Sign in to follow this  
Followers 0
வர்ஷா

ராஜபக்ச குடும்ப ஆதிக்கத்துக்கு முடிவு

Rate this topic:

23 posts in this topic

ராஜபக்ச குடும்ப ஆதிக்கத்துக்கு முடிவு rajapaksa_2274673f.jpg தனி ஈழம் கேட்டுப் போராடிய விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் இலங்கையின் வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்த மகிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாக அதிபர் ஆகும் முயற்சியில் வீழ்த்தப்பட்டார். முதன்முறையாக 2005ம் ஆண்டு ராஜபக்ச (69) இலங்கையின் அதிபரானார். 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளை அழித்தார். அதை மட்டுமே சாதனையாகக் கருதி 2010ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். இரண்டாவது முறையாக அதிப ராகப் பொறுப்பேற்ற ராஜபக்ச, விடுதலைப் புலிகளை அழித்த தன் சாதனை இலங்கை மக்களின் நினைவில் இருந்து மங்கிப் போவதற்கு முன் மூன்றாவது முறையாகவும் தானே அதிபராக வேண்டும் என்று விரும்பினார். அதைத் தொடர்ந்து அரசியலமைப்பிலும் திருத்தங்கள் கொண்டு வந்தார். பின்னர் தன்னுடைய பதவிக்காலம் முடிவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பே அதிபர் தேர்தலுக்கும் ஏற்பாடுகள் செய்தார். ராஜபக்சவின் ஆட்சியில் உள்கட்டமைப்பு திட்டங்களால் பொருளாதாரம் வளர்ச்சியடைந்த போதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் மக்களின் மனதில் பெரும் அதிருப்தி உண்டானது. குடும்ப ஆதிக்கம் அவருடைய ஆட்சியில் அவரின் சகோதரர்கள் கோத்தபய மற்றும் பசில் ஆகியோர் முறையே ராணுவம் மற்றும் பொருளாதார அமைச்சர்களாகப் பதவி வகித்தனர். ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மேலும் பலர் பல முக்கியமான பதவிகளிலும் பொறுப்புகளிலும் இருந்தனர். இதுவும் மக்களிடையே பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தின. மேலும் மனித உரிமை மீறல்களுக்காகவும், சர்வாதிகாரப் போக்குக்காகவும் பல நாடுகளின் கண்டனங்களையும், விமர்சனங்களையும் ராஜபக்ச எதிர்கொண்டார். இதற்கிடையே, கடந்த ஆண்டு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களும் மக்களிடையே ராஜபக்ச ஆட்சியின் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டின. இதையெல்லாம் அருகிலிருந்து பார்த்து வந்த புத்த மதத் தலைவர்களின் ’ஜதிக ஹெல உருமய' கட்சி, தேர்தலுக்கு முன்பாக ஜனநாயக சீர்திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும் என்று ராஜபக்சவை எச்சரித்தது. ஆனால் அதையும் ராஜபக்ச புறக்கணித்தார். இதே கட்சிதான் 2005ம் ஆண்டு ராஜபக்ச அதிபராவதற்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் தெற்கு மாகாணத்தில் உள்ள வீரகேதியாவில் 1945ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி பிறந்த ராஜபக்ச கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வி பயின்றார். பின்னர், சுதந்திர கட்சியின் வேட்பாளராக பெலியாட்டா தொகுதியில் இருந்து 1970ம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 24. அதன் மூலம் மிக இளவயதில் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையைப் பெற்றார். 1977ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த இவர் 1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஹம்பன்தோடா தொகுதியில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தேர்வானார். 1994 முதல் 2001ம் ஆண்டு வரை அன்றைய அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

