Sign in to follow this  
Followers 0
வர்ஷா

திரு விளையாடல் படம்

4 posts in this topic

நவீன தொழில் நுட்பத்தில் திரு விளையாடல் Thiruvilayadal0001.jpgthiruvilayadal%20film%20song.jpg0.jpg09cp_thiruvilayada_1199799g.jpga1.jpgshivaji.jpg 1965 ஆம் ஆண்டில் வெளி வந்து மக்கள் மனதில் நீங்க இடம் பெற்ற‘திருவிளையாடல்’ படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தற்போது புது ப்பிக்கப்பட்டு உள்ளது. கலரையும் மெரு கூட்டியுள்ளனர்.

Share this post


Link to post
Share on other sites

ஏ.பி.நாகராஜன் அவர்கள் கதை, வசனம் எழுதியும் இயக்கி வெளிவந்த திருவிளையாடல் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ், முத்துராமன், பாலையா, டி.ஆர். மகாலிங்கம், கே.பி. சுந்தாரம்பாள், மாஸ்டர் பிரபாகரன், மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

சிவாஜி, சாவித்திரி நடித்த ‘திருவிளையாடல்’ படம் 1965-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. செண்பகபாண்டியனாக முத்துராமன், புலவர் தருமியாக நாகேஷ். மனோரமா அவ்வையாராக, கே.பி.சுந்தராம்பாள், ஹேமநாத பாகவதராக டி.எஸ்.பாலையா, பானபட்டராக டி.ஆர். மகாலிங்கம் ஆகியோரும் நடித்து இருந்தனர். ஏ.பி. நாகராஜன் டைரக்டு செய்து இருந்தார்.

zztzKqHb66c&feature=watch-now-button&wide=1

a4.jpg

“கடைசிக் குடிமகனிலிருந்து உலககைக் காக்கும் ஈசன் குடும்பம் வரை பெண்ணாகப் பிறப்பது பெரும் தவறு என்பது நன்றாகப் புரிந்துவிட்டது” – இப்படிச் சொன்னவர் பரமசிவனின் மனைவி பார்வதி. அவரை இப்படி பேச வைத்தவர் ஏ.பி.நாகராஜன்.

“ஒருத்தி என் தலையிலே ஏறி உட்கார்ந்துக்கிட்டு இறங்கமாட்டேங்குறா.. இன்னொருத்தி என் உடம்புல பாதியை எடுத்துக்கிட்டு பிராணனை வாங்குறா” என்று இருதார மணவாளரான பரமசிவனை புலம்பவைத்தவரும் ஏ.பி.நாகராஜன்தான். இரண்டும் திருவிளையாடல் படத்தில் அவர் எழுதிய வசனங்கள்.

கொங்கு மண்டலத்தில் வளமான நிலவுடைமையாளர் குடும்பத்தில் 1928 பிப்ரவரி 24ந் தேதி பிறந்தவர் அக்கம்மாபேட்டை பரமசிவன் நாகராஜன் (ஏ.பி.நாகராஜன்). அவருக்கு வைக்கப்பட்ட பெயர், குப்புசாமி. இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த அவரை பாட்டி மாணிக்கம்மாள்தான் வளர்த்தார். அதனால் சின்ன வயதிலேயே புராண-இதிகாசக் கதைகளை கேட்டு வளரும் வாய்ப்பு அமைந்தது. அது அவரைக் கவர்ந்தது. அவ்வை டி.கே.சண்முகம் நாடகக்குழுவில் சேர்ந்தார். அங்கே நிறைய குப்புசாமிகள் இருந்ததால், அவரது பெயர் நாகராஜன் என மாற்றப்பட்டது. குடும்பத்தினரைப் பிரிந்து ஊர் ஊராகச் சென்று நாடகங்களில் நடித்தார் நாகராஜன். ஸ்த்ரீபார்ட் எனப்படும் பெண் வேடங்களில் நடித்தார். சக்தி நாடகசபாவில் அவர் சேர்ந்தபோது நடிகர்திலகம் சிவாஜிகணேசன், காகா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் நண்பரானார்கள். பின்னர், பழனி கதிரவன் நாடக சபா என்ற சொந்த நிறுவனத்தை ஆரம்பித்து நாடகங்களை அரங்கேற்றியதுடன் ராணி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் நாகராஜன்.

அவர் எழுதி அரங்கேற்றிய ‘நால்வர்’ என்ற நாடகம் 1953ல் திரைப்படமானது. அவரே திரைக்கதை எழுதியதுடன், கதாநாயகனாகவும் நடித்தார். படம் வெளியானபின் அவரை ஒரு பத்திரிகை பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் தன் அப்பா பற்றியும் சொந்த ஊரான அக்கம்மாபேட்டை பற்றியும் தெரிவித்திருந்ததைப் படித்த அவரது சொந்தபந்தங்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை அடையாளம் கண்டு, நேரில் சந்தித்தனர்.

மாங்கல்யம், நல்லதங்காள் உள்ளிட்ட படங்களிலும் ஏ.பி.நாகராஜன் நடித்துவந்தார். எனினும், நடிப்பைவிட படைப்பில்தான் அவருக்குத் தீவிர ஆர்வம் இருந்தது. மேடை நாடகத் தமிழில் திரைப்பட வசனங்கள் அமைந்திருந்த காலத்தில், கொங்கு வட்டார வழக்கில் ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தில் வசனம் எழுதினார் ஏ.பி.என். ‘நான் பெற்ற செல்வம்’ படத்திலும் அவரது படைப்பாற்றல் வெளிப்பட்டது.

தமிழில் வெளியான மிக நீளமான படங்களில் ஒன்று, ‘சம்பூர்ண ராமாயணம்’. 1958ல் வெளியான இப்படத்திற்கு, திரைக்கதை-வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன். ராமராக என்.டி.ராமராவும், பரதனாக சிவாஜியும், ராவணனாக டி.கே.பகவதியும் நடித்த படம் இது. ராமன்தான் கதாநாயகன் என்றாலும் ராவணனின் பெருமைகளைச் சொல்ல ஏ.பி.என் தவறவில்லை. அவன் திறமையான மன்னன் மட்டுமல்ல, சிறந்த வீணைக் கலைஞன் என்பதையும் அவனது அவையில் ராகங்களைப் பற்றி அலசும் அருமையான பாடல் ஒன்றின் மூலம் வெளிப்படுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக, ராவணனுக்கு 10 தலைகளை ஒட்டவைத்து அரக்கனாகக் காட்டாமல், நம்மைப்போல ஒற்றைத்தலையுடன் ‘சம்பூர்ண ராமாயணத்தில்’ உலவவிட்டிருந்தனர். இந்தப் படம் பெற்ற வெற்றியும், அதற்கு மூதறிஞர் ராஜாஜி அளித்த பாராட்டும் ஏ.பி.நாகராஜனுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. நடிகர் வி.கே.ராமசாமியுடன் இணைந்து சொந்தமாகப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான முதல் படம், ‘வடிவுக்கு வளைகாப்பு’ (1962)

