நிர்வாகி

திமுக தேர்தல் அறிக்கை 2016

Rate this topic:

3 posts in this topic

 1. மதுவிலக்கை அமல்படுத்தச் சட்டம் நிறைவேற்றப்படும்,.
 2. மதுவிற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்படும்.
 3. மதுவிலக்கு இழப்பை ஈடுகட்ட உரிய திட்டங்கள் கொண்டு வரப்படும்.
 4. டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு.
 5. மதுவுக்கு அடிமையானோருக்கு சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு.
 6. விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை மற்றும் சிறு, குறு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
 7. ஏரிகளைத் தூர்வார ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
 8. வெள்ளத்தினால் ஏற்படும் சேதத்தை தடுக்க ரூ.5,000 கோடி.
 9. அனைத்து ரக விதை நெல்லுக்கும் முழு மானியம்.
 10. மகளிருக்கு 9 மாதம் பேறுகால விடுப்பு அளிக்கப்படும்.
 11. கல்விக் கடன் தள்ளுபடி
 12. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படும்.
 13. மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும்.
 14. பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியருக்குக் ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும்.
 15. ஆட்டோ வாங்குவதற்கு அரசு ரூ.10,000 மானியம் வழங்கும்.
 16. முதியோர் உதவித்தொகை ரூ.1,300 ஆக உயர்த்தப்படும்.
 17. பட்டதாரிப் பெண்கள் கலப்புத் திருமண உதவித் தொகை ரூ.60,000 மற்றும் 4 கிராம் தங்கம்.
 18. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.
 19. நெசவாளர் வீடுகட்ட ரூ.3 லட்சம் மானியம் அளிக்கப்படும்.
 20. மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.
 21. மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.
 22. படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.
 23. முதியோருக்குக் கட்டணமில்லா பயணச் சலுகை.
 24. தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்.
 25. விசைத்தறிக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
 26. நெல்கொள்முதலுக்கு ஆதார விலை ரூ.2000 என்று நிர்ணயிக்கப்பட்டு ரூ.2,500 வரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 27. தந்தை பெரியார் பிறந்தநாள் பகுத்தறிவு தினமாக கொண்டாடப்படும்.
 28. பட்டாதாரிகள் சுயதொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
 29. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் தொடரும்.
 30. அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு அமைக்கப்படும்.
 31. ஏழை மக்கள் வசதிக்காக அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும்.
 32. விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு போன்ற குடும்ப அட்டை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
 33. மதுரை முதல் தூத்துகுடி வரை தொழிற்சாலைகள் நிரம்பிய நெடுஞ்சாலை.
 34. மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை.
 35. அனைத்து மாணவர்களுக்கும் 3ஜி/4ஜி இணையதள வசதி செய்து தரப்படும்.
 36. மீனவர் சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும்.
 37. தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமேலவை கொண்டு வரப்படும்.
 38. சென்னையை அடுத்த வண்டலூரில் துணை நகரம் அமைக்கப்படும்.
 39. நியாயமான விலையில் மணல் விற்பனை செய்யப்படும்.
 40. அரசுப்பள்ளிகளில் உள்ள 54,233 வேலைக்காலியிடங்கள் நிரப்பப்படும்.
 41. வசதியில்லாதவர்களுக்கு சலுகை விலையில் கைபேசி வழங்கப்படும்.
 42. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 43. கொடைக்கானலில் தோட்டக்கலை ஆய்வு மையம்.
 44. ஊரக வேலைவாய்ப்புக் கூலி ரூ.100லிருந்து ரூ.150ஆக அதிகரிக்கப்படும்.
 45. தொடக்கப்பள்ளி சத்துணவில் பால் சேர்க்கப்படும்.
 46. பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும்.
 47. பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.
 48. வெள்ளத்தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்.