Share this post


Link to post
Share on other sites

இலங்கை தேர்தல் முடிவு எதை காட்டுகிறது..? இலங்கை அதிபர் தேர்தலில் சக்திவாய்ந்த அதிபர் ராஜபக்சவைத் தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றுள்ளார் சிறிசேனா. அவரது வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் தென் பகுதியில் உள்ள அண்டை நாடான இலங்கையில் வெளியாகி உள்ள தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 1945-ம் ஆண்டு நிகழ்ந்த உலகப் போருக்குப் பின் பிரிட்டனில் நடந்த தேர்தலில் அப்போதைய சக்தி வாய்ந்த பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தோல்வி அடைந்தார். ‘பல ஆண்டுகளாகப் போரை துணிச்சலுடன் சந்தித்த பிரிட்டன் மக்கள், இப்போது புதிய யுகத்தையும் அதே துணிச்சலுடன் சந்திக்கின்றனர்’ என்று சர்ச்சில் கூறினார். அவருக்கு எதிராக விழுந்த ஓட்டுகள் அதைத்தான் பிரதிபலிக்கின்றன என்றார். அதே துணிச்சலைதான் இலங்கை மக்களும் இந்த தேர்தலில் வெளிப்படுத்தி உள்ளனர். அந்தத் துணிச்சல்தான் அதிபர் ராஜபக்சவின் தோல்வியை உறுதி செய்துள்ளது. ‘எங்கள் ஓட்டுகளை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது’ என்பதையும் இலங்கை மக்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனாவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அண்டை நாடான இலங்கையுடன் புதிய நல்லுறவை மேம்படுத்த அவருக்கு அழைப்பும் விடுத்துள்ளார். ஆனால், இந்த வெற்றி எதைக் காட்டுகிறது என்பதை ஆராய வேண்டும். முதலில் இலங்கையில் நடந்த தேர்தல் இரண்டு எதிர் எதிர் கட்சிகளுக்கு இடையில் நடந்தது அல்ல. இலங்கையில் ராஜபக்சவுக்கு செல்வாக்கு அதிகம். விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டவர். தீவு நாடான இலங்கையில் ராணுவ பலத்துடன், பிரபலமான புள்ளி என்ற பிம்பத்துடன், குடும்ப அரசியலுடன் அதிபராகத் திகழ்ந்தவர் ராஜபக்ச. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ராஜபக்ச அரசில் அமைச்சராக இருந்த சிறிசேனா. எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர். எனினும் பல ஆண்டுகளாக ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். இரண்டாவதாக இந்த தேர்தலில் சிறிசேனாவின் வெற்றி என்பதைவிட ராஜபக்சவை மக்கள் வெறுத்து ஒதுக்கி உள்ளனர் என்பதைதான் அதிகம் காட்டுகிறது. அதிபராக விடுதலைப் புலிகளை ஒடுக்கியது ராஜபக்சவின் சாதனையாக இருந்தால், தேர்தல் தோல்வி அவருக்கு மிகப்பெரிய சரிவு. ஆனால், விடுதலைப் புலிகளை ஒடுக்கும் விஷயத்தில் ராஜபக்சவுக்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களுக்கும் ராணுவத்துக்கும் கருத்தொற்றுமை இல்லை. அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள், அரசியல் எதிர்ப்புகள் இருந்தன. அந்த பிரச்சினைக்கு முடிவு கட்டினார் ராஜபக்ச. சர்வாதிகாரம் கொண்ட அதிபராக தன்னை அமைத்துக் கொண்டார். அதன்மூலம் இலங்கை முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அதன்பின் தான் விடுதலைப் புலிகளுடனான கடைசி கட்ட போரின் போது, பிரபாகரனுக்கு முடிவு கட்ட முடிந்தது. இதற்காக தனது ஒரு சகோதரரை (கோத்தபய ராஜபக்ச) பாதுகாப்புத் துறை செயலாளராக்கினார். மற்றொரு சகோதரரை (பசில் ராஜபக்ச) பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சராக்கினார். இன்னொரு சகோதரரை (சாமல் ராஜபக்ச) நாடாளுமன்ற சபாநாயகராக்கினார். மேலும் ராஜபக்சவின் மகன் நமல் அரசியல் வாரிசாக உருவெடுத்துள்ளார். இவர்கள் மூலம் அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். அதனால்தான் புலிகளுடனான கடைசிக் கட்ட போரை தான் நினைத்தது போல் நடத்த முடிந்தது. ஆனால் குடும்ப அரசியலால்தான் அவரால் தோல்வியைத் தடுக்க முடியவில்லை என்று அரசியல் ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். மூன்றாவதாக, தமிழர்களும் முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் சிறிசேனாவுக்கு ஓட்டளித்துள்ளனர். இந்த நிலையில் தமிழர்கள், முஸ்லிம்களின் நம்பிக்கையை எத்தனை நாட்களுக்கு சிறிசேனா காப்பாற்ற நினைப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக, அதிகாரப் பரவல் கொண்டு வரப்படுமா? தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குவிக்கப்பட்ட ராணுவ வீரர்களை விலக்கிக் கொள்வாரா? இலங்கை போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், சித்ரவதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராஜபக்ச முன்வரவில்லை. காணாமல் போன தமிழர்கள் பலரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக போருக்குப் பின்னர் தமிழர்களின் மறுவாழ்வுக்காக தான் அமைத்த எல்.எல்.ஆர்.சி என்ற குழு அளித்த பரிந்துரைகளை ராஜபக்ச நிறைவேற்றவில்லை. ஆனால் வெற்றி பெற்ற சிறிசேனா, வடக்கு மாகாணத்தில் மீண்டும் ராணுவம் குவிக்கப்பட மாட்டாது என்று ஏற்கெனவே கூறியுள்ளார். மாங்க் கட்சி என்றழைக்கப்படும் ஜேஎச்யூ, வலதுசாரி ஜேவிபி ஆகிய கட்சிகளின் ஆதரவு பெற்ற சிறிசேனாவுக்கு, அதிகாரப் பரவலாக்கத்துக்கு அனுமதி அளிக்க அவை பரிசீலிக்கலாம். அதேசமயம் கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர்தான் சிறிசேனா. அதற்கு முன் கடந்த 1970-ம் ஆண்டு ஜேவிபி அமைப்பினர் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்தான் சிறிசேனா என்பதை மறந்து விடக்கூடாது. எனவே இலங்கையில் பெரும்பான்மை அரசியலுக்கு கிடைத்த தோல்வி என்று நினைத்தால் தவறாக இருக்கும். அதற்குப் பதில் சில விஷயங்களில் இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி எனலாம். சீன அதிபர் ஜி ஜிங்பிங், ராஜபக்சவுக்கு அதிக ஆதரவு அளித்தார். சீனா பல ஒப்பந்தங்களை ராஜபக்ச அரசுடன் செய்து கொண்டது. தான் ஆட்சிக்கு வந்தால் அந்த ஒப்பந்தங்களை ரத்து செய்வேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறிசேனா வாக்குறுதி அளித்தார். அப்படி அவர் செய்தால், சீனாவுக்குப் பெரும் பின்னடைவுதான். எனினும், இலங்கை மேம்பாட்டு திட்டங்களில் இந்தியா பலனடையும் வகையில் சீனாவை ஒதுக்கி விடுவார்கள் என்று இப்போதைக்கு நினைக்க முடியாது. ஆனால், ‘இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகளுடன் சம அளவில் நல்லுறவு ஏற்படுத்துவேன்’ என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். இலங்கையில் புதிய அரசை ஏற்படுத்த மக்கள் காட்டிய ஒற்றுமை, நம்பிக்கை, துணிச்சலைபோல், புதிதாக அமையும் சிறிசேனா அரசுடன் நல்லுறவை நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள இந்திய அரசும் துணிச்சலுடன் களமிறங்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites
sirisena_2274649f.jpg இந்தியாவுடனான உறவை மேம்படுத்த முயற்சி: இலங்கை புதிய அதிபர் உறுதி இந்தியாவுடனான உறவை மேம்படுத்த அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். சர்வாதிகாரம், ஊழல், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் என இருந்து வந்த ராஜபக்சவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. ராஜபக்சவின் கட்சியில் இருந்து விலகி, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனா 51.3 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். 47.6 சதவீத வாக்குகளுடன் ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். ஊழலை வேரறுப்பதுடன், அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம் நாட்டில் ஜனநாயக சீர்திருத்தத்தைக் கொண்டு வருவேன் என்று உறுதியளித்த சிறிசேனா, வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நாடெங்கும் மக்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இலங்கை பங்குச் சந்தையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உச்சத்தை எட்டியுள்ளது. ராஜபக்சவைப் போல மைத்ரிபால சிறிசேனாவும் புத்த மதப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவையும் அவர் பெற்றிருந்ததே இந்த வெற்றிக்குக் காரணமாகும். புதிதாக அதிபர் பதவிக்கு வந்துள்ள சிறிசேனா, வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தற்போது சீனாவின் பக்கம் அதிகம் சாய்ந்துள்ள நிலையில் இருந்து நாட்டை சமநிலைக்குக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிசேனா வெற்றி பெற்றவுடன் முதலாவதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்த மாற்றத்தை வரவேற்றதுடன் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதற்காக‌ ராஜபக்சவையும் பாராட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிசேனாவை தொலைபேசியில் அழைத்து தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் பல ஆண்டுகளாக வரலாற்று ரீதியான உறவை இலங்கை கொண்டிருக்கிறது. சமீபகாலமாக ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுடனான உறவில் அவ்வப்போது உரசல் ஏற்பட்டு வந்தது. ஆனால் மைத்ரிபால சிறிசேனா, 'இந்தியாவுடனான எங்கள் உறவை பலப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார். மேலும் அவர், "இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியம். ஆனால் அதேசமயம் நாங்கள் சீன முதலீட்டாளர்களுக்கு எதிரானவர்களும் அல்ல. சீனாவுடனும் நாங்கள் நல்ல உறவைக் கொண்டிருப்போம்" என்றார். சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ, 'சீனாவுடன் நட்புறவை இலங்கை பின்பற்றும் என்று நம்புவதோடு, ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட முதலீட்டுத் திட்டங்களுக்கும் அது ஆதரவளிக்கும் என்று நம்புவதாக' கூறியுள்ளார். நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் சிங்கள பவுத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் ராஜபக்ச பிரபலமாக இருந்தாலும், வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் இஸ்லாமிய மக்களின் ஆதரவுகளை மிக அதிகளவு பெற்றதாலேயே சிறிசேனா வெற்றி பெற்றிருக்கிறார் என்று தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 2009ம் ஆண்டில் விடுதலைப் புலிகளை அழித்ததைத் தொடர்ந்து 2010ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரும்பாண்மையான வெற்றியைப் பெற்று ராஜபக்ச அதிபரானார். ஆனால் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம், சர்வாதிகாரம் ஆகிய காரணங்களால் அவர் தொடர்ந்து விமர்சனங்களைச் சந்தித்து வந்தார். அவரின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் அதில் நிறைந்திருந்த‌ ஊழல் குற்றங்கள் மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், மூன்றாவது முறையாகவும் அதிபர் பதவியில் அமரலாம் என்ற நோக்கத்தில் தன் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே அதிபர் தேர்தலை அறிவித்தார். ஆனால் தன்னுடன் இரவு உணவை எடுத்துக்கொண்ட சிறிசேனாவே அடுத்த நாள் காலையில் தனக்கு எதிரான போட்டி வேட்பாளராக நிற்பார் என்று ராஜபக்ச நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை. "ராஜபக்ச பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளில் எதிர்க்கட்சிகளுக்கு விருப்பமில்லை என்றும் அதன் காரணமாகவே அவருக்கு எதிராக அனைவரும் ஒன்று திரண்டனர்" என்று ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்'ஸ் ரேட்டிங் சர்வீஸஸ் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிபருக்கு இருக்கக் கூடிய அதிகபட்ச அதிகாரங்கள் குறைக்கப்படும் என்று தெரிவித்த சிறிசேனா இன்னும் 100 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடனான 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரம் கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல்கள் உள்ளிட்ட பல ஊழல் குற்றங்களை விசாரிக்க உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Share this post