ஏ.பி.நாகராஜன் என்ற இயக்குநரைப் பார்த்து தமிழ்த்திரையுலகமும் ரசிகர்களும் முதன் முதலாக வியந்தது, ‘நவராத்திரி’ படத்தில்தான் (1964). ஒன்பது மாறுபட்ட வேடங்களில் நடிகர் திலகம் சிவாஜி நடித்த அப்படம் பெரும் வெற்றி பெற்றது. 1965ல் ‘திருவிளையாடல்’ படம் வெளியாகி சக்கைப் போடு போட்டது. பரமசிவன், பார்வதி, முருகன், பிள்ளையார், நாரதர், அவ்வையார், நக்கீரர் என அனைத்து கதாபாத்திரங்களின் நாவிலும் அழகுத் தமிழ் விளையாடியது. ஒரு புராணப் படத்தில் அமைந்த நகைச்சுவை காட்சி, இன்றைய தலைமுறையையும் சிரிக்க வைக்கிறது என்றால் அது திருவிளையாடல் படத்தில், தருமி வேடத்தில் நடித்த நாகேஷின் அற்புதமான உடல்மொழியுடன் கூடிய நகைச்சுவை காட்சிதான். கடவுளான பரமசிவனையே கலாய்த்துத் தள்ளியிருப்பார் தருமி.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்த்திரையில் பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பி வந்தகாலத்தில் அதற்கு நேர்எதிராக புராணப் பாத்திரங்கள் மூலம் ‘தெய்வ’ங்களைத் தமிழ்ப பேச வைத்தவர் ஏ.பி.நாகராஜன். அவர், திராவிட இயக்கத்திற்கு எதிராக சிலம்புச்செல்வர் ம.பொ.சி. தொடங்கிய தமிழரசுக் கழகத்தில் இணைந்திருந்தார். அதனால், அவருடைய படைப்புகளிலும் அது வெளிப்பட்டது. தி.மு.கவில் மு.கருணாநிதியை கலைஞர் என்று அழைத்ததுபோல தமிழரசு கழகத்தில் ஏ.பி.நாகராஜனை ‘கலைஞர்’ என்று அடைமொழியிட்டு அழைத்தனர். அங்கே ‘கவிஞர்’ கண்ணதாசன், இங்கே ‘கவிஞர்’ கா.மு.ஷெரீப். இரண்டு இயக்கத்திற்குமான போட்டியில், திரையில் செம்மையாக ஒளிர்ந்தது, தமிழ்.

திருவிளையாடலைத் தொடர்ந்து, சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமலை தென்குமரி, அகத்தியர், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல புராண படங்களை எடுத்தார் ஏ.பி.நாகராஜன். எல்லாவற்றிலும் அவருடைய தமிழ் விளையாடியது. அவருடைய மிகச்சிறந்த படைப்புகளின் வரிசையில் முதல் இடம் பிடிப்பது, ‘தில்லானா மோகனாம்பாள்’. இது புராணமல்ல, புதினம். கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதையைத் திரைக்கு ஏற்றபடி நாகராஜன் வடிவமைக்க, நாதசுர கலைஞர் சிக்கல் சண்முகசுந்தரமாக சிவாஜியும், பரதநாட்டிய கலைஞர் திருவாரூர் மோகனாம்பாளாக பத்மினியும் வாழ்ந்து காட்டியிருந்த படம் அது. கலைஞர்களின் வாழ்வை மிகச் சிறப்பான காட்சியமைப்புகள் மூலமாக வெளிப்படுத்திய தில்லானா மோகனாம்பாள் படத்தில் பாலையா, மனோரமா, நாகேஷ் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் தங்கள் பங்கினைத் திறம்பட வெளிப்படுத்தி, படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தனர். சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருதையும் தில்லானா மோகனாம்பாள் பெற்றது.

பிற்காலச் சோழ மன்னர்களில் பெரும்புகழ் பெற்றவரான முதலாம் ராஜராஜனின் வரலாற்றை, தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமான ‘ராஜராஜசோழன்’ என்ற பெயரில் இயக்கியவரும் ஏ.பி.நாகராஜன்தான். குருதட்சணை, வா ராஜா வா, குமாஸ்தாவின் மகள், மேல்நாட்டு மருமகள் போன்ற படங்களையும் இயக்கினார்.

நடிகர் திலகம் சிவாஜியை வைத்து பலப்பல படங்களை இயக்கிய ஏ.பி.நாகராஜன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை இயக்கிய ஒரே படம், ‘நவரத்தினம்’ அதுவே ஏ.பி.என்னின் கடைசிப்படமாகவும் அமைந்தது. 1977ல் அவர் காலமானார். இன்றும் கோவில் திருவிழாக்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஒ(லி)ளிபரப்பாகும் திருவிளையாடல் படத்தின் வசனங்களில் உரக்க ஒலிக்கும் தமிழில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஏ.பி.நாகராஜன்.

சிவபெருமானின் திருவிளையாடல்களை மையப்படுத்தி இப்படம் தயாரானது,. சிவன் கேரக்டரில் சிவாஜி வந்தார். பார்வதி கேரக்டரில் சாவித்திரி நடித்தார். இப்படத்தில் புலவர் தருமியாக வரும் நாகேஷின் காமெடி வேடம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

புலவர் நக்கீரன் வேடத்தில் இயக்குனர் ஏ.பி.நாகராஜனே நடித்து இருந்தார். பிரமாண்ட அரங்குகள் அமைத்து மெகா பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்து இருந்தனர். இதில் இடம்பெற்ற ‘பழம் நீயப்பா ஞானபழம் நீயப்பா’, ‘இன்றொரு நாள் போதுமா’, ‘இசை தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’, ‘பார்த்தால் பசு மரம் படுத்துவிட்டால் நெடு மரம்’, ‘பாட்டும் நானே பாவமும் நானே’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.

திருவிளையாடல் படமும் சரி சிவாஜியின் பரிமாணமும் சரி இன்றுவரை யாராலும் மறக்க முடியாது.அந்தக் காலத்தில் திரை அரங்குகளை கலக்கி,பின்னாளில் திருவிழாக் காலங்களில் (தெருவோரத்தில் திரை கட்டுவார்களே) தெருவோரங்கங்களையும் கலக்கி எடுத்தப்படம்.பெரும்பாலான கோவில் திருவிழாக்களில் திருவிளையாடல் படம் போடும் நாளும் திருவிழாவாக கொண்டாடப்படும். என் சிறுவயது பருவத்தில் எனது கிராமத்தில் இதை நான் அனுபவித்திருக்கின்றேன்.என்னுள் என் ரத்தத்தில் ஊறிப்போன ஒருசிலப் படங்களில் திருவிளையாடலும் ஒன்று.அந்த பாதிப்புதான் இந்த உயிரோவியத்தை உருவாக்கவைத்தது.

