Sign in to follow this  
Followers 0
வர்ஷா

என்ன கொடுப்பாய் நாடு திரும்ப என்ன கொடுப்பாய் இலங்கை அரசே

Rate this topic:

2 posts in this topic

என்ன கொடுப்பாய் நாடு திரும்ப என்ன கொடுப்பாய் இலங்கை அரசே வெளிநாட்டு தமிழர்களுக்காக ஐரோப்பிய கனேடிய அரசுகள் இலங்கைக்கு கொடுத்துள்ள திட்டம்: இலங்கையில் யுத்தம் நடந்த காலத்திலும், அதன் பின்னரும் இலங்கையை விட்டு வெளியேறிச் சென்ற லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களில், வெளிநாடுகளில் இன்னும் நிரந்தர வதிவிட அந்தஸ்து கொடுக்கப்படாமல் பல ஆயிரக்கணக்கானோர் உள்ளார்கள். இவர்கள் தொடர்பாக இலங்கை அரசின் உதவியுடன் திட்டம் ஒன்றை செயல்படுத்த சில வெளிநாடுகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் கனடா இது தொடர்பாக ஏற்கனவே இலங்கை வெளியுறவு அமைச்சை தொடர்பு கொண்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள எமது தொடர்பாளர் மூலம் தெரியவருகிறது. இந்த புதிய திட்ட proposal என்ன? தற்போது வெளிநாடுகளில் நிரந்தர வதிவிட அந்தஸ்து கொடுக்கப்படாமல் உள்ள தமிழர்களில் யாருக்கு எப்படியான நன்மைகளை, அல்லது பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது? இதோ விபரங்கள்- நாமக்கு தெரியவந்த விபரங்களின்படி, தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தாலும் கனடாவாலும் கொடுக்கப்பட்டுள்ள proposal, இலங்கையில் அரசியல் சூழ்நிலை மாற்றமடைந்துள்ளதால், நிரந்தர வதிவிட அந்தஸ்து கொடுக்கப்படாமல் உள்ள தமிழர்கள் இலங்கைக்கு திரும்பிச் செல்வதில் எந்த அச்சுறுத்தலும் கிடையாது என இந்த நாடுகள் நம்புகின்றன. 1) திரும்பிச் செல்லும் தமிழர்கள் யாரும் கைது செய்யப்படவோ, அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படவோ மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை இலங்கை அரசு கொடுக்க வேண்டும் என இந்த நாடுகள் கோருகின்றன. 2) இலங்கையை விட்டு வெளியேறிச் சென்ற தமிழர்களின் நிலங்கள், மற்றும் சொத்துக்கள் அரசு பாவனைக்காக (உதாரணமாக ராணுவ முகாம்களை அமைத்தல்) எடுக்கப்பட்டிருந்தால், அந்த சொத்துக்கள் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இலங்கை அரசிடம் இருந்து கோருகின்றன இந்த நாடுகள். 3) இலங்கையை விட்டு வெளியேறிச் சென்றபின் இவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தால், அந்தப் பெயர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவும், அவர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் தேவைப்பட்டால் அவற்றை வழங்கவும் இலங்கை அரசு, இந்த வெளிநாடுகளுக்கு ஒரு சர்வதேச இருவழி ஒப்பந்தம் (International bilateral agreement) மூலம் உத்தரவாதம் வழங்க வேண்டும். 4A) திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் நல்வாழ்வுக்காக ஐரோப்பிய ஒன்றியம் ஒரு நபருக்கு 38,000 யூரோ என்ற வகையில் பண முதலீடு செய்யும். இந்தப் பணத்தில் அவர்கள் வீடுகளை கட்டிக் கொள்ளவும், இதர வாழ்க்கை தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். அது தவிர, அவர்கள் இலங்கை செல்வதற்காக விமானப் பயணத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியம் பணம் வழங்கும். 4B) இந்த விஷயத்தில் கனடா இன்னமும் குறிப்பிட்ட தொகை எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தில் கூறுகின்றனர். வெளிநாடுகளின் இந்த proposal தற்போது இலங்கை வெளியுறவுத்துறையால் ஆராயப்பட்டு வருகிறது. தற்போது இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள் சமரவீர ஐரோப்பா சென்றுள்ளதால், அங்குள்ள அரசுகளுடன் மேலதிக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் எனவும், வெளியுறவு அமைச்சக தகவல் உள்ளது. இலங்கை அரசு சார்பில் இந்த proposal தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

Share this post


Link to post
Share on other sites

என்ன கொடுப்பார்கள் என்பதை விட என்ன செய்வார்கள் என்று சொல்லிவிடலாம்

காத்திருந்து கொன்று குவிப்பார்கள்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0