Link to post
Share on other sites
Desktop5_2274684f.jpg இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து தமிழக அரசியல் கட்சிகள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளன. கருணாநிதி, தலைவர், தி.மு.க வெற்றி பெற்றவரும், தோல்வி அடைந்தவரும் கடந்த காலத்தில் நடைபெற்ற செயல்களுக்கு யார் பொறுப்பு என்பதை எண்ணிப் பார்த்து இனிமேலாவது திருத்திக் கொள்ள வேண்டும். போர்க் குற்றங்களுக்காக ராஜபக்சவை விசாரிக்க வேண்டும் என்பது தொடர்பாக நாங்கள் ஏற்கெனவே வலியுறுத்தியது அப்படியே இருக்கிறது. பழ.நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய முன்னணி இலங்கைத் தேர்தலில் ராஜபக்ச அடைந்துள்ள படுதோல்வி வரவேற்கத்தக்கது. ஆனாலும், இது தமிழர்களுக்கு முழுமையான மகிழ்ச்சியளிப்பது ஆகாது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல், போர்க்குற்றம் ஆகியவற்றை விசாரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையம் அமைத்த விசாரணைக் குழுவை தனது நாட்டுக்குள் அனுமதித்து சுதந்திரமாக விசாரணை நடத்த புதிய அதிபர் துணை நிற்க வேண்டும். தமிழர் பகுதியிலிருந்து சிங்கள ராணுவத்தை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். விஜயகாந்த், தலைவர், தேமுதிக ராஜபக்ச படுதோல்வி அடைந்துள்ளார் என்ற செய்தி ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த உலகத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தண்டனை அடைந்துதான் ஆக வேண்டும். சிறிசேனா தலைமையிலான புதிய அரசு, அநீதி இழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளை வழங்கி, தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே குடியமர்த்தி அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும். ராமதாஸ், நிறுவனர், பாமக ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமான ராஜபக்ச இலங்கை மக்களால் தண்டிக்கப்பட்டு பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ராஜபக்சவை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று சிறிசேனா வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது வடகிழக்கு மாகாண தமிழர்களின் வாக்குகள்தான் என்பதை மறுக்க முடியாது. இத்தகைய சூழலில், தமிழர்களுக்கு நீதியையும், உரிமைகளையும் பெற்றுத்தருவது இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமுதாயத்தின் கடமையாகும். டி.ராஜா, தேசிய செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த தேர்தலில் சிறிசேனா வெற்றிப் பெற்றார் என்பதை விட ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் முக்கியம். ராஜபக்ச தோற்கடிக்க முடியாதவர் என்று உருவாக்கப்பட்ட பிம்பம் உடைந்து விட்டது. ராஜபக்சவின் சர்வாதிகாரப் போக்கை, குடும்ப அரசியலை மக்கள் நிராகரித்து விட்டனர். புதிய அதிபர் உறுதியளித்தபடி ஜனநாயகத்தை நிலைநாட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதன் பிறகாவது தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு உரக்க குரல் கொடுக்க வேண்டும். ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை நடத்தப்படவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்படவில்லை. இந்தப் பின்னணியில் நடைபெற்ற இலங்கைத் தேர்தலில் ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு சிறிசேனா வெற்றிப்பெற்றது வரவேற்கத்தக்கது. இந்த வெற்றி தமிழர்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தம் கூறியது போல, சிறிசேனா உறுதியளித்தபடி, ஜனாதிபதியின் அதிகாரத்தை கட்டுப்படுத்தி நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை கூடுதலாக்கினால், தமிழர்களின் பிரச்னைகளை பேசுவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். ஜி.கே.வாசன், தலைவர், தமாகா (மூ) இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் தோல்வி ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி. தமிழர்களின் நியாயமான எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலும் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்க இருக்கும் ஆட்சியாளர்கள் அனைத்து நல்ல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சிங்கள மக்களுக்குரிய உரிமைகள் அனைத்தும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். கி.வீரமணி, தலைவர், தி.க. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சிறிசேனா, ராஜபக்சவை விட 5 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். இந்த 5 சதவீத கூடுதல் வாக்குகள் தமிழர்களாலும், இஸ்லாமிய சகோதரர்களாலும்தான் கிடைத்தது என்பதை மனதில் கொண்டு சிறிசேனா செயல்பட வேண்டும். தமிழருவி மணியன், நிறுவனர், காந்திய மக்கள் கட்சி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறிசேனா, எந்தவகையிலும் ஈழத் தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வை உருவாக்குவார் என்பதற்கான மிகச்சிறிய சமிஞ்கைகள் கூட இல்லை. எனவே, ராஜபக்சவின் வீழ்ச்சி நமக்கு மகிழ்ச்சியை தந்தாலும், சிறிசேனாவின் வெற்றி ஈழத் தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வை உருவாக்கித் தருமா என்பதை காலம்தான் வெளிப்படுத்த வேண்டும். தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இனவெறியை வைத்து அரசியல் நடத்த முனையும் எல்லோருக்கும் இந்த தேர்தல் முடிவு ஒரு பாடமாகும். தற்போது மைத்ரிபால அதிபராக வெற்றி பெற்றிருப்பது தமிழ்மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதோ நம்பிக்கை அளிக்கக்கூடியதோ அல்ல. எனினும் முதல்கட்டமாக ஜனநாயக வழியில் ராஜபக்சவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்ற ஆறுதல் கிடைத்துள்ளது. தமிழிசை சவுந்திரராஜன், பாஜக மாநிலத் தலைவர் யாராக இருந்தாலும் சட்டத்துக்குப் புறம்பாக கொடுங்கோல் ஆட்சி புரிந்தாலோ, ஓர் இனத்தை பழிவாங்கினாலோ அவர்கள் நிச்சயம் தோல்வி அடைவார்கள் என்பதை வரலாறு மீண்டும் நிரூபித்திருக்கிறது. மேலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர், மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் இலங்கைத் தேர்தலில் ராஜபட்சவுக்கு கிடைத்த தோல்வியை வரவேற்றுள்ளனர்.

Share this post


Link to post
Share on other sites

நாட்டின் தேச விரோத செயல்கள் நடந்தால் விட மாட்டேன். கொழும்பு: இலங்கையில் பெரும் சர்வாதிகார இறுமாப்புடன் இருந்த ராஜபக்சே தோல்வியை தழுவினாலும் , இலங்கையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த நபர் என்ற பெயர் என்றும் மாறாது என்றும், இது தொடர்பான அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்றும் அவரது சுதந்திராகட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசிய ராஜபக்சே, புதிய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்பேன் என்றும் , அதே நேரத்தில் தேச விரோத செயல்கள் நடந்தால் நான் விமர்சிக்கவோ, குரல் கொடுக்கவோ தயங்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசும போது கட்சி அவரது அமைச்சர் சகாக்கள், எம்.பி.,க்கள் கண்ணீர் விட்டனர். பதவி இழந்த பின்னர் நடந்த முதல் கூட்டத்தில் ராஜபக்சே மேற்கண்டவாறு முழங்கினார். தேர்தலில் மொத்தம் பதிவான ஒன்றரை கோடி ஓட்டுக்களில் ராஜபக்சே பெற்ற மொத்த ஓட்டுக்கள் 57 லட்சத்து 68 ஆயிரத்து 90 ஓட்டுக்களும் (47.58 சதவீதம் ) , பொது வேட்பாளர் சிறிசேனா பெற்ற மொத்த ஓட்டுக்கள்; 62 லட்சத்து 17 ஆயிரத்து 162 ஓட்டுக்களும் ( 51. 28 சதவீதம் ) . தோல்வி முழுமையாக கிடைக்க பெற்றதும், ராஜபக்சே தனது அலுவலகத்தில் அமைச்சர் சகாக்கள், மற்றும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசினார். கட்சியின் தலைமை பொறுப்பை நான் விட்டு கொடுக்கப்போவதில்லை. நமது கட்சியினர் எவ்வித வன் செயல்களிலும் ஈடுபடாமல் , சாத்வீகமான முறையில் செயல்பட வேண்டும். புதிய அரசுக்கு அனைத்து வகையிலும் நான் துணை நிற்பேன். ஆனால் அதே நேரத்தில் நாட்டின் தேச விரோத செயல்கள் நடந்தால் விட மாட்டேன். இதில் எனது நிலையை நான் மாற்றி கொள்ள மாட்டேன். இவ்வாறு பேசி முடிக்கும் போது சக நிர்வாகிகள் கண்ணீர் கலங்கினர். ரணில் விக்கிரமசிங்கே : கூட்டம் முடிந்து வெளியே வந்த மூத்த நிர்வாகிகள் தோல்வி குறித்து கூறுகையில்; இலங்கையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை ராஜபக்சேவுக்கு உண்டு. இதனை இலங்கை மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். என்று கூறினர். நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்று இருக்கும் ரணில் விக்கிரமசிங்கேவும் ஆம் ராஜபக்சேவுக்கு கவுரவம் எப்போதும் இருக்கும் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.

