Sign in to follow this  
Followers 0
வர்ஷா

வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும்

Rate this topic:

5 posts in this topic

வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும்

kerala_plaintainleaf_meals.jpgfood-served-on-a-banana-leafa-tradition-the-food-offered-during-maheshwara-puja.

பலதரப்பட்ட உணவுகளாக இருந்தாலும், நமது கலாசாரப்படி வாழை இலையில் சாப்பிடுவதுதான் ருசியானது. அதிலும் தலைவாழை இலை போட்டு விருந்து என்றாலே மகிழ்ச்சி தோன்றும். அனைவரது மனதிலும் நமது பாரம் பரியத்தின் மிச்சம் கொஞ்சம் கிடக்கிறது. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனதில் ஆசை எழும்புகிறது. இவை மரபணுவில் ஊறியவை. நாகரிகத்தின் பெயரால் நாம் சிதைத்த உணவு பழக்கங்களில் வாழை இலைக்கே முதலிடம்.

DSC_0169.JPG

வாழைக்கு முதலிடம் சல்பர்டை ஆக்சைடு, பாலிவினைல் குளோரைடு, டையாக்சின், எத்திலின், பாலிஸ்டிரின் போன்ற புற்று நோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் நிறைந்த பிளாஸ்டிக் தட்டுகள், ஹார்ட் பேக்குகள், பாலிதீன் சீட்டுகள் தான் நமது தட்டுகளாகிவிட்டன. புது வீட்டில் பால் காய்ச்சி வாழை மரத்தை கட்டுவது முதல், திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்வுகள் அனைத்திற்கும் வாழை மரத்துக்கே முதலிடம். சாமிக்கு வாழையிலையில் படையல் போட்டு விட்டு, பிளாஸ்டிக் தட்டில் நாம் சாப்பிடுவதே மங்கள நிகழ்வுகளாகி விட்ட சூழ்நிலையில் நமது வயிற்றுக்குள் செல்லும் ஆபத்தை நாம் உணர வேண்டாமா?

சூடான உணவுகளை வைப்பதால் பிளாஸ்டிக் தட்டுகள், தாள்களில் கிளம்பும் ஸ்டிரின், பைஸ்பீனால் போன்ற நச்சு வாய்வுகளானது இதய குழாய் அடைப்பு, சிறுநீரகம், ரத்த புற்று நோய்,

மலட்டுத்தன்மை, ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

5091979d39ee05be6dbde6a320c7fa4a_h.jpg?t

வாழை இலை சத்துக்கள் நாம் சாப்பிடும் வாழை இலையில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா? உடல் எடை கூட விடாமல் தடுக்கும் நார்ச்சத்து, உடலில் உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்புச் சத்துக்கள், கண்களை பாதுகாத்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ.சி, மற்றும் கே, குடற்புண்களை ஆற்றும் ஆல்வான்பியின் கிருமிகளை அழிக்கும் பீனால், ரத்தம் உறைவதைத் தடுக்கும் சாலிசிலிக் அமிலம் புற்றுநோய் காரணிகளை அழிக்கும். செல்முதிர் பாதுகாப்பு கலன்கள், நிறமிகள் ஆகியன வாழை இலையில் உள்ளன. இவையெல்லாம் வாழை இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் என்னும் பொருளுடன் பின்னி பிணைந்து காணப்படுகிறது.நீரை தெளித்து வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி அந்த இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, மேற்கண்ட சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதனால் ஒவ்வொரு முறை வாழை இலையில் சாப்பிடும் பொழுதும் நமக்கும் ஆயுள் கூடுகிறது.

tamilnadu_plantainleaf_meal.jpg

வாழை இலை சாலட் வாழை இலையை சாப்பிடும் தட்டாக மட்டுமல்ல, சாலட் அல்லது டீ செய்து சாப்பிடவும் பயன்படுத்தலாம். வாழை இலைகளை கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். இதன் எடைக்கு எடை தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். வாழை இலை துண்டுகளை மிக்சியில் அடித்து, துணியில் பிழிந்து சாறு எடுத்து, தேன் சேர்த்து, 10 நிமிடங்கள் இளஞ் சூட்டில் அடுப்பில் வைத்து வடிகட்டி, சூடாறிய பின்பு 10 - 15 மி.லி., தினமும் 2- 3 வேளை சாப்பிட தோல் சுத்தமாகும். ஈறு வாய் புண்கள், வாய் துர்நாற்றம் ஆகியன நீங்கும்.தயிர்சாதம், லெமன் சாதம் சாப்பிட்டால் சளி பிடிக்குமே என்ற பயமா? இனி வேண்டாம். தயிர்சாதம் அல்லத லெமன் சாதத்தை அப்படியே சூடாக இலையில் போட்டு சாப்பிடுங்கள். இலையின் குளோரோபில் சூடான சாதத்தில் உருகி, உங்களின் தொண்டையில் தோன்றும் ஒவ்வாமையை தடுத்து விடும்.