அந்தக்காலத்தில் பானப்பத்திரர் நேராக பாட்டுப்பாட வந்தார்..விறகு விற்பவன் (சிவன்) பாடலைக் கேட்டார்..பயந்து ஓடினார்..இப்போதான் காலம் மாறிப்போச்சே..நவீன டிஜிட்டல் காலமாச்சே..அதான் தொலைக்காட்சியில் சிவன் பாடலைக் கேட்டே பானப்பத்திரரை ஆட வைத்திருக்கிறேன்..ஹீ..ஹீ.. ( கலைஞர் "முரசு" தொலைகாட்சிக்காக..நான் உருவாக்கிய உயிரோவியம்)

Share this post


Link to post
Share on other sites

paattum-naane.jpg

2dr9o2o.jpg

movieposter.jpg?v=4ed8a6ee

thiruvilayadal%20download.jpeg

thiruvilayadal%20songs.png

thiruvilayadal%20movie%20songs.jpg

thiruvilayadal%20images%20songs%20downlo

திருவிளையாடல் - புராணப் படங்களில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்த படம்.

zztzKqHb66c&feature=fvsr

"புராணப் படமா? ஏ.பி.நாகராஜன் தான் செய்யணும்" என்ற அளவுக்கு அவருக்கு பெயரையும் புகழையும் வாங்கித் தந்த படம்.

1965-ஆம் ஆண்டு வெளிவந்த பிராந்திய மொழிப் படங்களில் தமிழில் சிறந்தபடமாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அரசின் சிறப்பு விருதினைப் பெற்ற படம்.

அதற்கு முன்பும் கூட புராணப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனாலும் புதிய தலைமுறைக்கு ஏற்றபடி புதிய பாணியில் திரைக்கதை அமைத்து இயக்கி இருந்தார் ஏ.பி. நாகராஜன் அவர்கள்.

நடிகர் திலகத்தின் அபாரமான நடிப்பாற்றல் - நுணுக்கமான அசைவுகளைக் கூட துல்லியமாக அவர் வெளிப்படுத்தி நடித்த விதம் - சிவனாக வரும் காட்சிகளில் புருவத்தைக் கூட அசைக்காமல் நடித்த பாங்கு-அனைவரையும் பிரமிக்க வைத்தது.

dharumi.JPG

அதுவரை சமூகப் படங்களில் மட்டுமே கையாளப்பட்டு வந்த "பிளாஷ்-பாக்" உத்தியைக் கையாண்டு கதை பின்னப்பட்ட முதல் படம் திருவிளையாடல் தான். ஞானப் பழத்துக்காக கோபித்துப் பிரிந்து சென்று தனியாக இருக்கும் முருகனின் சினத்தைத் தணிப்பதற்காக பராசக்தி பரமனின் திருவிளையாடல்களில் சிலவற்றைக் கூறுவதாக கதை அமைத்திருந்தார் ஏ.பி.நாகராஜன்.

அதன்பிறகு வெளிவந்த புராணப்படங்கள், பக்திப் படங்கள் எல்லாமே இந்தப் பாணியிலேயே வர ஆரம்பித்தன என்பது கவனத்துக்குரிய விஷயம்.

இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் அமைத்த இசை . அதுவரை அவர் அமைத்த படங்களின் இசையையும் பாடல்களையும் எல்லாம் தூக்கி அடித்தது.

பொதுவாக நடிகர் திலகத்திடம் ஒரு தனித்தன்மை உண்டு. அவர் நடிக்கும் படம் எதுவோ அது வெளிவந்த பிறகு அதில் வேறு எத்தனை சிறப்பம்சங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விஞ்சி அவரது நடிப்பு மட்டுமே பெரிதாகப் பேசப்படும். அதுதான் முன்னணியில் நிற்கும். ஆனால் திருவிளையாடல் படம் ஒரு விதிவிலக்கு.

நடிகர் திலகத்தின் நடிப்புக்கு இணையாக படத்தில் பேசப்பட்ட விஷயங்கள் நாகேஷின் நகைச்சுவை நடிப்பும். படத்தின் பாடல்களும்.

shivaji.jpg

இன்றளவும் நாகேஷ் காமெடி என்று எடுத்துக்கொண்டால் முதலிடம் பெறுவது திருவிளையாடல் தருமி தானே?

அதே போல படத்தின் இசையும் மிகப் பிரமாண்டமாகப் பேசப்பட்டது.

"அய்யரின் இசையின் மகத்துவத்தை முழுமையாக உணர்த்திய படம்" என்று கே.வி. மகாதேவனின் உற்ற துணையாக இருந்த உதவியாளர் டி. கே. புகழேந்தி பெருமையாகக் குறிப்பிடுவார்.

அந்த அளவுக்கு இசையின் ஆக்கிரமிப்பு அதுவும் நடிகர் திலகத்தின் நடிப்புக்கு இணையாகப் பேசப்படும் அளவுக்கு இருந்தது.

Share this post


Link to post
Share on other sites

முதல் காட்சியிலேயே இசையின் ஆக்கிரமிப்பு துவங்கி விடுகிறது.

கயிலாயத்தில் தேவரும், முனிவரும், நாரதரும், பூத கணங்களும் சிவபூஜை செய்யும் காட்சி.

பலதரப்பட்ட இசைக்கருவிகளைக் கையாண்டு அருமையான தனி ஆவர்த்தனத்தை ஆதி தாளத்தில் வெகு அற்புதமாக அமைத்து மெய்சிலிர்க்க வைத்தார் கே.வி.மகாதேவன்.

சங்கீதத்தில் "காலப்ரமாணம்" என்று ஒரு சொல்வழக்கு உண்டு. தாளத்தில் அது மிக முக்கியமான் ஒரு அம்சம். அதன்படி ஒவ்வொரு வாத்தியத்தையும் கணக்கு பிசகாமல் கையாண்டு மகாதேவன் அமைத்திருக்கும் அந்த தனி ஆவர்த்தனமும் அதைத் தொடரும் சீர்காழியின் கணீர்க் குரலும்.

"சம்போ மகாதேவா" - என்ற ஒரே வரியை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி விரியவைத்து என்னமாய்த்தான் அமைத்திருக்கிறார் மகாதேவன்!