Share this post


Link to post
Share on other sites

இலங்கையின் அதிபராக, அசைக்க முடியாத செல்வாக்குடன், கடந்த, 10 ஆண்டுகளாக கோலோச்சியவர் மஹிந்தா ராஜபக்சே, 69. இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்த இவரின் ஆட்சி காலத்தில் தான், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செல்வாக்குடன் இருந்த விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆலோசனை:மூன்றாவது முறையும் அதிபராகும் திட்டத்துடன், தன் பதவிக் காலம் முடிவடைவதற்கு, இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில், ஜோதிடர் ஒருவர் கூறிய ஆலோசனையின்படி, முன் கூட்டியே தேர்தலை சந்திக்க, ராஜபக்சே முடிவு செய்தார். இதையடுத்து, அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கு அடுத்த நாளே, ராஜ பக்சே அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்தவரும், சுதந்திரா கட்சியின் பொதுச் செயலராக இருந்தவருமான மைத்ரிபால சிறிசேன, தன் பதவிகளை ராஜினாமா செய்தார். ராஜபக்சே, சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாகவும், குடும்ப ஆட்சி நடத்துவதாகவும், ஊழல் அதிகரித்து விட்டதாகவும், சிறிசேன தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி உட்பட, 49 எதிர்க்கட்சிகள் ஆதரவுடன், ராஜபக்சேயை எதிர்த்து, அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டார். ராஜினாமா: தமிழ் தேசிய கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சிறிசேனவை ஆதரித்தன. ராஜபக்சே அமைச்சரவையில் இருந்த முக்கிய பிரமுகர்கள் சிலரும், கடைசி நேரத்தில் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, சிறிசேனவை ஆதரித்தனர். இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த தேர்தலில் கடும் நெருக்கடியை சந்தித்த ராஜபக்சே, இந்தியாவின், மும்பையிலிருந்து இந்தி நடிகர்களை எல்லாம் அழைத்து வந்து, தனக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுத்தினார். இந்நிலையில், 1.55 கோடி வாக்காளர்கள் உள்ள இலங்கையில், நேற்று முன்தினம், அதிபர் தேர்தல் நடந்தது. பெரிய அளவில் வன்முறை எதுவும் நிகழவில்லை. இந்த தேர்தலில், 72 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகள் அனைத்தும், நேற்று முன்தினம் இரவே எண்ணப்பட்டன. தபால் ஓட்டுகளில், சிறிசேன முன்னிலை வகித்தார். இதையடுத்து, அனைத்து மாகாணங்களிலும் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில், கொழும்பு, கண்டி, புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை, நுவரேலியா, பதுளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பெரும்பாலான மாகாணங்களில், சிறிசேனவே முன்னிலை வகித்தார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களில், ராஜபக் ஷேவுக்கு மிகக் குறைந்த ஓட்டுகளே பதிவாகியிருந்தன. அதேபோல், முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் கிழக்கு மாகாணத்திலும் சிறிசேனவின் கையே ஓங்கியிருந்தது. சிங்களர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காலி, மாத்தளை, ஹம்பந்தோட்டை, ரத்தினபுரி, அனுராதபுரம் போன்ற மாகாணங்களில் ராஜபக் ஷேவுக்கு அதிகமான ஓட்டுகள் கிடைத்திருந்தன. இறுதியில், நான்கு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ராஜபக் ஷேயின், 10 ஆண்டு கால ஆட்சிக்கு சிறிசேன முற்றுப்புள்ளி வைத்தார். சிறிசேனா, 62 லட்சத்து, 17 ஆயிரத்து, 162 ஓட்டுகள் (51 சதவீதம்) பெற்றார். ராஜபக் ஷேவுக்கு, 57 லட்சத்து, 68 ஆயிரத்து, 90 ஓட்டுகள் (47 சதவீதம்) கிடைத்தன. ஓட்டு எண்ணிக்கை துவக்கத்திலேயே, தன் தோல்வி உறுதி என தெரிந்து விட்டதால், அதிபர் மாளிகையான, 'டெம்பிள் ட்ரீ'யை விட்டு, தன் குடும்பத்தினருடன், நேற்று காலையிலேயே, ராஜபக் ஷே வெளியேறினார். முன்னதாக, பிரதான எதிர்க்கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்கேவுடன் பேச்சு நடத்தினார். பின், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, இலங்கையின் ஏழாவது அதிபராக மைத்ரிபால சிறிசேன, நேற்று மாலை பதவியேற்றார். அவருடன், ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, பிரதமராக பதவியேற்றார். புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிறிசேன, இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 'பேயை விரட்டினர்' தமிழர்கள்? தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், ராஜபக் ஷே, கடந்த வாரம் பிரசாரம் செய்தார். அப்போது, தமிழர்களிடம், 'தெரியாத தேவதையான சிறிசேனவை விட, தெரிந்த பேயான எனக்கே ஓட்டளிக்க வேண்டும்' என, உருக்கமாகவும், கெஞ்சலாகவும் கேட்டார். ஆனால், 'தெரிந்த பேயை விட, தெரியாத தேவதையே மேல்' என, ஓட்டுச் சீட்டின் மூலம், ராஜபக் ஷேவுக்கு பதிலடி கொடுத்துள்ளனர், தமிழர்கள். விவசாயி மைத்ரி பாலா சிறிசேன : மைத்ரி பாலா சிறிசேன, பொலனருவை பகுதியில் 1951,செப்.,3ல் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். பொலனருவை ராயல் கல்லூரியில் படித்தார். குண்டசாலையில் உள்ள இலங்கை விவசாயக் கல்லூரியில் டிப்ளமோ பட்டம் பெற்றார். 1980ல் ரஷ்யா சென்று அரசியல் அறிவியலில் டிப்ளமோ படித்தார். கூட்டுறவு சங்கத்திலும், கிராம அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு ஜெயந்தி புஷ்பகுமாரி என்ற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.இளம்வயதில் கம்யூனிசத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இலங்கை சுதந்திரக் கட்சியின், இளைஞர் முன்னணியில் 1967ல் இணைந்தார். 1971ல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறை சென்றார். சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தேசிய பொதுச் செயலராக 1983ல் நியமிக்கப்பட்டார். முதன்முதலில் 1989 பார்லிமென்ட் தேர்தலில் பொலனருவை மாவட்டத்தில் போட்டி யிட்டு வென்றார். 1994 முதல் இலங்கை அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் பொதுசெயலராகவும் இருந்துள்ளார். 2014, நவ., 21ல் ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியிலிருந்து விலகினார்.எதிர்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் ஏழாவது அதிபரானார்.

Share this post


Link to post
Share on other sites

கருணா உட்பட மூவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட திட்டம்? கொழும்பு விமான நிலையத்தில் 'உஷார்' பாதுகாப்பு! கொழும்பு: கருணா உட்பட 3 முக்கிய அரசியல் பிரமுகர்கள் வெளிநாட்டு தப்பி ஓட திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கொழும்பு விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன நேற்று பதவியேற்றார். அதேபோல் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியேற்றுக் கொண்டார்.இந்த நிலையில் ராஜபக்சே தமது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு தப்பி ஓட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அம்பாந்தோட்டையில் உள்ள தமது ஊருக்கு மூட்டை முடிச்சுகளுடன் சென்று தஞ்சமடைந்துவிட்டார் ராஜபக்சே.இதனிடையே விடுதலைப் புலிகள் இயக்கத்தை காட்டிக் கொடுத்த கருணா மற்றும் 2 முக்கிய அரசியல் பிரமுகர்கள் இலங்கையைவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனைத் தொடர்ந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அந்த மூவரும் பயன்படுத்தும் வாகனங்களின் விவரங்களும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this post


Link to post
Share on other sites
rajapaksa.jpgrajapaksa1.jpg "தெரிந்த பிசாசு' எனத் தன்னைத்தானே சொல்லிக் கொண்டு, ஒரு நாட்டின் அதிபர் தேர்தலில் வாக்குக் கேட்ட ஒரு ஆசாமி, உலகத்திலேயே ராஜபக்சே மட்டுமாகத்தான் இருக்கமுடியும். இலங்கையில் அதிபர் தேர்தல் அறிவிக்கப் பட்ட நவம்பர் 20ஆம் தேதி முதல் வாக்களிப்பு நாளான ஜனவரி 8 வரையில், 1520 தேர்தல் விதிமீறல், வன்முறை புகார்கள் பதிவாகியுள்ளன என் கிறது அந்நாட்டின் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளில் ஒன்றான, ’நீதியான- சுதந் திரமான தேர்தலுக்கான பிரச்சார- கபே’. புகார்களில் 1321 தேர்தல் விதிமீறல்களும் 198 வன் முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. 28 இடங்களில் துப்பாக்கிச்சூடுகள் நடந்துள்ளன. ஒரு உயிரிழப்பும் ஏற்பட் டுள்ளது. பொதுச்சொத்துகளை தவ றாகப் பயன்படுத்தியது குறித்து 482 புகார்கள் பதிவாகியுள்ளன; குறிப்பாக இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த பேருந்துகள் ராஜபக்சேவின் கட்சிக்காகப் பயன்படுத்தப்பட்டன. சட்ட விரோதமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது தொடர்பாக 816 புகார்களும் வந்துள் ளன. உச்சகட்டமாக, சிறைக் கைதி களை வைத்து ராஜபக்சேவின் பிரச்சார மேடையை அமைத்ததும் நடந்தேறியது. கம்புறுப்பிட்டியா என்ற இடத்தில் டிசம்பர் 14ஆம் தேதி நடந்த பிரச்சாரத்தில்தான் இந்தக் கூத்து அரங்கேறியது.

Share this post


Link to post
Share on other sites
10-1420882415-rajapaksa9-600.jpgராணுவத்தின் ஆதரவுடன் ஆட்சியில் தொடர முயற்சித்த "ராஜபக்சே கோஷ்டி"- திடுக் தகவல்! கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையிலும் ராணுவத்தின் உதவியுடன் ஆட்சியில் நீடிக்க ராஜபக்சே குடும்பத்தினர் கடைசிநேரத்தில் படுதீவிர முயற்சித்ததாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அதுரலிய ரத்ன தேரர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரிபால் சிறிசேன வென்று பதவியேற்றார். புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் பதவியேற்றுள்ளார்.இந்நிலையில் இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹினிக்கு ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் அதுரலிய ரத்ன தேரர் அளித்த பேட்டி ஒன்றில், இலங்கை தேர்தல் ஆணையாளருக்கு ராஜபக்சே குடும்பத்தினரிடம் இருந்து கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.இந்த நெருக்கடியைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சுதந்திரமாக, நேர்மையான முறையில் தேர்தலை நடத்தியதற்காக தேர்தல் ஆணையாளரைப் பாராட்ட வேண்டும், ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க ராஜபக்சே குடும்பத்தினர் என்னவெல்லாம் நெருக்கடி கொடுத்தார்கள் என்பதை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய பகிரங்கப்படுத்த வேண்டும்.ராணுவத்தின் உதவியுடன் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க ராஜபக்சே குடும்பம் முயற்சித்தது என்று கூறியிருக்கிறார்.மேலும் மகிந்த ராஜபக்சே தோல்வியை ஏற்றுக் கொண்ட போதும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவினால் இதை தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிர்ச்சியில் உறைந்துபோனவராக இருந்ததாகவும் ஜாதிக ஹெல உறுமயவினர் கூறுகின்றனர்.கோத்தபாய ராஜபக்சேதான், ஆட்சியில் மகிந்த ராஜபக்சே தொடர்ந்து நீடிப்பதற்கு பல வழிகளையும் கையாண்டதாகவும் கூறுகின்றனர். இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தின் மூலம் ஆட்சியில் நீடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அட்டர்னி ஜெனரல் இதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.அதேபோல்தான் தேர்தல் ஆணையாளரின் அலுவலகத்துக்கே கோத்தபாய சென்று தேர்தல் முடிவுகளை நிறுத்த முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ராஜபக்சே குடும்பத்தினரின் நெருக்கடிகளுக்கு எவரும் உடன்படாத காரணத்தால் வேறுவழியின்றி அமைதியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this post


