க மவாப்நுயாத்

இதி தாரித்ர்ய து:க தஹந ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

Share this post


Link to post
Share on other sites

ஸ்ரீ லிங்காஷ்டகம்

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம், நிர்மல பாஷித சோபித லிங்கம்

ஜன்மஜ துக்க விநாசன லிங்கம், தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 1

தேவமுனி ப்ரவார்சித லிங்கம், காமதஹம் கருணாகர லிங்கம்

ராவண தர்ப்ப விநாசன லிங்கம், தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 2

ஸர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம், புத்தி விவர்த்தன காரண லிங்கம்

ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம், தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 3

கனக மஹாமணி பூஷித லிங்கம், பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்

தக்ஷஸு யக்ஞ விநாசன லிங்கம், தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 4

குங்கும சந்தன லேபித லிங்கம், பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்

ஸஞ்சித பாப விநாசன லிங்கம், தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 5

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம், பாவையர் பக்தி பிரேவச லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம், தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 6

அஷ்ட தலோபரி வேஷ்டித லிங்கம், ஸர்வ ஸமுத் பவ காரண லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசக லிங்கம், தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 7

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம், ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்

பராத்பரம் பரமாத்மக லிங்கம், தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் 8

(இதி ஸ்ரீ லிங்காஷ்டகம் ஸம்பூர்ணம்)

லிங்காஷ்டகம் (தமிழில்)

நான்முகன் திருமால் பூஜை செய் லிங்கம்

தூயசொல் புகழ் பெரும் பேரெழில் லிங்கம்

பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்

வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 1

காமனை எரித்த பேரெழில் லிங்கம்

இராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்

வழி வழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்

வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 2

திவ்ய மணம் பல கமழ்கின்ற லிங்கம்

சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்

தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்

வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 3

படம் எடுத்தாடும் பாம்பணை லிங்கம்

கனகமும் நவமணி ஒளித்திடும் லிங்கம்

தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்

வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 4

குங்குமம் சந்தனம் பொழிந்திடும் லிங்கம்

பங்கய மலர்களைச் சூடிடும் லிங்கம்

வந்ததொரு பாவத்தைப் போக்கிடும் லிங்கம்

வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 5

அசுரர்கள் அங்கம் போற்றிடும் லிங்கம்

அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்

கதிரவன் கோடி சுடர் மிகு லிங்கம்

வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 6

எட்டிதழ் மலர்களும் சுற்றிடும் லிங்கம்

எல்லாப் பிறப்பிற்கும் காரண லிங்கம்

அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்

வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 7

வியாழனும் தேவரும் போற்றிடும் லிங்கம்

வில்வமதை மலர் எனக்கொளும் லிங்கம்

தன்னோடு பிறரையும் காத்திடும் லிங்கம்

வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 8

(ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழாக்கம் நிறைவு)

Share this post


Link to post
Share on other sites

கண் பதிகம்

கண் பார்வை பெற உதவும் பதிகம்

ஆலந்தான் உகந்து அமுது செய்தானை

ஆதியை அமரர் தொழுதேத்தும்

சீலந்தான் பெரிதும் உடையானைச்

திப்பர் அவர் சிந்தை உளானை

ஏலவார் குழலாள் உமை நங்கை

என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற

காலகாலனைக் கம்பன் எம்மானைக்

காணக் கண் அடியேன் பெற்றவாறே (1)

உற்றவர்க்குதவும் பெரு மானை

ஊர்வதொன்றுடை யான் உம்பர் கோனைப்

பற்றினார்க் கென்றும் பற்றவன் தன்னைப்

பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை

அற்றமில் புகழாள் உமை நங்கை

ஆதரித்து வழிபடப் பெற்ற

கற்றைவார் சடைக் கம்பன் எம்மானைக்

காணக்கண் அடியேன் பெற்றவாறே (2)

திரியும் முப்புரந் தீப்பிழம்பாகச்

செங்கண் மால்விடை மேல் திகழ்வானைக்

கரியின் ஈருரி போர்த்துகந்தானைக்

காமனைக் கனலா விழித்தானை

வரிகொள் வெள்வளையாள் உமை நங்கை

மருவி ஏத்தி வழி படப்பெற்ற

பெரிய கம்பனை எங்கள் பிரானைக்

காணக்கண் அடியேன் பெற்றவாறே (3)