முழு அறிக்கை

Share this post


Link to post
Share on other sites

திமுக தேர்தல் அறிக்கை 2006  2006 - 2011 வரை திமுக ஆட்சி செய்த காலம்.


* தமிழகத்திலுள்ள எல்லா விமான நிலையங்களிலும் வந்து போகும் விமானங்களிலும் செய்யப்படும் அனைத்து அறி விப்புகளும் தமிழ் மொழியிலும் இருக்க வேண்டுமென்று வலியுறுத்துவோம்.

* தமிழ் அறிஞர்களுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படவிருக்கும் விருதுகளுக்கு "தொல்காப்பியர் விருது'', "திருவள்ளுவர் விருது'' என்று பெயர் வைத்திடுமாறு வலியுறுத்துவோம்.

* திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பதற்கு வலியுறுத்துவோம்.

* சிறு குறு விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட கூட்டுறவுக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வோம்.

* கரும்பு விவசாயிகள் இதுவரை செலுத்தி வந்த லாரி வாடகையை நிர்வாகமே செலுத்த வழி வகை செய்வோம்.

* தமிழகத்தில் மொத்தம் உள்ள சுமார் 55 இலட்சம் ஏக்கர் தரிசு நிலங்களைப் பயன்படுத்தி, நிலமற்ற ஒவ்வொரு ஏழை விவசாயக் குடும்பத்திற்கும் குறைந்த பட்சம் இரண்டு ஏக்கர் நிலம் வீதம் வழங்குவோம்.

* தென் மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வோம்.

* கிராமப்புறக் குடிசைத் தொழில், மற்றும் சுய வேலை வாய்ப்புகளைப் பெருக்கிட கிராமப்புற குறுநிதிக் குழுக்களை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவோம்.

* கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகள் இயற்கை மரணமடைந்தால் அவர்கள் கூட்டுறவு வங்கி களுக்கு செலுத்த வேண்டிய கடனும் வட்டியும் அறவே தள்ளுபடி செய்வோம்.

* சிறு வாணிபம் செய்வோர் வளம் பெறவும் அவர்கள் தண்டல் வட்டியிலிருந்து விடு படவும் கூட்டுறவு வங்கி களின் மூலம் எளிய முறையில் வாராந்திரக் கடன் பெற உரிய நடவடிக்கைகள் மேற் கொள்வோம்.

* மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ள ஆசிரி யர் பணி இடங்களை உடனடியாக நிரப்புவோம்.

* மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற குறிக்கோளை நடை முறைப் படுத்துவோம்.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசுக் கல்லூரி யில் ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பும் பட்டயப் படிப்பும் துவக்க நடவடிக்கை மேற் கொள்வோம்.

* பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களுக்கு அவர்களுடைய முழுக்கல்விக்கட்டணம் தங்கும் விடுதிக் கட்டணம் போன்றவற்றை அரசே ஏற்று அவர்கள் கல்வி பெற துணை நிற்போம்.

* மாணவர்களுக்கு சத்துணவோடு வாரம் இரண்டு முறை, திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முட்டை வழங்கப்படும்.

* விளையாட்டரங்கங்கள் இல்லாத மாவட்டத் தலைநகரங்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

* கிராமப்புற இளைஞர்களுக்கு கணினிப் பயிற்சி எட்டாக்கனியாக இருப்பதால் கிராமப் பகுதிகளில் கணி னிப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு, இலவசமாகப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடை முறைப்படுத்துவோம்.

* தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியைப் பயன்படுத்தி கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை உருவாக்கி வேலை வாய்ப்பு பெருகுவதற்கு முயற்சி மேற் கொள்வோம்.

* அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் 300 ரூபாய் வழங்குவோம்.

* மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களுடைய வரு மானத்தை பெருக்கிக்கொள் ளும் வகையில் உணவுப் பொருட்களை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* தற்போதுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை போலவே, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்காக சுய உதவிக் குழுக்கள் திட்டம் ஒன்றை புதிதாக தொடங்குவோம்.