நமது கர்நாடக சங்கீதத்தில் "யதி" என்று ஒரு அமைப்பு உண்டு. நாம் தமிழில் அணி என்கிறோமே அது போன்றது தான் இது. இது பலவகைப்படும்.. அவற்றில் "கோபுச்ச யதி" என்று ஒன்றும் "ச்ரோதோவக யதி" என்றும் ஒன்று உண்டு.

"கோபுச்ச யதி" - என்றால் பசுவின் வாலைப்போல ஆரம்பத்தில் அகலமாக இருந்து போகப்போக குறுகி வரும் பாடல் அமைப்பு. முமூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதரின் ஆனந்த பைரவி ராக கீர்த்தனை "தியாகராஜ யோக வைபவம்" இதற்கு சரியான உதாரணம்.

"தியாகராஜ யோக வைபவம்,

அகராஜ யோக வைபவம்.

ராஜயோகவைபவம்,

யோக வைபவம்,

வைபவம்,

பவம்,

வம்" - என்று கீர்த்தனையின் ஆரம்பத்தில் இந்த கோபுச்ச யதிக் கிரமத்தை கையாண்டிருக்கும் தீட்சிதர். சரணத்தில் "ச்ரோதோவக யதி" வகையை அமைத்து முடித்திருக்கிறார்.


"ச்ரோதோவக யதி" - என்றால்..? எப்படி ஒரு ஆறு உற்பத்தியாகும் இடத்தில் ஆரம்பத்தில் குறுகியும், போகப்போக விரிந்தும் செல்லுகிறதோ அது போன்ற ஒரு ஆற்றொழுக்கு போன்ற பாடல் அமைப்புக்கு "ச்ரோதோவக யதி"என்று பெயர். மேலே குறிப்பிட்ட தீட்சிதர் கீர்த்தனையின் சரணத்தில்

"பிரகாசம்,

தத்வப் பிரகாசம்,

சகல தத்வப் பிரகாசம்" என்று இந்த "ச்ரோதோவக யதி" கிரமம் அமைந்திருக்கிறது.

இந்தச் "ச்ரோதோவக யதி" கிரமத்தைக் கையாண்டு

தேவா

மகாதேவா

0Vaq5sLWD4c


சம்போ மகாதேவா .. என்று பாடலின் ஒற்றை வரியை வைத்தே மோகன ராகத்தில் பாடலை அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.

சீர்காழி கோவிந்தராஜன் முடித்ததும் வீணையில் மோகன ராகத்தை கலைமகள் மீட்டுவதாக வரும் சஞ்சாரங்கள்... இப்படி எல்லாம் பாடலை இப்போது போடவேண்டும் என்றால் அதற்கு கே.வி. மகாதேவன்தான் மறுபடியும் பிறந்து

வரவேண்டும்.

தொடர்ந்து பி.சுசீலாவின் குரலில் "நமச்சிவாய வாழ்க" என்ற மாணிக்கவாசகரின் சிவபுராண வரிகள்...

"ஈசனடி போற்றி எந்தையடி போற்றி..." என்று தொடரும் அர்ச்சனைப் பதிகத்தை யஜுர் வேதத்தில் "யோபாம் புஷ்பம் வேதா" என்று துவங்கும் "மந்த்ர புஷ்பம்" - பகுதியை நினைவுறுத்தும் வகையில் மெட்டமைத்து திருவாசகத்தை தமிழ் வேதம் என்று கொண்டாடும் அளவுக்கு அற்புதமாக கையாண்டிருக்கிறார் கே.வி. மகாதேவன்.
murugan-oviyar.JPG

ஞானப் பழத்துக்காக கோபமுற்று தாய் தந்தையைப் பிரிந்து செல்லும் முருகனை சாந்தப் படுத்தும் விதமாக அவ்வையாராக வரும் கே. பி.சுந்தராம்பாள் பாடும்

KDNSM0RyUa8

"ஞானப் பழத்தைப் பிழிந்து" என்ற தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் பாடலை இடையிடையே ஒற்றை வயலினைக் கையாண்டு காம்போதி ராகத்தில் ஆரம்பித்து, சாவேரி, மோகனம், கானடா என்று ராகமாலிகை விருத்தமாக வெகு சிறப்பாக அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.

தொடர்ந்து படத்தில் இடம் பெறும் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

"பழம் நீயப்பா" - பாடலில் முருகனுக்குகந்த ஷண்முகப்ரியா ராகம் தான் எத்தனை அழகாகக் கையாப்பட்டிருக்கிறது! பாடலின் இடையே வரும் இணைப்பிசையில் நம் மனதை அப்படியே கட்டிப்போட்டுவிடுகிறார் கே.வி.மகாதேவன்.

rA1cuzhcTfQ

பி.பி.ஸ்ரீனிவாஸ் - எஸ். ஜானகியின் குரல்களில் "பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்" மகாதேவனின் இசையில் நடபைரவி ராகத்தில் கலந்து கேட்பவர் செவிகளை மட்டுமல்ல மனதையும் நிறைக்கிறது. இந்தப் பாடலில் நாதஸ்வரமும், புல்லாங்குழலும் தான் எவ்வளவு லாவகமாகக் கையாளப் பட்டிருக்கின்றன. நடபைரவியில் இத்தனை இனிமையாக - காலத்தை வென்று நிற்கும் அளவுக்கு ஒரு திரைப்படப் பாடலை வேறு யாராலுமே தரமுடியாது.

இடைவேளைக்கு முன்வரும் சிவதாண்டவத்திற்கு மகாதேவன் அமைத்திருக்கும் இசை . உண்மையிலேயே மகாதேவ தாண்டவம் தான். தாள வாத்தியங்களில் ஆதிக்கம் நிறைந்திருந்தாலும் வயலினில் ஹம்சானந்தி ராகத்தை பளிச்சென்று மின்னல் போல வெளிக்காட்டி மறைக்கும் லாவகம் - கே.வி. மகாதேவனால் மட்டுமே சாத்தியம்.

"நீலச்சேலை கட்டிகிட்ட சமுத்திரப்பொண்ணு" - கண்ணதாசனின் நயமான வரிகள் விரகதாபத்தால் தவிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை எடுத்துக்காட்டுகின்றன என்றால் அதற்கு "பஹாடி"யில் மகாதேவன் அமைத்திருக்கும் மெட்டும் அதனை பி.சுசீலா பாடி இருக்கும் அழகும், நடிகையர் திலகம் வெளிப்படுத்தும் பாவங்களும் பாடலுக்கு தனி இடம் கொடுத்து விடுகின்றன.