Link to post
Share on other sites

கோத்தபாய ராஜினாமா! பாதுகாப்பு செயலராக பசநாயக்க நியமனம்! ராணுவ தளபதியும் விலகுகிறார்! 10-1420880810-gotabaya-rajapaksa-basnaya கொழும்பு: இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேன பதவியேற்ற நிலையில் அந்நாட்டின் பாதுகாப்பு துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜினாமா செய்த நிலையில் பசநாயக்க அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் ராணுவம் மற்றும் கடற்படை தளபதிகளையும் ராஜினாமா செய்ய மைத்ரிபால உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றதைத் தொடர்ந்து அவரால் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றனர். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முதலில் தமது பதவியை ராஜினாமா செய்தார்.அவரைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலராக இருந்த மகிந்தவின் சகோதரர் கோத்தபாயவும் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து புதிய பாதுகாப்பு செயலராக சுற்றுச் சூழல் அமைச்சக செயலர் பசநாயக்கவை நியமித்து அதிபர் மைத்ரிபால உத்தரவிட்டுள்ளார்.இதேபோல் அதிபரின் செயலாளராக பொதுநிர்வாக அமைச்சகத்தின் செயலாளர் அபயகோன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவைத்தான் பாதுகாப்பு செயலராக நியமிக்க மைத்ரிபால் சிறிசேன முடிவு செய்திருந்தாராம். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பசநாயக்கவை மைத்ரிபால நியமித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே தற்போதய இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க, கடற்படைத் தளபதி ஜயந்த பெரேரா ஆகியோரை ராஜினாமா செய்யவும் மைத்ரிபால உத்தரவிட்டுள்ளார்.அதே நேரத்தில் விமானப் படை தளபதியான குணதிலக வரும் 19-ந் தேதி ஓய்வு பெற உள்ளதால் அவர் தாமாக ஓய்வு பெறட்டும் என்றும் மைத்ரிபால அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

Share this post


Link to post
Share on other sites

வீழ்ந்தார் ராஜபக்சே- பட்டாசு வெடித்து கொண்டாடிய கொண்டாடிய பாம்பன் மீனவர்கள் ராமேஸ்வரம்: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்ததை பாம்பன் மீனவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.இலங்கையில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் மைத்ரி பால சிறிசேனவிடம் முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே படுதோல்வி அடைந்தார்.ராஜபக்சேவின் இத்தோல்வியை ராமேஸ்வரம் மீனவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இலங்கை கடற்படையினரால் நாள்தோறும் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.அப்படி சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை விடுவிக்காமல் இலங்கை அரசு தங்கள் பிடியிலேயே வைத்துள்ளது. ராஜபக்சேவின் இந்த செயலை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் பல கோடி மதிப்புள்ள படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.அப்படிப்பட்ட ராஜபக்சே இந்த தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்பதே தமிழக மீனவர்களின் எண்ணமாக இருந்தது. தற்போது, தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்ததன் மூலம் தமிழக மீனவர்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது.இதனை கொண்டாடும் வகையில், பாம்பன் ஊராட்சிமன்ற தலைவரும், ம.தி.மு.க ஒன்றிய செயலாளருமான பேட்ரிக் தலைமையில் மீனவர்களும், ம.தி.மு.கவினரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியினைப் பகிர்ந்து கொண்டனர்.

Share this post


Link to post
Share on other sites

தோல்விக்கணத்திலும் கூட ராணுவத்திற்கு அழுத்தம் கொடுத்தார் ராஜபக்ச: ரஜித சேனரத்ன தோல்வியடைவது உறுதியான பிறகும் கூட இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச, தமிழர் பகுதிகளில் ராணுவத் துருப்புகளை ஆங்காங்கே நிறுத்த ராணுவ தலைமையை தொடர்பு கொண்டதாக புதிய அதிபர் சிறிசேனாவின் செய்தி தொடர்பாளர் ரஜித சேனரத்ன சனிக்கிழமை தெரிவித்துள்ளார். கடைசி வாக்குகள் எண்ணப்படும் வரை காத்திருக்காமல் தனது தோல்வியை ராஜபக்ச ஒப்புக் கொண்டதற்காக அவர் மீது பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த ரஜித சேனரத்ன, “துருப்புகளை ஆங்காங்கே கொண்டு நிறுத்த ராணுவத்தலைமைக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது, ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. கடைசி நேரத்திலும் ராஜ்பக்ச அலுவலகத்தில் இருந்தார். ஆனால், தோல்வி உறுதியானதும் வேறுவழியின்றி அவர் ஒப்புக் கொண்டு அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறினார்” என்றார். இலங்கை ராணுவத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜெனரல் தயா ரத்னாயகவுக்கு ராஜபக்ச நெருக்கடி கொடுத்துள்ளார். புதிய அதிபரின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் ரஜித சேனரத்ன, சுகாதார அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. ராஜபக்ச நேரடியாக ராணுவத் தலைமையை தொடர்பு கொண்டாரா அல்லது கோத்தபய ராஜபக்சவைத் தொடர்பு கொண்டு முயற்சித்தாரா என்பது பற்றிய கேள்விக்கு சேனரத்ன பதிலளிக்க மறுத்தார். “ராஜபக்ச தொடர்ந்து அலுவலகத்தில் இருக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் சதி இருந்து வந்தது. தேர்தல் விதிமுறைகளை மீறி கோத்தபய தேர்தல் கூட்டங்களில் பிரச்சாரங்கள் மேற்கொண்டுள்ளார். பொது ஊழியர்கள் அரசியலில் ஈடுபடுவதை புதிய நிர்வாகம் நிறுத்தும்.” என்று சேனரத்ன உறுதி அளித்தார். தமிழ் மக்கள் வாக்களிப்பதிலிருந்து விலகிச்செல்ல அச்சுறுத்தும் விதமாக தமிழர் பகுதிகளில் ராணுவத்தை நிறுத்த பாதுகாப்பு அமைச்சகம் சதி செய்தது என்று சேனரத்ன குற்றம்சாட்டியுள்ளார். “எங்களுக்கு பழிவாங்குவதில் நம்பிக்கையில்லை, அதற்காக தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற அர்த்தமும் இல்லை.” என்றார் சேனரத்ன.

Share this post


Link to post
Share on other sites

ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழையுங்கள்: சிறிசேனாவுக்கு பிரிட்டன் பிரதமர் வேண்டுகோள் VBK-DAVID_CAMERON__2275007h.jpg பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அந்நாட்டு அதிபராக பதவியேற்றிருக்கும் மைத்ரிபால சிறிசேனாவை பிரட்டன் பிரதமர் கேமரூன் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவை வீழ்த்திய மைதிரிபால சிறிசேனா அந்நாட்டின் புதிய அதிபராக வெள்ளிக்கிழமையன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரிட்டன் பிரதமர் கேமரூன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கைக்கு நான் வந்தபோது உங்களது நாட்டில் உள்ள வளத்தையும், மக்களிடம் உள்ள திறமையும் கண்டு வியந்தேன். உங்கள் நாட்டில் இருக்கும் அத்தகைய வளங்களை பயன்ப்படுத்தி நிலையான, வளமான, ஒன்றுபட்ட நாடாக இலங்கை திகழ நீங்கள் பாடுபட வேண்டும். ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் நடந்துள்ள தேர்தல் அளித்திருக்கும் முடிவுகள் மகிழ்ச்சியளிக்கிறது. மக்களால் தோற்கடிக்கப்பட்ட ராஜபக்ச, இலங்கை மக்கள் ஜனநாயக ரீதியில் அளித்திருக்கும் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளார். முந்தைய காலகட்டத்தில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் மேற்கொண்டு வரும் விசாரணைக்கு தங்களது அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணையின் மூலம் மட்டுமே இலங்கை கண்ட மீறல்கள் வெளிச்சத்துக்கு தெரியவரும். அப்போது இலங்கை மக்களுக்கு பிரகாசமான, அமைதியான எதிர்காலம் அமையும்" என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்டப் போரின் போது அந்நாட்டு ராணுவம் மனித உரிமைகளை மீறியதாகவும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படும் புகார்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான விசாரணையின் முடிவு வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின்படி, கடந்த 2009-ல் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் 30,000 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post


Link to post
Share on other sites

இலங்கையின் புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்: அமெரிக்கா விருப்பம் kerry_2274650h.jpg ஜான் கெர்ரி இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் அதிபர் ராஜபக்ச தோல்வியைத் தழுவியுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா அதிக வாக்குகளைப் பெற்று புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியிருப்பதாவது: தேர்தல் முடிவுகளை ராஜபக்ச ஏற்றுக் கொள்ள வேண்டும். புதிய அதிபரிடம் ஆட்சி அதிகாரத்தை அவர் சுமுகமாக ஒப்படைக்க வேண்டும். இலங்கையில் அமைதியாக தேர்தலை நடத்திய அந்த நாட்டு தேர்தல் ஆணையர், பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு அமெரிக்காவின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். போர்க்குற்ற விவகாரத்தால் அதிபர் ராஜபக்சவுக்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடுகள் நீடித்து வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Share this post