ஐந்தாண்டு காலமாக கூட் டுறவு தேர்தலையே நடத்த வில்லை என்பதை சுட்டிக்காட்டுவதோடு உடனடியாக கூட்டுறவு தேர்தல்களை நடத்துவோம்.

* நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைக்கு தற்போது கிலோ அரிசி ரூ.3.50 என்று விற்பதற்கு பதிலாக கிலோ அரிசி இரண்டு ரூபாய் வீதம் தரமான அரிசி வழங்கி தாய் மார்களின் உள்ளத்தை குளிர்விக்கும் பபசாதனை புரிவதுடன், தாய்மார்களின் பொழுது போக்குகளை மனதில் கொண்டு, பொது அறிவை பரப்புவதற்கும் பயன் படும் வகையில் தொலைக் காட்சி பெட்டியில்லாத ஒவ்வொரு வீட்டுக்கும் அறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்களையொட்டி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங் கும் திட்டம் தொடங்கப் பட்டு செயல்படுத்தப்படும்.

* கருவுற்ற ஏழை பெண்களுக்கு மகப்பேறுக்கு முன் மூன்று மாதங்களுக்கும், பின் மூன்று மாதங்களுக்கும் பேறு கால உதவியாக மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும்.

* ஏழையெளிய மக்களின் சமையல் எரிவாயு கடன்களை ரத்து செய்து, மீண்டும் தாய் மார்கள் சமையல் எரி வாயு அடுப்பு பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
* தமிழகத்தில் உள்ள அனைத்து நகர பகுதிகளிலும் அனுமதியில்லாமல் இதுவரை கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வோம். அந்த பகுதிகளில் சாலை வசதி, குடிநீர் வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்போம்.

* தமிழகத்தில் உள்ள முக்கிய இரண்டு வழிச்சாலைகளை நான்கு வழிச்சாலைகளாகவும், நான்கு வழிச்சாலைகளை ஆறு வழிச்சாலைகளாகவும் படிப்படியாக மாற்றுவோம்.

* சென்னை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகையையும், வாகன எண்ணிக் கையையும் கருத் தில் கொண்டு முக்கிய சந்திப்பு களில் புதிய பாலங்கள், மேம் பாலங்கள் அமைக்க ஆவன செய்வோம்.

* கிழக்கு கடற்கரை சாலையை கடலூர் தொடங்கி கன்னியாகுமரி வரை விரிவு படுத்துவதோடு, இருவழிச் சாலைகள் நான்கு வழிச்சாலை களாக மாற்றப்பட நடவடிக்கை எடுப்போம்.

* சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பெருநகர் மெட்ரோ சுரங்க வழி ரெயில் போக்குவரத்தை கொண்டு வருவோம்.

* தஞ்சையில் உள்ள ராணுவ விமானதளத்தை பொது மக்கள் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றிட முயற்சிகள் மேற்கொள்வோம்.

* மத மாற்ற தடைச்சட்டத்தை நீக்குவோம்.

* ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், அனைத்து மதங்களிலும் இருக்கின்ற ஆதிதிரா விடர்களுக்கும் கிடைக்குமாறு செய்வோம்.

* மதிப்புக்கூட்டு வரியை நடைமுறைப்படுத்த மாட்டோம்.

* சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டினை எதிர்ப்போம்.

* முதியோர், ஊனமுற்றோர், கணவனால் கை விடப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் போன்றவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் இரு நூறு ரூபாய் ஓய்வூதியம் 400 ரூபாயாக உயர்த்தப்பட்டு எண்ணிக்கை வரம்பு எதுவுமின்றி வழங்குவோம்.

* வேலை வாய்ப்பில் ஊன முற்றவர்களுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 200 ரூபாய் என்பது 500 ரூபாயாக உயர்த்தப்படும்.