2dr9o2o.jpg


அடுத்து "ஒரு நாள் போதுமா" .. பாடலுக்கு வருவோம். உண்மையிலேயே இந்தப் பாடலை கே.வி.மகாதேவன் அமைத்திருக்கும் அழகை - பாடலின் சிறப்பம்சங்களைப் பகிர்ந்து கொள்வது என்றால் அதற்கு ஒரு நாள் போதாது தான்.
D0wLIArAayY

வடநாட்டில் இருந்துவரும் ஹேமநாத பாகவதர் பாண்டியமன்னனின் சபையில் பாடுவதாக காட்சி. நாடெங்கும் உள்ள பாடகர்களை எல்லாம் வெற்றி கொண்ட ஆணவத்தில் மிதக்கும் ஹேமநாத பாகவதரை விறகுவெட்டியாக வரும் ஈசன் எப்படி தன்னிலை உணரவைக்கிறார் என்பது கதை

ஆரம்பத்தில் இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைக்க விரும்பினார் ஏ.பி.நாகராஜன். ஆனால் தோல்வி அடையும் கதாபாத்திரத்துக்கு தான் பாடுவதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்த காரணத்தால் சீர்காழி கோவிந்தராஜன் தன்னால் பாட முடியாது என்று நயமாக மறுத்து விட்டார்.

சங்கீதத்தில் முடிசூடா மன்னனாக வரும் பாடகருக்கு ஒரு சங்கீத வித்வானையே பாடவைத்தால் என்ன என்று தோன்றியதும் அனைவருக்கும் ஒருமனதாக நினைவுக்கு வந்த பாடகர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் தான்.

அவரிடம் சென்று கதையமைப்பைக் கூறி ஹேமநாத பாகவதருக்காக அவர் பாடவேண்டும் என்று தயக்கத்துடன் கோரிக்கை வைத்தார்கள்.

"என்னது? தோற்றுப்போகும் சங்கீத வித்வானுக்கு நான் பாடணுமா? என்னை என்னவென்று நினைத்தீர்கள்?" என்றெல்லாம் கூச்சல் போடாமல் - சற்றுக்கூட முகம் சுளிக்காமல்,"அதுக்கென்ன தாராளமா பாடறேன்" - என்று எந்த ஒரு சங்கடமும் இல்லாமல் சம்மதித்தார் பாலமுரளிகிருஷ்ணா.

கவியரசர் பாடலுக்கான பல்லவியை இப்படி எழுதிக் கொடுத்தார்:

"நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா"

இந்தப் பல்லவியை மேலே சொன்ன அதே "ச்ரோதோவகயதி" முறையைப் பின்பற்றி..
2dr9o2o.jpg

"ஒரு நாள் போதுமா

இன்றொரு நாள் போதுமா

நான் பாட இன்றொரு நாள் போதுமா

நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா..

- என்று வரிக்கு வரி வார்த்தைகளைக் கூட்டி அமைத்த திறமையை என்னவென்று சொல்வது?

அதே சமயம் இந்தப் பாடலுக்கு கே.வி. மகாதேவன் தேர்ந்தெடுத்த ராகமோ "மாண்ட்".

கதைப்படி ஹேமநாத பாகவதர் வடநாட்டிலிருந்து வரும் ஒரு சங்கீத நிபுணர். பாண்டிய நாட்டுக்கு வருகை தந்து அரசவையில் பாட வருகிறார்.

யாருக்குமே அவரது சொந்த மண்ணுக்கு உரித்தான விஷயங்களில் தானே பிடிப்பு சற்று அதிகமாக இருக்கும். ஆகவே தான் ஹேமநாத பாகவதர் தன் பாடலை ஹிந்துஸ்தானி ராகமான மாண்ட்டில் ஆரம்பிக்கிறார். மாண்ட் - இது ஒரு ஹிந்துஸ்தானி ராகம். கேட்பவரை கிறங்கடிக்கும் வன்மை வாய்ந்த ஒரு ராகம். நமது தென்னக கர்நாடக இசையில் கச்சேரியின் பிற்பகுதியில் இடம்பெறும் துக்கடாக்களுக்கு பயன்படுத்தப் படும் ராகம். எம்.எஸ். அம்மா அவர்கள் பாடிப் பிரபலமடைந்த வள்ளலாரின் "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்" மாண்ட் ராகத்தில் அமைந்தது தான்.

அந்த ராகத்தில் துவங்கும் "ஒரு நாள் போதுமா" பாடலைக் கேட்டு வரகுண பாண்டியன் மட்டும் அல்ல. நாமுமே அல்லவா கிறங்கிவிடுகிறோம்.

சரணத்தில் "குழலென்றும் .." என்ற வார்த்தைக்கு பிறகு ஒரு சிறு ஆலாபனை, ஸ்வரம் என்று பாடிய பிறகு அந்த வார்த்தைக்கு தக்கபடி குழலிசையில் முடிப்பதும், அதே போல "யாழென்றும்.." என்ற வார்த்தைக்கு பிறகு வரும் ஸ்வரங்களை வீணையில் இசைத்து பிறகு இரண்டு வார்த்தைகளையும் இணைத்து பாடலைத் தொடர்வதும்..... கே.வி.மகாதேவனுக்கு மட்டுமே சாத்தியம்...

கடைசி சரணத்தில் கவிஞர் ராகத்தின் பெயர்களை இணைத்து பாடல் வரிகளை அமைக்க அவற்றை முறையே தோடி, தர்பார், மோகனம், கானடா என்று அந்தந்த ராகங்களிலேயே அமைத்து ஒரு ராக முத்திரைப் பாடலாக அமைத்துவிட்டிருக்கிறார் கே.வி. மகாதேவன்.

இங்கு கையாண்ட ராகங்கள் அனைத்துமே தென்னாட்டுக்கு சொந்தமான கர்நாடக ராகங்கள் தான்.

ஹிந்துஸ்தானியில் மட்டும் தான் என்று இல்லை நான் உங்கள் கர்நாடக சங்கீதத்திலும் கரை கண்டவன் என்று ஹேமநாத பாகவதர் பறை சாற்றிக் கொள்வது போல வரிக்கு வரி ராகம் மாறும் பாடலாக அமைத்து கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப பாடலை அமைத்திருக்கும் விதம் அந்த கதாபாத்திரத்தை கே.வி. மகாதேவன் எந்த அளவுக்கு உள்வாங்கிக்கொண்டு இசை அமைத்திருக்கிறார் என்பதற்கு ஒரு சான்று.

ஒரு இசை அமைப்பாளர் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு இந்தப் பாடலின் மூலம் ஒரு இலக்கணமே வகுத்துக்கொடுத்திருக்கிறார் கே.வி. மகாதேவன் என்றால் அது மிகை அல்ல.

HdhAu6fbeIA

அடுத்து டி.ஆர். மகாலிங்கத்தின் கணீர்க் குரலில் இரண்டு பாடல்கள். இரண்டுமே சிறப்பான பாடல்கள்.

z2klpOa4SlU

"இல்லாததொன்றில்லை" என்ற விருத்தம். இந்த விருத்தம் சிம்மேந்திர மத்யமம், ஹிந்தோளம் ஆகிய இரண்டு ராகங்களின் சேர்க்கையில் அமைந்தது.