Link to post
Share on other sites

இலங்கை ஆட்சிமாற்றம்: தமிழக எதிர்பார்ப்புகள் போஸ், மீனவர் பிரதிநிதி (ராமேசுவரம்): இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப் பட்டுள்ள படகுகளையும், மீனவர்களையும் விடுதலை செய்வதுடன் தடைபட்டு நின்று போயிருக்கும் இரு நாட்டு மீனவப் பேச்சு வார்த்தையை நடத்தி தமிழக-இலங்கை மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையையும், வாழ்வாதாரத்தையும் புதிய அதிபர் பாதுகாத்திட வேண்டும். ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ, மீனவர் பிரதிநிதி, (தங்கச்சிமடம்): இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கிய பிறகு பாதுகாப்பு காரணங்களால் 1983-ம் ஆண்டு ராமேசுவரம்-தலைமன்னார் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிற சூழலில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்க வேண்டும். சசிகரன் (35) மண்டபம் அகதிகள் முகாம் வடக்கு மக்களின் வாக்குகளே இந்தமுறை அதிபர் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பதில் அதிக செல்வாக்குச் செலுத்தியுள்ளன. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் தமிழ் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை மீண்டும் அவர்களிடமே வழங்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் தமிழக அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்கள் இலங்கை திரும்ப வாய்ப்புள்ளது. மனோ கணேசன், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மைத்ரிபால ஆட்சி என்பது ஒரு விடுதலை என்றோ, ஒரு மீட்சி என்றோ நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இதை தாய் நாட்டிலும் (இந்தியா), புலம் பெயர்ந்தும் வாழும் என் உடன் பிறப்புகளும் புரிந்துகொள்ள வேண்டும். எம்.ரிஷான் ஷெரீப், எழுத்தாளர், இலங்கை மைத்ரிபால சிறிசேனவின் வெற்றிக்கு தமிழ், முஸ்லிம் மக்களது வாக்குகளே பிரதான காரணமாக அமைந்திருக்கிறது. சிறுபான்மையினருக்கு அவர் நன்றியுடையவராக இருக்க வேண்டும். கணன் சுவாமி, டொரண்டோ வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு தொழில் தொடங்கும் சலுகைகளும், தமிழ் முஸ்லிம் மக்களின் முதலீடுகளுக்கு முன்னுரிமையும் சலுகையும் அளிக்க வேண்டும். மேலும் இரட்டை குடியுரிமை போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்த புதிய அதிபர் முன்வர வேண்டும். ஷர்மிளா செய்யித், பெண் விழிப்புணர்வு செயற்பாட்டாளர், இலங்கை இதுவொரு புரட்சிகரமான ஆரம்பம், சர்வாதிகாரத்துக்கு சாவுமணி, குடும்ப அரசியலுக்கு சவுக்கடி, இனவாத அரசியலுக்கு சரியான பாடம் என்றெல்லாம் பெருமைகொள்ள நிச்சயமாக ஒன்றுமேயில்லை. சிறுபான்மை மக்களாகிய எமது அரசியல் நிலையானது ஏதேனுமொரு சாக்கில், ஏதேனுமொரு நம்பிக்கையில், ஏதேனுமொரு காரணத்தைக் கொண்டு சிங்களப் பேரினவாதத்திடம்தான் சரணாகதியடைவதாக உள்ளது. இந்த சாபக்கேட்டில் மகிந்தவின் தோல்வியும் மைத்திரியின் வெற்றியும் நமக்கு ஒன்றுதான்! செல்வரத்தினம், மேல்மொணவூர் அகதிகள் முகாம் தலைவர் சிறிசேனா தமிழர்களுக்கு நல்லது செய்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இறுதிப்போரில் தமிழர்களை கொன்று குவித்தவர் என்ற ஒரே காரணத்துக்காக ராஜபக்சவுக்கு எதிராக தமிழர்கள் வாக்களித்துள்ளனர். இலங்கையில் நல்லது நடந்தால் சரி. 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தங்கியுள்ள பெரும்பாலான அகதிகள் தாயகம் திரும்ப விரும்பவில்லை. அங்கு சென்றாலும் விவசாய வேலைதான் செய்ய வேண்டும். இல்லை என்றால் கொழும்பு போன்ற பெரிய நகரங்களுக்கு வேலை தேடிச் செல்ல வேண்டும். இங்கிருந்தால் ஏதாவது கூலி வேலை செய்தாவது பிழைத்துக் கொள்வோம். ரஞ்சினி, திருவண்ணாமலை அகதிகள் முகாம் தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணம், முல்லைத் தீவு, வவுனியா, கிளிநொச்சி போன்ற அனைத்து இடங்களிலும் சிறிசேனாவுக்கு அதிக வாக்கு கிடைத்துள்ளது. 25 ஆண்டுகளாக அகதிகளாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் தாய் நாட்டில் வசிக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு உள்ளது.

Share this post


Link to post
Share on other sites

யார் இந்த சிறிசேனா.. srisena-680x365.jpgsirisena_2274649f.jpg மைத்ரிபால சிறிசேனா புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேனா 1951 செப்டம்பர் 3-ம் தேதி பொலனறுவையில் பிறந்தார். அவரது தந்தை ஆல்பர்ட் சிறிசேனா இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரர் ஆவார். உள்ளூர் பள்ளியில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்ரிபால சிறிசேனா, பின்னர் கண்டி குண்ட சாலை விவசாயக் கல்லூரியில் 3 ஆண்டுகள் பயின்று பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து ரஷ்ய கல்வி நிறுவனத்தில் அரசியல் அறிவியலில் பட்டயப் படிப்பை முடித்தார். ஆரம்பத்தில் கம்யூனிச கொள்கைகளில் ஆர்வம் காட்டிய சிறிசேனா, 1967-ம் ஆண்டில் இலங்கை சுதந்திர கட்சியில் சாதாரண தொண்டராக சேர்ந்தார். 1971-ம் ஆண்டில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் இருந்து விடுதலை யான பின்னர் அரசியலில் மிகவும் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். 1970-களில் இலங்கை சுதந்திர கட்சியின் இளைஞர் பிரிவின் உள்ளூர் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 1980-களில் தேசிய அரசியலில் நுழைந்தார். 1989-ம் ஆண்டில் பொலன்ன றுவை தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் முதன்முத லாக காலடி எடுத்து வைத்தார். 1994-ல் நீர்ப்பாசனத் துறை இணை அமைச்சராக பதவியேற்றார். 2000-ம் ஆண்டில் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2000-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2001-ம் ஆண்டில் கட்சியின் பொதுச்செயலாளராக உயர்ந்தார். அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடியது. அந்த அரசின் அமைச்சரவையில் சிறிசேனா நதிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2004-ல் வேளாண், சுற்றுச் சூழல், நீர்ப்பாசனத் துறை அமைச்ச ராக சிறிசேனா பொறுப்பேற்றார். விடுதலைப் புலிகளின் ‘ஹிட் லிஸ்டில்’ இருந்த அவரை குறிவைத்து 2008 அக்டோபர் 9-ம் தேதி கொழும்பில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உள்நாட்டுப் போர் இறுதி கட் டத்தை எட்டியபோது பாதுகாப் புத் துறையையும் (பொறுப்பு) கவனித்தார். அதிபர் ராஜபக்ச வெளிநாடுகளுக்குச் சென்ற போதெல்லாம் நாட்டின் நிர்வாகப் பொறுப்பை கவனித்து வந்தார். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற அவர் சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவியேற்றார். ராஜபக்சவின் நெருங்கிய நண்பராகவும் அவரின் வலது கரமாகவும் சிறிசேனா செயல்பட்டார். அதிபர் தேர்தலுக்கான அறி விப்பு வெளியான நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் 2014 நவம்பர் 21-ம் தேதி எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.