andhra_plaintainleaf_meals.jpg

வயிற்று புண்ணை குணமாக்கும் வாழை இலையின் குளோரோபில் செல்கள் நீண்ட காலம் அழியாமல் இருக்கக் கூடியவை மட்டுமல்ல, வாய், இரைப்பை, சிறுகுடல் போன்ற பகுதிகளில் உள்ள என்சைம்கள் மற்றும் செரிமான செல்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு துணை புரிகின்றன. அல்சர் நோயினால் ஏற்பட்ட வயிற்று புண்களை வாழை இலை விரைவில் ஆற்றக்கூடியவை. இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் தோன்றிய புண்களின் அழுகி சதைகளை கரைத்து விட்டு, புதிய செல்களை தோற்றுவித்து புண்களை ஆற்றும் தன்மை வாழை இலைக்கு உண்டு. ஆகையால் தான் நெருப்பில் சுட்ட புண்களை ஆற்ற வாழை இலையைக் சுற்றுவது நமது வழக்கம்.

வாழை இலையில் உணவு உட்கொள்வதால் இனப்பெருக்கம் செல்களும் பல்கி பெருகுகின்றன. தினமும் 1 வேளை சூடாக உணவை இலையில் வைத்து சாப்பிடுவதால் ஆண் உயிரணுக்கள் அதிகப்படுவதாக மேற்கத்திய நாடுகளின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.உணவின் விஷத்தன்மை கெட்டுப்போன அல்லது விஷம் கலந்த உணவுகளை வாழை இலையில் வைத்தால் இலையின் மேற்புறத்தில் புதிய நிறத்தில் ஒரு வித நீர் உற்பத்தியாகி, இலையில் ஒட்டாமல் வடிந்து விடும். இதனை வைத்து உணவின் விஷத் தன்மையை அறிந்து கொள்ளலாம். ஆகையால்தான் 'எதிரி விருந்துக்கு அழைத்தாலும் தலை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம்' என முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

onam-sadya.jpg

பாத்திரங்களை கழுவ உதவும் காஸ்டிக் சோடா, சுண்ணாம்பு ஆகியவை பாத்திரங்கிளில் ஒட்டி நமது உணவுடன் உள்ளே சென்று வயிற்றுப்புண்களை உண்டாக்குகிறது. ஆனால் வாழை இலையில் சாப்பிடுவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுவதில்லை.எப்படி பரிமாறுவது வாழையிலையில் சாப்பிட்டால் சுக போக உணர்ச்சியும், தோலுக்கு பளபளப்பும் உண்டாகும். செரிமானக் குறைபாடு, பலகீனம், உடல்வலி, நாட்பட்ட சளி, ருசியின்மை ஆகியன நீங்கும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. உணவு உண்ண அமரவேண்டிய இடத்தை துடைத்து, லேசாக நீர் தெளித்து, அந்த தரையின் மேல் நுனி இலை உண்பவரின் இடப்பக்கமும், அடி வலப்பக்கமும் இருக்கும் படி நீரால் கழுவி சுத்தம் செய்த இலையை விரிக்க வேண்டும். இலையை விரித்த பிறகு அதன் மேல் கொஞ்சம் நீரை வலது கையால் தெளித்து, துடைத்து ஒரு சொட்டு நெய்யை இலையில் விட்டு, அதன் மேல் உணவு பதார்த்தங்களை பரிமாற வேண்டும்.

tamilnadu_plantainleaf_meal.jpg

உறவினர்களுக்கு விருந்து அளிக்கும் போது மேற்கு பார்த்தும், சாதுக்கள், ஞானிகளுக்கு வடக்கு பார்த்தும், அவர்கள் அமர்ந்து உண்ணும் படி இலை விரிக்க வேண்டும்.முதலில் நுனி இலையிலிருந்து உப்பு, சட்டினி, ஊறுகாய், பச்சடி, காய்கறி, வடகம், வடை, சித்திரான்னம், அப்பளம், ஆகியவற்றை பரிமாறி, அதன் அருகில் மூன்று வாழை இலை தொன்னைகளில் தனித்தனியே கூட்டு ரசம் மற்றும் குழம்பு வைத்து பனியாரம், பாயாசம் வைத்து இறுதியாக சோறும் அதன் அருகில் மற்றொரு தொன்னையில் நெய்யும் வைத்து உபசரிக்க வேண்டும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.வாழை இலையில் உணவு உண்பதால் நீர் சேமிக்கப்படும். வீரியமான வேதி பொருட்களால் உருவாக்கப்பட்ட உலோக, பிளாஸ்டிக் பாத்திரங்களின் நச்சுத்தன்மை நம்மை தாக்காது. அது மட்டுமல்ல நமது இலை நமது வீட்டு ஆடு, மாடுகளுக்கு ஆரோக்கியமான உணவளிக்கும் சாதனம் மட்டுமல்ல, நமது மண்ணின் மரபு. நமது பாரம்பரியத்தின் அடையாளம். நமது சந்ததியினருக்கும் இதனை அடையாளம் காட்ட தினம் ஒரு வேளையாவது வாழை இலையில் உணவு உட்கொள்வோம்.