பீம்ப்ளாசில் அதாவது ஆபேரியில் - "இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை." - கவிஞர் இந்தப் பல்லவியை இறைவனுக்காக செய்தாரா அல்லது கே.வி. மகாதேவனை மனதில் வைத்துக்கொண்டு கொடுத்தாரா என்பது தெரியாது. ஆனால் இந்தப் பாடல் உண்மையிலேயே அரும்சாதனை தான். பாடலின்

உச்சத்தில் பொங்கும் உணர்ச்சிப் பெருக்கும், அதை சிறப்பாக பிரதிபலிக்கும் வண்ணம் வரிகளுக்கிடையே இணைத்திருக்கும் இணைப்பிசையும் பாடலை சிகரத்தில் ஏற்றி நிறுத்திவிடுகிறது.

இந்த மாதிரி ஒரு பாடலைக் கேட்டபிறகும் இறைவன் சும்மா இருப்பாரா?. பாணபத்திரருக்காக விறகு விற்க மட்டுமல்ல எதைச் செய்யவும் இறங்கி வரமாட்டாரா?

3Fu0546rs1g

அப்படி விறகுவெட்டியாக வரும் இறைவன் பாடுவதாக அமைந்த "பார்த்தாப் பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்" - பாடல். சரியான நாட்டுப்புற மெட்டுப் பாட்டு. இந்தப் பாடலை வெற்றிப் பாடலாக மாற்ற மகாதேவனுக்கு கைகொடுத்த ராகம் சிந்துபைரவி.

shivaji.JPG

அடுத்து ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்குவதற்காக விறகு வெட்டியாக வந்த பரமன் அவர் தங்கி இருக்கும் மாளிகையின் வெளியே உள்ள திண்ணையில் வந்து படுத்துக்கொண்டு பாடுவதாக அமைந்த பாடல் "பாட்டும் நானே பாவமும் நானே".
xg_hBWlR3h0

paattum-naane.jpg


டி.எம். சௌந்தரராஜன் அற்புதமாகப் பாடி இருக்கும் இந்தப் பாட்டுக்கு மகாதேவன் அமைத்த இசை .. உச்சத்தின் உச்சம். "கௌரி மனோகரி" ராகத்தைக் கையாண்டு இந்தப் பாடலை அமைத்திருக்கிறார் கே.வி.மகாதேவன்.


எச்சகச்ச முறை திருவிளையாடல் படத்தை டிவியில் பார்த்திருக்கிறேன். எண்ணிக்கை தெரியவில்லை. சோமெனி டைம்ஸ் டிவியில் பார்த்தும் சலிக்கவே சலிக்காத திரைப்படம் திருவிளையாடல்.

என்னதான் டிவியில் பார்த்தாலும் ஒரு திரைப்படத்தை திரையில் பார்க்கும்போது கிடைக்கிற பரவச நிலை நிச்சயமாக வேறெதிலும் கிடைக்காது. கர்ணன் படம் ஹிட்டடித்த ஜோரில் யாரோ புண்ணியவான் திருவிளையாடல் படத்தையும் கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பார்த்து ரிலீஸ் செய்திருக்கிறார். உட்ரா வண்டிய என உட்லாண்ட்ஸ் தியேட்டருக்கு அரக்க பரக்க ஓடினோம்.

தியேட்டருக்கு போய்ச்சேரும்போதே மணி ஆறேமுக்கால் கால்மணிநேர படம் முடிந்துவிட்டிருந்தது. அந்த கால்மணிநேரத்தில் கைலாய மலையின் புகை மண்டிய ஓப்பனிங் சீனும், சிவபெருமான் சிவாஜிசாரின் ஓப்பனிங்கும் , நாரதர் ஞானப்பழம்கொண்டு வந்து சிவபெருமான் ஃபேமிலியில் கும்மி அடிப்பதும்.. அதனால் கடுப்பான குன்றேறி குமரன் பட்டையும் கொட்டையுமாக பழனிமலைமேல் ஏறிக்கொள்வதும்.. அவரை இறக்க அவ்வையார் போவதும் மிஸ்ஸாகிவிட்டது.

உள்ளே நுழைந்து சீட் நம்பர் பார்த்து அமரும் போதுதான்.. நாமறிந்த அவ்வையாரான கே.பி.சுந்தராம்பாள் குன்றின் மேல் கோவணத்தோடு நிற்கும் குமரனுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தார். தியேட்டர் ஹவுஸ்ஃபுல் என்பது அந்த இருட்டிலும் தெரிந்தது.
பாட்ஷா படத்தில் ரஜினிசார் ‘’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’’ என்று சொன்னதும் ரசிகர்கள் விசிலடித்து சிலிர்த்து கைதட்டி மகிழ்வார்களே அதே போல கேபிசுந்தராம்பாள் ‘’பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா..’’ என பாட ரசிகர்கள் சிலிர்த்துக்கொண்டதை பார்க்க தமாஷாக இருந்தது. பல்லுப்போன தாத்தா பாட்டிகள் நிறைய பேர் பேரன் பேத்திகளோடு உற்சாகமாக கைத்தட்டி பாடலை தாளம்போட்டு ரசித்துக்கொண்டிருந்தனர். தியேட்டர் முழுக்க ஏகப்பட்ட சிவாஜி ரசிகர்கள். பக்தர்கள்.

அவ்வையார் முருகனை கூல் பண்ணமுடியாமல் கடுப்பாகி ‘’உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கோ உரிமையுண்டூ...’’ என்றெல்லாம் சொல்லி டிரைப்பண்ணி வேலைக்கு ஆகாமல் பாடிபாடி டயர்டாகி வீட்டுக்கு கிளம்பிவிடுகிறார். பார்வதி தேவியான சாவித்திரி பச்சை பெயின்டில் வந்து முருகனை சாந்தப்படுத்த உன் அப்பாவின் திருவிளையாடல்களை சொல்கிறேன் கேள் என்று ஃப்ளாஷ்பேக்கை ஓப்பன் பண்ணுகிறார்.

கட் பண்ணினால் மதுரை. தேவிகாவுக்கு ஒரு ஓப்பனிங் சாங்.. ‘’பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்’’ . செம பாட்டு.. குட் லிரிக்ஸ்.. சூப்பரான கலர்ஸ். தேவிகா அவ்வளவு அழகு. என்னதான் சாமிப்படமாக இருந்தாலும் கமர்ஷியல் காரணங்களுக்காக ஒரு குளியல் குமால்டிங்கான சீனையும் சொருகியிருக்கிறார் இயக்குனர். ம்ம்.. டிவைன். (பல வருடங்களாக தொங்கிப்போயிருந்த பல பெரிசுகளின் துவண்ட நெஞ்சுகள் தேவிகாவை பார்த்ததும் குபுக்கென குமுறியிருக்கும் என்பது மட்டும் உறுதி!..)