Share this post


Link to post
Share on other sites

தோற்றது ராஜபக்சே மட்டும் அல்ல... பிரதமர் மோடியும்தான்! - சீமான் 09-1420790643-seeman35-600.jpg சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் தோற்றது ராஜபக்சே மட்டுமல்ல, இந்தியப் பிரதமர் மோடியும்தான் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேயின் வீழ்ச்சி குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீமான் கூறியிருப்பதாவது:லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்ததன் மூலமாக இலங்கையின் நிரந்தர மகுடாதிபதியாக நீடித்துவிடலாம் என கனவு கண்ட ராஜபக்சேயை அந்நாட்டு மக்களே தேர்தலில் தூக்கி வீசியிருக்கிறார்கள். இனவெறி அரசியல், அராஜக நடவடிக்கைகள், குடும்பத் தலையீடு என நேர்மையற்ற அரசியலை மட்டுமே நிர்வாகத் தகுதியாகக் கொண்ட ராஜபக்சேயை வரலாறு காறி உமிழ்ந்திருக்கிறது.அறுபது ஆண்டுகால சுதந்திரப் போராட்டத்தை நசுக்கிவிட்டதாகச் சொல்லி இனவெறிக் கொடூரனாக எந்த அதிபர் மாளிகையில் இருந்து ராஜபக்சே கொக்கரித்துச் சிரித்தாரோ... அந்த அதிபர் மாளிகையில் இருந்து அவர் இப்போது அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்.தன் தேசத்து மக்களுக்கு உண்மையாக இல்லாத எந்தத் தலைவனும் நீடித்த அரசியலில் நிலைக்க முடியாது என்பதற்கு ராஜபக்சேயின் வீழ்ச்சி சரியான முன்னுதாரணம். கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் சொந்த நாட்டு மக்களின் மீதே ராணுவத் தாக்குதல் நடத்திய கொடுங்கோலனுக்கு காலம் மிகச் சரியான தண்டனையைக் கொடுத்திருக்கிறது. இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றும், வதை முகாம்களின் அடைத்தும், மீனவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியும் தன்னை ஓர் அரக்கனாகக் காட்டிக்கொண்ட ராஜபக்சேயுடன் பிரதமர் மோடி தொடங்கி சுப்ரமணிய சுவாமி வரையிலான பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் தொடர்ந்து நட்பு பாராட்டினார்கள். தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கும் விதமாக ராஜபக்சேயின் வெற்றிக்குப் பகிரங்க வாழ்த்து தெரிவித்தார் இந்தியப் பிரதமர் மோடி. ஊடகங்களின் பேட்டிகளிலும் பிரதமர் மோடியின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் காட்டிக் கொண்ட ராஜபக்சேதான் இப்போது படுதோல்வி அடைந்திருக்கிறார்.இதை ராஜபக்சேயின் தோல்வியாக மட்டும் கருத முடியாது. ஒருமித்த தமிழர்களின் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு அவரைப் பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தும், சிகப்பு கம்பளம் விரித்தும், அவருடைய வழிபாட்டுக்கு பாதுகாப்பு வழங்கியும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் நட்பு பாராட்டிய இந்திய அரசும் தோற்றுப் போயிருக்கிறது என்பதுதான் உண்மை. சுப்ரமணியன் சுவாமி மாதிரியான ஊதுகுழல்களை வைத்துக்கொண்டு ராஜபக்சேவுக்கு லாலி பாடிய பிரதமர் மோடியும் தனது அரசியல் அணுகுமுறையில் தோற்றுப் போயிருக்கிறார். ராஜபக்சேயை அடிக்கடி சந்தித்து அவருக்குப் பகிரங்க ஆதரவு தெரிவித்த அய்யா சுப்ரமணியன்சுவாமி அவர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது நாம் தமிழர் கட்சி.இனவெறி அரசியலால் எதையும் சாதித்துவிடலாம் என நினைத்த ராஜபக்சேயின் வீழ்ச்சியை புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனக்கான பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ராஜபக்சேயின் தோல்வியை ரசிக்கவோ, புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் வெற்றியைப் பாராட்டவோ தமிழர்களாகிய நாங்கள் நினைக்கவில்லை. தமிழர்களின் சுதந்திரத்துக்கான எவ்வித அணுகுமுறையும் புதிய அதிபரிடம் தெரியாவிட்டாலும், தமிழர்களை நசுக்கிய ஒரு கொடூரனின் வீழ்ச்சியை காலத்தின் தக்க பதிலடியாகவே தமிழுலகம் பார்க்கிறது. இனவெறி இல்லாத, ராணுவக் கொடூரங்கள் இல்லாத, பாகுபாடு பாராத நல்லாட்சியைத்தான் இலங்கையில் இருக்கும் சிங்கள மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இதனைச் செயல்படுத்தும் அதிபராக மைத்ரிபால சிறிசேனா தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.ராஜபக்சே அனுமதிக்காத பன்னாட்டு விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா முன்வர வேண்டும். நில உரிமை தொடங்கி தனக்கான பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளும் எத்தகைய உரிமைகளும் அற்றுப்போனவர்களாக தமிழர்கள் இலங்கையில் தத்தளிக்கிறார்கள். அவர்களின் வாக்குகளும் ராஜபக்சேயை வீழ்த்த முக்கியக் காரணம். தமிழர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியதாகச் சொன்ன ராஜபக்சேயின் அத்தனை வார்த்தைகளும் பொய் என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்திருக்கிறது. தாங்கொணா வேதனைகளில் தத்தளிக்கும் தமிழ் மக்களின் மீட்சிக்கான செயல்பாடுகளில் புதிய அரசு உண்மையாகச் செயல்பட வேண்டும். இதுகாலம் வரை ராஜபக்சேயை தாங்கிப் பிடித்த உலக நாடுகள் இனியாவது அவரை இனவெறிக் கொடூரனாக அறிவிப்பதற்கான முன்னெடுப்புகளை ஆதரிக்க வேண்டும். அதற்கான பன்னாட்டு விசாரணைகளுக்கும் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வைக் கொடுக்கும் பொது வாக்கெடுப்புக்கும் புதிய அரசு வழி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார் சீமான்.

Share this post


Link to post
Share on other sites

தன்னைத் தானே படு குழியில் தள்ளிக் கொண்ட சர்வாதிகாரி ராஜபக்சே! 09-1420773397-rajapaksa6-600.jpg கொழும்பு: அதிபர் பதவியிலிருந்து மக்களால் விரட்டி அடிக்கப்பட்டுள்ள ராஜபக்சே, தனது கதையை தானே முடித்துக் கொண்டுள்ளார்.இலங்கை அதிபர் தேர்தலை 2 ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி தன்னைத் தானே படுகுழியில் தள்ளி விட்டு தனது கதையே தானே முடித்துக் கொண்டுள்ளார். தனக்கு எதிராக தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சிங்களர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி நிலவி வந்ததைப் பார்த்து 2 ஆண்டுகள் பதவிக்காலம் இன்னும் இருந்த நிலையில் முன்கூட்டியே தேர்தலை அறிவித்தார் ராஜபக்சே.எப்படியாவது ஜெயித்து விட வேண்டு்ம் என்ற வைராக்கியத்துடன் இருந்து வந்த அவருக்கு மைத்ரிபால ஸ்ரீசேன மூலம் பெரும் சவால் உண்டானது. ஆனால் தமிழர்களின் வாக்குகளை வைத்து எப்படியாவது ஜெயித்து விடலாம் என்ற நப்பாசையுடன் இருந்தார் ராஜபக்சே. ஆனால் அதில் மண் விழுந்து விட்டது.தமிழர்கள் முற்றாக ராஜபக்சேவை புறக்கணித்து விட்டனர். வரலாறு காணாத அளவுக்கு தமிழர் பகுதிகளுக்கு நேரில் போய் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கெஞ்சி வாக்குகள் கேட்டார். ஆனாலும் ராஜபக்சேவை தமிழர்கள் ஏற்கவில்லை.தமிழர் பகுதிகளில் விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று கூறி லட்சக்கணக்கான தமிழ் மக்களை கூண்டோடு கொன்று குவித்த கையோடு இலங்கையின் காவலராக தன்னைக் காட்டிக் கொண்டவர் ராஜபக்சே. ஆனால் தமிழர்களை அழித்த கையோடு சிங்களர்களையும் அவர் பதம் பார்த்து விட்டார். தன்னை எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும், அவன் சிங்களவனாகவே இருந்தாலும் உயிரோடு விட மாட்டேன் என்பது போல அவரது நடவடிக்கைகள் அமைந்ததைப் பார்த்து சிங்களர்களே அதிர்ந்து போனார்கள்.ராஜபக்சே 2 முறை அதிபர் பதவியில் இருந்தார். இந்த இரண்டு ஆட்சிக்காலத்திலும், தமிழர்களைப் போலவே சிங்களர்களும் ராஜபக்சே கும்பலின் கொலை வெறியாட்டத்தில் சிக்கித் தவித்தனர். எதிர்த்தவர்களை எல்லாம் வெள்ளை வேனில் ஏற்றிச் சென்று விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்தது ராஜபக்சே கும்பல்.குறிப்பாக முக்கியமான சில சிங்களப் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டனர். பலர் காணாமல் போயினர். பலர் தாக்குதலுக்குள்ளாகினர்.தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையுமே இந்த ராஜபக்சே நிறைவேற்றவில்லை. மேலும் தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்ட ராணுவத்தையும் திரும்பப் பெறவில்லை. மாறாக ராணுவத்தினரின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில் தமிழர்கள் வாழும் நிலை ஏற்பட்டது. காணாமல் போன பல ஆயிரம் தமிழர்களின் கதி என்ன என்பது இன்று வரை தெரியவில்லை. தமிழர்களின் சுதந்திரமான வாழ்க்கை தடைபட்டது. ராஜபக்சே கும்பலுக்குப் பயந்து வாழும் நிலையில்தான் இன்று வரை தமிழர்கள் உள்ளனர். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இன்று வரை முடிவு கட்டவில்லை ராஜபக்சே.தமிழர் கட்சிகளையும் கூட தனது அடிமைகள் போல நடப்பதையே அவர் விரும்பினார். ராஜபக்சே மீது சிங்களர்களுக்கு கடும் வெறுப்பு வர இன்னொரு முக்கியக் காரணம், ராஜபக்சே குடும்பத்தினர் போட்ட ஆட்டம். அவரது தம்பி கோத்தபயா, பசில் ராஜபக்சே போக மகன்களும் சேர்ந்து ஆட ஆரம்பித்தனர். நமல் ராஜபக்சே அதில் முக்கியமானவர்.நாட்டைக் காக்கிறேன், தீவிரவாதத்தை ஒழித்து விட்டேன் என்று கூறிக் கூறியே நாட்டின் வளத்தை தன் வளமாக்க ராஜபக்சே முயன்றதும் சிங்களர்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கி விட்டது.3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட ராஜபக்சே முடிவு செய்ததுமே அவருக்கு சனி பிடித்து விட்டது. யாரும் எதிர்பாராத வகையில் அவரது கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரும், முக்கிய அமைச்சருமான மைத்ரிபால தான் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து களத்தில் குதித்தார். மேலும் பல கூட்டணிக் கட்சிகள் ராஜபக்சேவை விட்டு விலகின. முஸ்லீம் கட்சிகள் விலகின, தமிழர் கட்சிகள் விலகின. பல முக்கிய சிங்களக் கட்சிகளும் ராஜபக்சேவுக்கு எதிராக திரும்பின.கடந்த பத்து வருடமாக இலங்கையின் அசைக்க முடியாத தலைவராக விளங்கிய ராஜபக்சே ஆரம்பத்தில் சிங்களர்களைக் காக்க வந்த ரட்சகர் போலத்தான் பார்க்கப்பட்டார். ஆனால் அவரது சுயரூபம் போகப் போகத் தெரிய வரவே சிங்களர்கள் கோபமடைந்து விட்டனர். இவரை மாற்றியாக வேண்டும் என்ற வேட்கை அவர்களிடையே எழுந்தது. ஹீரோவாக பார்க்கப்பட்ட ராஜபக்சே இன்று ஜீரோவாக மாறி தூக்கி எறியப்பட்டுள்ளார்.ஊழல், சர்வாதிகாரம், எதிர்த்து யார் பேசினாலும் கைது, கொலை என்று ராஜபக்சே கும்பல் மிகவும் மோசமாக நடக்க ஆரம்பித்ததே இதற்கு முக்கியக் காரணம்.இலங்கையை தனது சொத்து போல பாவித்து நாட்டையே சுரண்ட ஆரம்பித்து விட்ட இந்த கும்பலை இனியும் விட்டு வைக்கக் கூடாது என்ற முடிவோடுதான் சிங்களர்கள் இந்த முறை ராஜபக்சேவை விரட்டி விட்டுள்ளனர், கைவிட்டுள்ளனர்.இருப்பினும் இன்னும் ஒரு சிங்கள பெளத்த அரசியல் தலைவரையே அதிபராக தேர்ந்தெடுத்துள்ளனர் தமிழர்கள்... இவர் ராஜபக்சே போல கொடூரமானவராக இருக்க மாட்டார் என்ற சிறிய நம்பிக்கையில். பார்க்கலாம், ஸ்ரீசேன என்ன செய்ப் போகிறார் என்று.