kerala_plaintainleaf_meals.jpg' alt='' class='ipsImage' width="1000px" height="627px">">' alt='' class='ipsImage' width="1000px" height="627px">

Share this post


Link to post
Share on other sites
Arrangement+of+Annam.jpg374180_510271329023201_1246102193_n.jpg இப்படத்தில் உள்ளப்படி இலையில் வைக்கவேண்டிய பலகாரப் பட்டியல் வருமாறு. 1) உப்பு 2) ஊறுகாய் 3) சட்னிப் பொடி 4) கோசும்பரி 5) கோசும்பரி 6) தேங்காய் சட்னி 7) பீன்.. பல்யா 8) பலாப்பழ உண்டி 9) சித்ரண்ணம் 10) அப்பளம் (பப்படம்) 11) கொரிப்பு 12) இட்லி 13) சாதம் 14) பருப்பு 15) தயிர் வெங்காயம் 16) இரசம் 17) பச்சடி 18) கதிரிக்காய் பக்கோடா 19) கூட்டு 20) பொரியல் 21) அவியல் 22) கத்ரிக்காய் சாம்பார் 23) இனிப்பு 24) வடை 25) இனிப்பு தேங்காய் சட்னி 26) கிச்சிடி 27) காரப்பொரியல் 28) பாயசம் 29) தயிர் 30) மோர் 1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது 2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில் 3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய் 5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம் 4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள் பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் ).. தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் . நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு . வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது. நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள். அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு . வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் . தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

வாழை இலையில் கக்கா போனால் ஆயுள் கூடுமா அல்லது குறையுமா? காஞ்சி பெரியவா வாழையில் தான் கக்கா போவார். அதை சுமப்பவர் ஒரு பார்ப்பனர் என்பதும் கூடுதல் தகவல். 

Share this post


Link to post
Share on other sites

கர்மம்..கர்மம்...

Share this post


Link to post
Share on other sites

பயனுள்ள தகவல் வர்ஷா. வாழை இலை மூலம் உடல் சருமத்தை அழகாக்கலாம்!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடலுக்கு எவ்வாறு சிறந்ததோ, அவ்வாறே அதன் இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தது. வாழைப்பழத்தை நாம் சாப்பிட்டால் உடலின் உட்பகுதிக்கு சிறந்தது. ஆனால் அதன் இலைகளை உடலின் வெளிப்புறத்திற்கு, அதாவது சருமத்தில் ஏற்படும் பல காயங்கள் மற்றும் சருமத்திற்கு மெருகேற்ற, இது ஒரு சிறந்த அழகுப்பொருளும் கூட. இப்போது அந்த வாழை இலையை எப்படி பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

சிறப்புமிக்க வாழை இலையின் நன்மைகள்…

>> அழகுப் பொருட்களான கிரீம் மற்றும் லோசனில் இருக்கும் 'அலன்டாயின்' (Allantoin) என்னும் பொருள், இந்த சிறப்புமிக்க வாழை இலையில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பொருள் கிருமிகளை அழிப்பதோடு, விரைவில் எந்த ஒரு பிரச்சனையையும் சரிசெய்யும். மேலும் இது புதிய செல்கள் வளரவும் வழிவகுக்கும்.

>> வாழை இலையில் பல மருத்துவ பொருட்கள் இருப்பதால், இவை விஷமிக்க பூச்சிகள் கடித்தல், தேனீக்கடி, சருமத்தில் அரிப்புகள் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது. சொல்லப்போனால், இத்தகைய சிறப்பால் வாழை இலையை ஒரு 'இயற்கை அளிப்பான்' என்றும் சொல்வார்கள்.

>> அழகை கெடுக்கும் வகையில் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு மிகவும் சிறந்தது. இதன் புதிய இலைகளில் இருந்து கிடைக்கும் ஜூஸை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால், அந்த பிரச்சனையானது முற்றிலும் சரியாகிவிடும். மேலும் இதன் இலையை தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தின் மேல் வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும்.

>> குழந்தைகளுக்கு இறுக்கமான ஆடைகள் அணிவதால் வரும் அரிப்பு, கொசு கடி போன்றவற்றில் இருந்து காப்பாற்ற வீட்டிலேயே இயற்கையாக மருந்துகளை வாழை இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அதற்கு வாழை இலைச்சாற்றுடன், சிறிது ஒலிவ் ஒயில், சிறிது தேன் மெழுகு கலந்து, அதனை பயன்படுத்த வேண்டும்.

>> மன அழுத்தம் போவதற்கும் மற்றும் மென்மையான சருமத்தை பெறுவதற்கும், வாழை இலையில் ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், சருமமானது மென்மையடைவதோடு அழகும் பெறும். அத்துடன் எந்த ஒரு நோயும் சருமத்தில் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.

Edited by சயந்தன்
பதிவிட்ட இணைப்பில் உள்ள முக்கிய பகுதியையும் சேர்க்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0