பாட்டு முடிந்ததும் பாண்டியமன்னனான முத்துராமன் வருகிறார். கீழோர் மறப்பர் மேலோர் நினைப்பர் என்கிற பாட்டுக்கு என்ன அர்த்தம் சொல்லு என தேவிகாவிடம் சொல்லி.. அதற்கு ஒரு சூப்பர் விளக்கமும் கொடுக்கிறார். அப்படியே பேச்சுவாக்கில் போகிற போக்கில் உன் கூந்தலுக்கு இயற்கையில் மணமா செயற்கையில் மணமா என சந்தேகத்தை எழுப்பி.. அதுக்கு பரிசுகொடுக்கிறேன் என தண்டோரா போட.. படத்தின் இன்னொரு சூப்பர் ஸ்டாரான நாகேஷ் என்ட்ரி!

ஸ்பான்டேனியஸ் என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. நிறைய இங்கிலீஸ் விமர்சனங்களில் படித்திருக்கிறேன், அதை எங்காவது உபயோக்கிக்க வேண்டும் என நினைத்ததுண்டு. நாகேஷ்தான் அந்த வார்த்தைக்கேற்ற நடிகர். அடேங்கப்பா என்ன ஒரு ஆக்டிங். மண்டபத்தில் பாட்டெழுதி கொடுக்கும் சிவபெருமானிடம் அவர் பண்ணுகிற சேட்டைகள்.. ஒரிஜினல் சிவபெருமானே ரசித்து சிரித்திருப்பார். அவ்வளவு ஸ்பான்டேனியஸ்!

ஸ்கிரீன் பிரசென்ஸில் சிவாஜியை அடித்துக்கொள்ள முடியாது.. அவரையே தூக்கி சாப்பிட்டு முழுங்கி ஏப்பம் விடுகிறார் நாகேஷ். என்ன மாதிரியான ஒரு கலைஞன்..

ஆற்றாமையையும் வறுமையையும் இயலாமையையும் ஏழ்மையையும் இன்னும் நிறைய மைகளையும் ஒருங்கே தன்னுடைய முகத்திலும் பாடிலேங்வேஜிலும் காட்டி அசத்துகிறார். சிம்ப்ளி சூப்பர்ப்! அவருடைய அந்த தருமி போர்ஷனுக்காகவே படத்தை பத்துமுறை பார்க்கலாம். நாகேஷுக்கு பிறகு அவருடைய திரைவிழுங்குகிற தன்மை வடிவேலுவுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.

தருமி கதை முடிந்ததும், தாட்சாயினி கதை தொடங்குகிறது. தட்சனின் யாகத்தில் ஏதோ அவில்பாகம் (அப்படீனா என்ன யாராவது விளக்கலாம்) குடுக்கவில்லையென சிவபெருமான் காண்டாகி தாட்சாயிணியோடு சண்டையிட்டு போரிட்டு வாயிலிருந்து கற்பூரத்தை வரவைத்து தாட்சாயிணியை எரித்து சாம்பலாக்கி ருத்ர தாண்டவம் ஆடுகிறார். இப்பாகம் முழுக்க சிவாஜிசாரின் செம பர்பாமென்ஸ்.. அதிலும் தாட்சாயணியை போ போ என விரட்டும்போது அரங்கம் அதிர்கிறது. விசில் பறக்கிறது. சிவாஜி ரசிகர்கள் தெயவ்மே என சிலிர்க்கிறார்கள்.

சிவமில்லையேல் சக்தியில்லை சக்தியில்லையேல்சிவமில்லை என்பதை உலகுக்கு உணர்த்த சூப்பரான டான்ஸ் ஒன்றை ஆடுகிறார் சிவன்ஜி! அவருக்கு நடனம் சரியாக வராது என்பது உலகறிந்த செய்தி என்பதால் எடிட்டரும் நடன இயக்குனரும் ஓவர் டைம் பார்த்து அந்த காட்சியை செதுக்கியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சின்ன சின்ன ஷாட்டுகள்.. ஒவ்வொரு நடன அசைவுக்கு ஒரு ஷாட்.. நடனம் தொங்கலாக இருக்குமிடங்களிலெல்லாம் கேமரா ஆடுகிறது.. சிகப்பு விளக்கு எரிகிறது.. எப்படியோ ஒப்பேற்றி அந்த நடனத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். இடைவேளை.

(உச்சா போய்விட்டு வந்து பப்ஸ் வாயோடு தோழரிடம் சிவாஜிசாரை நக்கலடித்து சிரித்துக்கொண்டிருந்தேன். எனக்கு அருகில் இருந்தவர் ஒருமாதிரியாக முறைத்துப் பார்த்துக்கொண்டேயிருந்தார். அடித்துவிடுவாரோ என்றுகூட தோன்றியது. கண்டுக்காமல் சிவாஜிக்கு தொப்பைய பாத்தீங்களா பாஸ்.. சாவித்திரிக்கு அதவிட பெரிய தொப்பை என நக்கல் பண்ணிக்கொண்டிருந்தோம்.. திடீரென அந்த மர்ம நபரின் செல்ஃபோன் ஒலித்தது.. ‘’இதோ எந்தன் தெய்வம் முன்னாலே..’’ தோழர் அரண்டுபோய்விட்டார். இந்த பாட்டை ரிங்டோனாக வைத்திருப்பவர் நிச்சயம் சிவாஜி வெறியராகத்தான் இருக்கவேண்டும்.. ஓடிடுவோம்.. என்றார். அவர் சொல்லிமுடிப்பதற்குள் நான் என் சீட்டில் இருந்தேன்)

அடுத்தது மீனவர் கதை. இதில் மீனப்பெண்ணாக பிறந்த பார்வதியை மணமுடிக்க எல்லா சேட்டைகளும் செய்கிறார் சிவபெருமான். வயசுப்பொண்ணை கையபுடிச்சு இழுக்கிறார். எல்லாமே ரஜினி ஸ்டைல். நடை,சிரிப்பு,சண்டைபோடும் ஸ்டைல்,ரொமான்ஸ் என எல்லாமே ரஜினிகாந்த் செய்துகிறாரே அச்சு அசல் அதே அதே!. (சந்திரமுகி கிளைமாக்ஸில் வருகிற வேட்டையபுரம் மகாராஜா செய்வதைப்போலவே செம வில்லத்தனம் காட்டுகிறார் சிவாஜி!) ரஜினியின் ஸ்டைலை சிவாஜிசார் நிறையவே பாதித்திருக்கிறார் என்பதை படத்தின் இந்த பாகத்தில் உணரலாம்.