சேலம், ஈரோடு, காஞ்சீபுரம், கரூர், அருப்புக்கோட்டை போன்ற நகரங்களில் நெசவுத் தொழில் சார்ந்த பூங்காக்களை அமைப்பதற்கு பாடுபடுவோம்.

* கிழக்கு கடற்கரை குதிகளிலும் மற்றும் கச்சத்தீவு அருகிலும் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதையும், கடத்தப்படுவதையும், சுட்டுக்கொல்லப்படுவதையும் தடுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

* சுனாமி நிவாரண நிதி வழங்கியதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்தும், உண்மையான பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய நிதி உதவி வழங்காதது குறித்தும் முறைகேடான முறையில் ஆளுங்கட்சியினருக்கு வழங் கப்பட்ட நிதி உதவி குறித்தும் விசாரணை நடத்துவோம்.

* உதகமண்டலம், ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதி சுற்றுலாத் தளங்களில் கம்பி வழி ஊர்திகள் அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற் கொள்வோம்.

* திருவள்ளுவர்பபபசிலையை அருகில் சென்று காண்பதற்கு நவீன படகு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவோம்.

* கண்ணகி சிலை மீண்டும் கடற்கரை சாலையில் அதே இடத்தில் நிறுவுவோம்.

* ரயில் கட்டண அளவுக்கு பேருந்து கட்டணத்தை சீராக்குவோம்.

* சினிமா வெளிப்புறக்காட்சி படப்பிடிப்புக்கு அரசு உயர்த்தியுள்ள கட்டணங்களை பெரிதும் குறைப்போம்.

* எம்.ஜி.ஆர். திரைப்பட நகரை, மீண்டும் புதிதாக உருவாக்குவோம்.

* நடிகர் திலகம் சிவாஜிக்கு பாண்டிச்சேரி அரசு அமைத்துள்ளது போன்ற சிலையையும், அத்துடன் மணி மண்டபத்தையும் விரைவில் அமைப்போம்.

* பெருந்தலைவர் காமராஜருக்கு பல நினைவு சின்னங்களையும், குமரிமுனையில் மணி மண்டபத்தையும் அமைத்துள்ள தி.மு.க. அரசு காமராஜர் பிறந்த நாளாம் ஜுலை 15-ந் தேதியை கல்விக்கண் திறந்த நாளாக அறிவித்து பள்ளிகளில் விழா எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளும்.

சென்னை புறநகர் பகுதிகளில் இயற்கையாக அமைந்துள்ள ஏரிப்பகுதிகளை சீரமைத்து புதிய குடிநீர் திட்டங்களை உருவாக்க செயல் திட்டங்களை வகுப்போம்.

தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற மேலவையை விரைவில் கொண்டு வர உரிய அரசியல் சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்துவோம்.

* `டெஸ்மா' சட்டத்தை அறவே ரத்து செய்வோம்.

* மத்திய அரசு தற்போது அமைக்க முன் வந்துள்ள 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டவுடன் தமிழகத்திலும் உடனடியாக நடைமுறைப்படுத்துவோம்.

* காவலர் குறை தீர்க்க, காவல்துறை மறுமலர்ச்சி பெற மூன்றாவது போலீஸ் கமிஷன் அமைப்போம்.

* கிராமப்புற மாணவர்கள், விவசாயிகள் வணிகர்கள் பயன்பெறும் வகையில் கழக ஆட்சிக் காலத்தில் இயக்கப்பட்ட சிறிய பேருந்துகளை மீண்டும் அறிமுகப்படுத்துவோம்.

* சென்னை மாநகரிலே போக்குவரத்து நெருக்கடிக்குப் பெரிதும் உள்ளாகி உள்ள பகுதிகளில் `பறக்கும் சாலை' திட்டத்தைச் செயல்படுத்துவோம்.

* சென்னை நகரின் முக்கிய வணிக மையங்கள் பணி இடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பல அடுக்கு மாடி கார் நிறுத்துமிடங்களை கட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்வோம்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now