Sign in to follow this  
Followers 0
ஆரங்கன்

முஸ்லிம்கள் மீதான விமர்சனம்! - ஈ வே ரா

Rate this topic:

2 posts in this topic

முஸ்லிம்கள் மீதான விமர்சனம்!

திராவிட இயக்கத்தவர்கள் ஹிந்து மதத்தை எதிர்த்தார்கள், பிராமணர்கள் மீது வெறுப்புணர்வை வளர்த்தார்கள் என்பதைப் பார்த்தோம். தமிழகமே விடுதலைப் போரில் ஆவேசமாக ஈடுபட்டு முன்னணியில் நின்றதால், ஈ.வெ.ரா.வின் பிளவு வேலை எடுபடவில்லை என்பதையும் பார்த்தோம்.ஹிந்து மதத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட திராவிட இயக்கத்தினர், மற்ற மதங்களைப் பற்றி என்ன விமர்சனங்கள் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.
-
குடி அரசு 14.10.1928 இதழில், இந்தியாவில் ‘பர்தா முறையை ஒழிக்க வேண்டிய அவசியம்’ – என்ற கட்டுரை வெளிவந்தது.
-
குடி அரசு 3.3.1929 இதழில் ‘இஸ்லாமும் சுயமரியாதை இயக்கமும்’ என்ற கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரையில் “நம் தென்னாட்டு முஸ்லிம் யுவர்களுக்கு புத்துணர்ச்சி எப்போது தோன்றும் என்பதை ஆண்டவன் ஒருவனே அறியக் கடவன். இளைஞர்களே, பௌராணிகப் புளுகர்களின் மாய வலையில் விழுந்து விடாதீர்கள். உங்கள் பகுத்தறிவை நீங்களே செம்மை செய்து சீர்தூக்கிப் பார்ப்பீர்களாக என்று நாம் அறிவுறுத்தப் புகுவோமாயின், உடனே நம்மவர்கள் அந்த புரோகிதக் குழுவினரிடம் ஓடி, இது வாஸ்தவந்தானா’ என்று வினவப் புகுகின்றனர். இதைக் கேட்டவுடன் அந்தப் புரோகிதச் சாமியார், ‘அந்தப் பேப்பரைக் கையாலும் தொடாதீர், கண்ணாலும் பாராதீர். இஸ்லாத்துக்கும், பகுத்தறிவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது’ என்று விடையுறுத்து, நம் இளைஞரின் மூளைக்கு முத்திரையிட்டு விடுகின்றனர்…” என்று எழுதப்பட்டிருந்தது. இஸ்லாத்தில் உள்ள மத குருக்களுக்கு எதிரான குரலாக இது ஒலித்தது.

-

குடி அரசு 4.11.1928 இதழில் ‘பர்தாவின் அநியாயம்’ என்ற தலைப்பில், எம்.எஸ். உசேன் சாயபு எழுதியதாக ஒரு குறிப்பு வெளியானது. அந்தக் குறிப்பில் –

-

“சகோதர சகோதரிகளே, இந்த கொடிய வழக்கத்தை அறவே ஒழித்து, பெண்ணை ஆண் பார்த்து, ஆணைப் பெண் பார்த்து சந்தோஷத்துடன் விவாஹம் செய்து கொண்டு, சுகமாய் காலம் கழித்து வந்தாரானால் செல்வமும் வேண்டாம், நகையும் வேண்டாம். மனதுக்கிசைந்த மனைவியை விட உயர்ந்த செல்வம் உலகினில் வேறு கிடையாது…

-
“நாம் ஏன் எல்லோரும் சேர்ந்து, மார்க்கத்தின் பேரால் கோஷா என்ற சிறையில் வைத்து அவர்களைக் கெடுக்க வேண்டும்? ஏன் அந்தப் பாவத்தைத் தலை மேல் போட்டுக் கொள்கிறீர்?”– என்று எழுதப்பட்டிருந்தது.இதற்குப் பிறகு, மன்னார்குடியில் 17.6.1932-ல்சுயமரியாதை மாநாடு நடந்தது. இதைப் பற்றிய செய்தி 26.6.1932 குடி அரசு இதழில் வெளிவந்துள்ளது.மாநாட்டிற்கு குஞ்சிதம் அம்மையார் தலைமை தாங்கினார்.
-
அவருடைய தலைமையுரையில் – “காங்கிரஸின் ஏகப் பிரதிநிதியாகிய திரு.காந்தியோ ஹிந்து மதம், முஸ்லிம் மதம், கிறிஸ்தவ மதம் ஆகிய மதங்களை அப்படியே வைத்துக் கொண்டு ஹிந்து – முஸ்லிம் – கிறிஸ்துவ ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். இம்மூன்று மதங்களும் அழிந்தால் ஒழிய இந்திய மக்கள் ஒற்றுமையாக முடியாது என்கிற முடிவுக்கு வந்து விட்டோம்” என்று பேசினார்.-இத்தகைய எழுத்துக்களுக்கும் பேச்சுகளுக்கும், முஸ்லிம்கள் பதிலடி கொடுத்தனர். முஸ்லிம் லீகைச் சேர்ந்த திருச்சி பி. கலிபுல்லா, “சுயமரியாதை இயக்கத்தினர் தொடர்ந்து தமிழகத்து முஸ்லிம்களின் ஆதரவைப் பெற வேண்டுமானால், கடவுள் மறுப்புப் பிரசாரத்தைக் கைவிட வேண்டும்” என்று கூறினார்.

 

-

“திராவிட இனவாதக் கொள்கையை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று தாருல் இஸ்லாம் இதழில் தாவுத்ஷா எழுதினார்.

-

‘முஸ்லிம்கள் கவனமாக இல்லாவிட்டால் திருக்குறளை மதமாக்கி, திருவள்ளுவரை இறைத்தூதராக ஆக்கி விடுவார்கள்’ என்றும் தாருல் இஸ்லாம் எச்சரித்தது. திராவிட நாடு தோன்றினால் அங்கே அல்லாவிற்கும், குர்ஆனுக்கும் இடமிருக்காது என்றும் சொல்லப்பட்டது.

-

பிறை’ என்ற முஸ்லிம் இதழ், திராவிட இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தது.இவற்றின் விளைவாக, தஞ்சை மாவட்டம் ஐயம்பேட்டை போன்ற இடங்களில், திராவிட இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள் தாக்கப்பட்டனர். சில இடங்களில் திராவிட இயக்க ஆதரவாளர்கள் சமூக விலக்குச் செய்யப்பட்டனர்.இந்த எதிர்ப்புகளுக்குப் பிறகு, திராவிட இயக்கத்தின் நிலைப்பாடு தலைகீழாக மாறியது. அது எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

இஸ்லாமியர்கள் இப்ப உணர்ந்து இருப்பார்கள்

பத்து சதவீதத்துக்கு கீழே இஸ்லாமியர் வாழும் நாடுகளே இஸ்லாமியருக்கு  பாதுகாப்பான நாடுகள் என்று

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0