குண்டலம் திகழ் காதுடை யானைக்

கூற்று உதைத்த கொடுந்தொழிலானை

வண்டம்பு மலர்க் கொன்றையினானை

வாளராமதி சேர் சடையானைக்

கெண்டையந்தடங் கண் உமை நங்கை

கெழுமி யேத்தி வழி படப்பெற்ற

கண்டம் நஞ்சுடைக் கம்பனெம்மானைக்

காணக்கண் அடியேன் பெற்றவாறே (4)

வெல்லும் வெண்மழு ஒன்றுடையானை

வேலை நஞ்சுண்ட வித்தகன் தன்னை

அல்லல் தீர்த்தருள் செய்ய வல்லானை

அருமறையவை அங்கம் வல்லானை

எல்லையில் புகழாளுமை நங்கை

யென்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

நல்ல கம்பனை எங்கள் பிரானைக்

காணக்கண் அடியேன் பெற்றவாறே (5)

திங்கள் தங்கிய சடையுடை யானைத்

தேவ தேவனைச் செழுங் கடல் வளரும்

சங்க வெண்குழைக் காதுடையானைச்

சாம வேதம் பெரிதுகப்பானை

மங்கை நங்கை மலைமகள் கண்டு

மருவி யேத்தி வழி படப்பெற்ற

கங்கையாளனைக் கம்பனெம் மானைக்

காணக்கண் அடியேன் பெற்றவாறே (6)

விண்ணவர் தொழுதேத்த நின்றானை

வேதம் தான் விரித்து ஓதவல்லானை

நண்ணினார்க் கென்றும் நல்லவன் தன்னை

நாளும் நாம் உகக்கின்ற பிரானை

எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை

என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற

கண்ணும் மூன்றுடைக் கம்பன் எம்மானைக்

காணக்கண் அடியேன் பெற்றவாறே (7)

சிந்தித் தென்றும் நினைந்தெழுவார்கள்

சிந்தையில் திகழும் சிவன் தன்னைப்

பந்தித்தவினைப் பற்றறுப் பானைப்

பாலொடானஞ்சும் ஆட்டுகந்தானை

அந்தமில் புகழாள் உமை நங்கை

ஆதரித்து வழிபடப் பெற்ற

கந்தவார் சடைக் கம்பன் எம்மானைக்

காணக்கண் அடியேன் பெற்றவாறே (8)

வரங்கள் பெற்றுழல் வாள ரக்கர் தம்

வாலிய புரம் மூன்றெரித் தானை

நிரம்பிய தக்கன் தன் பெரு வேள்வி

நிரந்தரஞ் செய்த நிர்க்கண்டகனைப்

பரந்த தொல் புகழாள் உமை நங்கை

பரவி ஏத்தி வழி படப்பெற்ற

கரங்கள் எட்டுடைக் கம்பன் எம்மானைக்

காணக்கண் அடியேன் பெற்றவாறே (9)

எள்கல் இன்றி இமையவர் கோனை

ஈசனை வழிபாடு செய்வாள் போல்

உள்ளத் துள்கி உகந்துமை நங்கை

வழிபடச் சென்று நின்றவா கண்டு

வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி

வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட

கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்

காணக்கண் அடியேன் பெற்றவாறே (10)

பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப்

பெரிய எம்பெருமான் என்றெப்போதும்

கற்றவர் பரவப்படு வானைக்

காணக் கண் அடியேன் பெற்றதென்று

கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானைக்

குளிர்பொழில் திருநாவல் ஆருரன்

நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லவர்

நன்னெறி உலகெய்துவர் தாமே (11)

Share this post


Link to post
Share on other sites

ருத்ர அபிஷேக ஸ்தோத்ரம்

ஓம் ஸர்வதே³வதாப்யோ நம​:

ஓம் நமோ பவாய ஸ²ர்வாய ருத்³ராய வரதா³ய ச |

பஸூ²னாம் பதயே நித்யமுக்³ராய ச கபர்தி³னே || 1 ||

மஹாதே³வாய பீமாய த்ரயம்ப³காய ச சா²ந்தயே |

ஈசா²னாய மக²க்னாய நமோ(அ)ஸ்த்வன்தககாதினே || 2 ||

குமாரகு³ரவே துப்யம் நீலக்³ரீவாய வேதஸே |

பிநாகினே ஹிவஷ்யாய ஸத்யாய விபவே ஸதா³ || 3 ||

விலோஹிதாய தூம்ராய வ்யாதாயானபராஜிதே |

நித்யநீலிஷ²க²ண்டா³ய ஸூ²லினே தி³வ்யசக்ஷுஷே || 4 ||

ஹந்த்ரே கோ³ப்த்ரே த்ரிநேத்ராய வ்யாதாய வஸுரேதஸே |

அசிந்த்யாயாம்பி³காபர்த்ரே ஸர்வதே³வஸ்துதாய ச || 5 ||

வ்ருஷத்வஜாய முண்டா³ய ஜிடனே ப்³ரம்ஹசாரிணே |

தப்யமானாய ஸிலலே ப்³ரஹ்மண்யாயாஜிதாய ச || 6 ||

விஸ்²வாத்மனே விஸ்²வஸ்ருஜே விஸ்²வமாவ்ருத்ய திஷ்ட²தே |

நமோ நமஸ்தே ஸேவ்யாய பூதானாம் ப்ரபவே ஸதா³ || 7 ||

ப்³ரஹ்மவக்த்ராய ஸர்வாய ஸ²ங்கராய சி²வாய ச |

நமோ(அ)ஸ்து வாசஸ்பதயே ப்ரஜானாம் பதயே நம: || 8 ||

நமோ விஸ்²வஸ்ய பதயே மஹதாம் பதயே நம​: |

நம​: ஸஹஸ்ரிஸ²ரஸே ஸஹஸ்ரபுஜம்ருத்யவே |

ஸஹஸ்ரநேத்ரபாதா³ய நமோ(அ)ஸங்க்²யேயகர்மணே || 9 ||

நமோ ஹிரண்யவர்ணாய ஹிரண்யகவசாய ச |

பக்தானுகிம்பனே நித்யம் சித்யதாம் நோ வர: ப்ரபோ || 10 ||

ஏவம் ஸ்துத்வா மஹாதே³வம் வாஸுதே³வ​: ஸஹார்ஜுன​: |

ப்ரஸாத³யாமாஸ பவம் ததா³ ஹம் ஸ்த்ரோபலப்³தயே || 11 ||

|| இதி ருத்³ராபிஷேக ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

ப்ரயோக விதி: தாமிர சொம்பில் அல்லது பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் (அ) கங்கா நீர் (இப்போது எல்லா இடங்களிலும் கிடைக்கிறது), பசுவின் பால், எள் (வெள்ளை அல்லது கறுப்பு) எல்லாவற்றையும் கலந்து எடுத்துக் கொண்டு சிவலிங்கத்தின் மீது மெதுவாக அபிக்ஷேகம் செய்து கொண்டே இந்த லகு ருத்ராபிக்ஷேக ஸ்தோத்ரத்தை 11 முறை சிரத்தையுடனும், பக்தியுடனும் ஜபித்தால், வாழ்க்கையில் இதுவரையில் வந்த, அல்லது வினைப்பயனால் இனி ஏதேனும் கஷ்டங்கள் வருமாயினும் அவை எல்லாவற்றிலும் இருந்து விடுதலை மட்டுமல்லாமல் சுகம், நிம்மதி மற்றும் வளம் யாவையும் பெறுவது நிச்சயம்.

சிவராத்திரி அன்று உபவாசம், இரவில் கண் விழித்தல், சிவபூஜை செய்து வில்வ தளங்களால் அர்ச்சனை, பஞ்சாக்ஷரீ ஜபம், ஸ்ரீ ருத்ர பாராயணம், சிவபுராணம் வாசித்தல் முதலிய சிவதர்மங்களை கடைப்பிடிக்க புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி அன்று நம்மால் முடிந்தவரை சிவதர்மத்தை கடைப்பிடித்து கைலாய நாதனின் அருளை வேண்டி நிற்போம்.

Share this post


Link to post
Share on other sites

shiva_pooja.jpg

Vandhe Sambhum Umaapathim Suragurum

Vandhe Jagath Kaaranam

Vandhe Pannaga Bhooshanam Mrigadharam

Vandhe Pasoonaam Pathim

Vandhe Soorya Sasaanga Vahnni Nayanam

Vandhe Mukundha Priyam

Vandhe Baktha Janaasryam Cha

Varadham Vandhe Sivam Sankaram

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0