Share this post


Link to post
Share on other sites

விடுதலைப் புலிகளின் தலைநகரில் ராஜபக்சேவை வெளுத்து வாங்கிய தமிழர்கள்! கிளிநொச்சி: விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக ஒருகாலத்தில் விளங்கி வந்த கிளிநொச்சியில் ராஜபக்சேவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் தமிழர்கள். அங்கு அவருக்கு வெறும் 24 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.தமிழர் நகரமான கிளிநொச்சி வடக்கில் உள்ளது. முக்கியமான தமிழர் பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சிதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகத் தலைநகராக ஒரு காலத்தில் கோலோச்சி வந்தது. இன்று அந்த மாவட்டத்தில் தமிழர்கள் ஒன்று கூடி ராஜக்சேவை இழுத்து தெருவில் தள்ளியுள்ளனர்.இந்த டிவிஷனில் மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கு 72.1 சதவீத வாக்குகளைத் தமிழர்கள் கொடுத்துள்ளனர். அதாவது 38,856 வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன.அதேசமயம், ராஜபக்சேவுக்கு இங்கு வெறும் 13,300 வாக்குகளே கிடைத்துள்ளன. அதாவது 24.7 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.

Share this post


Link to post
Share on other sites

விதிகளை மீறி, கோர்ட்டை மிரட்டி முன்கூட்டியே 3வது முறை போட்டியிட்டு முழுகிப் போன ராஜபக்சே! Supreme-Court-of-Sri-Lanka2.jpg கொழும்பு: இலங்கை அதிபர் பதவிக்கு ஒருவர் தொடர்ந்து 2 தடவைக்கு மேல் போட்டியிட முடியாது என்று அந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால் அதை மீறி தேர்தலில் போட்டியிட்டவர் ராஜபக்சே. இதற்காக இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதியையும் ராஜபக்சே தரப்பு மிரட்டி தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கூற வைத்ததாகவும் அப்போது சர்ச்சை எழுந்தது. மேலும் 2வது முறை செய்தது போல, 3வது முறையாகவும், முன்கூட்டியிட்டார் ராஜபக்சே. எல்லாம் செய்தும் கூட படு தோல்வியைத் தழுவியுள்ளார்.2005ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முதல் முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சில மாதங்களிலேயே தமிழர் பகுதிகளைக் குறி வைத்து தனது தாக்குதலை ஆரம்பித்தார் ராஜபக்சே பன்னாட்டு துணையுடன், விடுதலைப் புலிகளை அடக்கினார். தமிழர் பகுதிகளில் லட்சக்கணக்கானோர் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் இந்தப் படுகொலையை உலகமே அமைதியாக வேடிக்கை தான் பார்த்தது.அதன் பின்னர் இந்த வெற்றியைக் காரணமாக வைத்து அதில் குளிர் காய நினைத்து பதவி முடிய ஒரு வருடம் இருந்த நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்தினார் ராஜபக்சே 2010ம் ஆண்டு நடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தனது தளபதியாக செயல்பட்டவரான சரத் பொன்சேகாவே எதிர்த்துப் போட்டியிட்டார். இருப்பினும் அப்போது சிங்களர்களின் ஆதரவு ராஜபக்சேவுக்கு முழுமையாக இருந்ததாலும், பொன்சேகாவை துரோகி போல சித்தரித்ததாலும் ராஜபக்சே வென்றார்.இலங்கை அரசியலமைப்புச் சட்டப்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் இந்த சட்டத்தை மீற முடிவு செய்தார் ராஜபக்சே. அதன்படி டெக்னிக்கலாக ஏமாற்றும் வகையில் முன்கூட்டியே தேர்தலை அறிவித்தார். அதாவது பதவியை முழுமையாக முடிக்காமல், 2 ஆண்டு பதவிக்காலம் இருந்த நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்தினார் அவர்.இதை எதிர்த்து இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதியையே ராஜபக்சே கும்பல் மிரட்டியதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகின. இதனால் ராஜபக்சே மீண்டும் போட்டியிடலாம் என்று சுப்ரீ்ம் கோர்ட் கூறி விட்டது. இதையடுத்து தேர்தலில் போட்டியிட்டார் ராஜபக்சே.ஆனாலும் அவர் போட்ட திட்டங்களையெல்லாம் தமிழர்கள் தங்களது வாக்குகளால் தவிடுபொடியாக்கி விட்டனர். ராஜபக்சேவுக்கு எதிராக மைத்ரிபாலாவுக்கு ஆதரவாக சிங்களர்கள் மட்டுமல்லாமல் தமிழர்களும் திரண்டதே ராஜபக்சேவின் கதையை முடிக்க முக்கியக் காரணமாகி விட்டது.

Share this post


Link to post
Share on other sites

இலங்கை தேர்தலில் தோல்வி: அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய மகிந்த ராஜபக்சே கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசாக கொடுத்ததால் மகிந்த ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிவிட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால ஸ்ரீசேனா வெற்றி முகத்தில் இருப்பதால் உலகத்தமிழர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.இலங்கை அதிபர் தேர்தல் ஒரு சில இடங்களில் ஏற்பட்ட வன்முறையை தவிர அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது.சுமார் ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்களில் 67 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளைப் பதிவு செய்தனர்.தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில், அதிக அளவு வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு மையம் திறந்தவுடனேயே நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித் தனர்.யாழ்ப்பாணத்தில் 61.15 சதவீத வாக்குகளும், மாத்தறை - 76, அம்பாந்தோட்டை 70, நுவரேலியா 80, புத்தளம் 78, பொலனறுவ 75, கோலை 70, கம்பஹா 65, காலி 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 09-1420778553-vote-counting-600.jpg

Share this post


Link to post
Share on other sites

இலங்கை தேர்தலில் தோல்வி: அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய மகிந்த ராஜபக்சே கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசாக கொடுத்ததால் மகிந்த ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிவிட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால ஸ்ரீசேனா வெற்றி முகத்தில் இருப்பதால் உலகத்தமிழர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.இலங்கை அதிபர் தேர்தல் ஒரு சில இடங்களில் ஏற்பட்ட வன்முறையை தவிர அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது.சுமார் ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்களில் 67 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளைப் பதிவு செய்தனர்.தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில், அதிக அளவு வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு மையம் திறந்தவுடனேயே நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித் தனர்.யாழ்ப்பாணத்தில் 61.15 சதவீத வாக்குகளும், மாத்தறை - 76, அம்பாந்தோட்டை 70, நுவரேலியா 80, புத்தளம் 78, பொலனறுவ 75, கோலை 70, கம்பஹா 65, காலி 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 09-1420778553-vote-counting-600.jpg

Share this post


Link to post
Share on other sites

என்னதான் சொன்னாலும் ராஜபக்‌ஷேவுக்கும் மைத்திரி பாலாவுக்கும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை

 

இவருமே தமிழர் நலனின் அக்கறை காட்டுவார் என சொல்லமுடியாது ஏனென்றால் சிங்கள இனமே அப்படித்தான்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0