பஸ்ட் ஆஃப் ஆக்சன் காமெடி சென்டிமென்ட் என்றால் செகன்ட் ஆஃப் மியூசிக்கல். கிட்டத்தட்ட ஆறு பாட்டு! எல்லாமே அற்புதம். பாட்டும் நானே பாவமும் நானே.. தொடங்கி கிளைமாக்ஸ் அவ்வையாரின் ஒன்றானவன் இரண்டானவன் பாடல் வரைக்கும்.. பாடல்களுக்கு நடுவில்தான் காட்சிகள்! முதல் பாதியில் நாகேஷ் என்றால் இரண்டாம் பாதியில் பாலைய்யாவும் டிஆர் மகாலிங்கமும்.. ‘’இஷைத்தமிழ் நீ ஷெய்த அருஞ்ஷாதனை’’ என அவர் பாடத்தொடங்க.. ஏஆர் ரஹ்மான் லைவ் இன் கான்செர்ட்டில் தில்சேரே.. என பாடும் போது கரகோஷங்கள் எழுமே அதைவிட அதிகமான கரவொலி. ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என ரசிகர்கள் துள்ளுகிறார்கள். சில இடங்களில் கொஞ்சம் பழைய ஸ்டைல் ஆக்டிங்கால் டிஆர் மகாலிங்கம் சமகால டிஆர் போல சிரிக்க வைத்துவிடுகிறார் (தட்ஸ் ஓக்கே).

ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை.. நான் அசைந்தால் அசையும் அகிலமெலாமே என பாடி புரியவைக்கிறார் சிவாஜி. பிறகு பாணபத்திரருக்கு காட்சி தந்து ஒருவழியாக ஃபிளாஷ்பேக் முடிந்துவிடுகிறது. மூன்று கதைகளை கேட்டபிறகு நான்காவது கதையை சொல்ல தொடங்கிவிடுவாரோ என்கிற பயத்திலோ என்னவோ முருகன் கூல் டவுன் ஆகிறார். சிவபெருமான் தோன்றி நீ அமர்ந்த இந்த மலை பழம்நீ என்று விளங்கட்டும் என அருள்பாலிக்கிறார். பழனிமலை எப்படி உருவானது என்பதுதான் இந்தப்படத்தின் ஒன்லைன் என்று புரிகிறது.

விநாயகர்,சிவபெருமான்,பார்வதி,முருகன் என குடும்பத்தோடு குன்றில் மேல் நிற்க.. அந்த வழியாக வரும் அவ்வையாரை கூப்பிட்டு சிவபெருமான் ஒன்று இரண்டு மூன்று என என்னை வாழ்த்தி பாடு என ஜாலியாக பாடவைத்து மகிழ்கிறார். படம் முடிகிறது!
தமிழ்சினிமாவில் சிவபெருமானாக ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மனோகர் தொடங்கி ஏஎம் ராஜன்,விகே ராமசாமி, கேப்டன் விஜயகாந்த்,ரஜினிகாந்த்,கமலஹாசன் வரைக்கும் பலரும் நடித்த கேரக்டர்தான் என்றாலும்.. மேச்சோவான நடிகராக போற்றப்படும் சிவாஜி அப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும்போது சிவபெருமானுக்கே ஒரு கம்பீரமும் உக்கிரமும் வந்துவிடுகிறது. வெர்சடைலான நடிப்பில் அசத்தும் சிவாஜிசாருக்கு நவரச நடிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது இந்தப்படத்தில்.

தருமியில் காமெடி, தாட்சாயிணியிடம் ரஜினிஸ்டைல் ‘’பொம்பளை பொம்பளையா இருக்கணும்’’ ஆண்மைத்திமிர், நக்கீரரிடம் கோபம், மீனவ பெண்ணிடம் ரொமான்ஸ்,ருத்ர தாண்டவ டான்ஸ், பார்த்தா பசுமரம் என குத்துப்பாட்டுக்கு லோக்கல் டான்ஸ், திமிங்கலத்தோடு வீரம் என கலவையான நடிப்பு.. ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம். பாட்டும் நானே பாடலிலும் அதற்கு முந்தையா பிந்தைய காட்சிகளிலும் சிவாஜிசாரின் நடிப்பை பாராட்ட எனக்கு வயது பத்தாது!

படத்தின் வசனகர்த்தா மாபெரும் தமிழ் இலக்கிய பேராசிரியாக இருக்கவேண்டும். எல்லாமே கிளாசிக். இன்றைக்கும் தமிழகத்தின் எங்காவது மூலையில் யார்வாயிலாவது இப்படத்தின் வசனங்கள் உச்சரிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. சிவபெருமானுக்கான டயலாக்குகள் எல்லாமே டாப்டக்கர்.

அன்றைக்கு இருந்த தொழில்நுட்பங்களையும் கிராபிக்ஸ் உத்திகளையும் பயன்படுத்தி எடுத்திருந்தாலும் இறுதியில் சிவாஜி,நாகேஷ்,சாவித்திரி,பாலையா.டிஆர் மகாலிங்கம் மாதிரியான மாபெரும் நடிகர்களின் நடிப்புக்கு முன்னால் சுமாரான கிராபிக்ஸோ, வரைந்து வைத்திருக்கும் அரங்க அமைப்புகளோ ஒரு குறையாகவே தெரியவில்லை. கேவி மகாதேவனின் இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஏற்கனவே சொன்னதுபோல அவருடைய இசைதான் இரண்டாம் பாதி முழுக்க படத்தை காப்பாற்றுகிறது.

என்னதான் பக்திப்படமாகவே இருந்தாலும், காமெடி,சென்டிமென்ட்,ஆக்சன்,ரொமான்ஸ்,கவர்ச்சி என எல்லாமே கலந்த கலவையாக ஒரு நல்ல மசாலா படம் பார்த்த திருப்தியை தருகிறது திருவிளையாடல். டிவியில் பார்க்கும்போது கிடைக்காத ஒரு உற்சாகமும் மனநிறைவும் தியேட்டரில் பார்க்கும் போது தொற்றிக்கொள்கிறது. நீங்கள் நாத்திகரோ ஆத்திகரோ சிவபெருமான் மேல் நம்பிக்கையிருக்கோ இல்லையோ, சிவாஜி ரசிகரோ இல்லையோ.. நிச்சயம் இப்படம் உங்களை மகிழ்விக்கும் என்பது மட்டும் நிச்சயம். வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் தியேட்டரில் பாருங்க!


திருவிளையாடல் - புராணப் படங்களில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்த படம்.

zztzKqHb66c&feature=fvsr[/youtube

Edited by வர்ஷா

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0