சிம்மகர்ஜனை

ஆசீவக நெறி(அமணம்) - தமிழரின் அழிக்கப்பட்ட நெறி(ஆசீவகம் / Ajivika)

Rate this topic:

2 posts in this topic

என் இனிய தமிழ் மக்களுக்கு தமிழ்வேந்தனின் அன்பான வணக்கங்கள்,
    
1500 ஆண்டிற்கு முன் தமிழர்களின் அழிக்கப்பட்ட நெறியான ஆசீவக நெறியைப்(அமணம்) பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை உங்களிடம்பகிர்ந்துகொள்ளலாம் என உள்ளேன். இங்கு நான் பகிர்ந்துகொள்ளப்படும் கட்டுரைகள், ஆசீவக நெறியைப் பற்றி பல்வேறு இணையதளங்களில் பல்வேறு இடங்களில் தேடிக் கிடைத்தத் தரவுகளை வைத்து என் ஆய்வுகளின் தரவுகளையும் சேர்த்து எல்லோருக்கும் புரியும் விதம் ஒரு கோர்வையாகத் தொகுக்கப்பட்டது. இதன் மூலம், நம் உண்மையான வரலாறு என் மக்களுக்கு எளிதாகச் சென்றடையும் என்ற நோக்கத்துடனும் நம்பிக்கையுடன்தொடங்குகிறேன். நன்றி.

 

 

கட்டுரைகளை படிக்கத் தொடங்கும் முன்பு, மக்களிடம் இதுவரை பிறரால் பரப்பப்பட்ட தவறான கண்ணோட்டதிற்காக ஒரு தெளிவுரை:

       ஆசீவக நெறி(அமணம்>சமணம்) என்று கூறியவுடன், பெரும்பான்மையானோருக்கு நான் ஜைன நெறியைத்தான் விளக்கப் போகிறேன் என்று தோன்றும். இல்லை, ஆசீவக நெறி என்பது தமிழர்கள் ஆதி காலந்தொட்டு பின்பற்றி வந்த நெறியாகும். அந்நெறியை, கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சிவ நெறி, சமணர் கழுவேற்றத்தின் பொழுது அழித்தது(சிவனும் ஒரு ஆசீவகரே. அதைப் பற்றி பின்பு பார்ப்போம்). கடந்த எழுபது ஆண்டுகளில் தமிழர் தொடர்புகளுடன் ஆசீவக நெறியைப் பற்றி ஆய்வுகள் எழும் பொழுதெல்லாம் அது இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. இதன்மூலம், தமிழர்களின் உண்மையான வரலாறு அவர்களுக்கே இதுவரை தெரியாமல் வந்திருக்கிறது.

       தமிழ் ஆய்வுலகில் எப்பொழுதெல்லாம் தமிழகத்தில் ஆசீவக நெறியின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப் படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் அவை ஜைன நெறியின் அடையாளங்களாக மாற்றி காண்பிக்கப்படுகிறது. உதாரணமாக, தமிழ் ஆய்வுலகில் அமணர் ஜைனர் பற்றிய பொருள் குழப்பம் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இச்சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்துள்ளது. ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களை அருகர்கள் என்றும் பெரிய புராணம்(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) இவ்விருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. அத்துடன் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களைச் சாதி அமணர் என்றும் பிரித்து அடையாளப் படுத்தும். இப்படிப் பெரிய புராணம் ஆசீவகர்களையும் சைனர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதை முதன்முதலாக ஆராய்ந்து உரைத்தவர் பேரா. முனைவர் டி.வி.மகாலிங்கம் ஆவார். தமிழ்நாட்டிலுள்ள சங்க காலக் கற்படுக்கைகள் யாவும் ஆசீவகர்களுக்கு உரியன என்பதைச் சான்றுகளோடு நிறுவியவர் அவரே ஆவார். ஏறத்தாழ 60ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்த போதிலும் தமிழ் ஆய்வுலகம் அவரை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளது.

       இங்கு நான் விளக்கப்போவது,

 1. ஆசீவக நெறி என்றால் என்ன?. அது ஏன் எப்படி உருவானது?. யாரால் எங்கே உருவாக்கப்பட்டது?
 2. ஆசீவகம் பரவி இருந்த இடங்கள் யாவை?
 3. ஆசீவகம் எப்பொழுது யாரால் அழிக்கப்பட்டது?
 4. ஆசீவகச் சித்தர்கள் எந்ததெந்தத் துறைகளில் வலிமையாயிருந்தனர்?
 5. ஆசீவகத்தின் தெய்வங்கள் யாவர்?. அவர்கள் எப்படி ஆசீவக தெய்வங்கள்?

விநாயகர்

ஐயனார்(கழிவெண் பிறப்பு அல்லது நல்வெள்ளை நிறத்தை அடைந்தவர்கள்), எழுமுனிகள்(சப்தமுனிகள்), ஏழுகன்னிகள்(சப்தகன்னிகள்)

ஔவையார்

தெய்வ நிலையை அடைந்த ஆசீவகச் சித்தர்கள் - சிவன், திருமால்(விஷ்ணு), இந்திரன், வருணன், முருகன், ஐயப்பன்

ஏழுமுனிகளின் வடிவங்கள் - பிரம்மா

ஏழுகன்னிகளின் வடிவங்கள் - சரஸ்வதி, இலட்சுமி, காளி, மாரியம்மன்

அஷ்டலட்சுமி, மாதங்கி(கஜலட்சுமி)

 

அவர்கள் எப்படி ஆசீவகத்தின் தெய்வங்கள் என்பதை பின்பு விளக்கமாகப் பாப்போம்.

மேலும், ஆசீவக நெறியில் உள்ள கடவுள் கோட்பாடுகள்.

 1. ஆசீவக நெறி, ஜைன நெறி, புத்த நெறி இம்மூன்றிற்கும் உள்ள வேறுபாடு?
 2. ஆசீவக நெறி பற்றி உண்மைகள் வெளியே தெரிந்தால் யாருக்கு கட்டம்?
 3. ஆசீவக நெறியின் கோட்பாடுகள்
  1. ஆசீவகச் சித்தர்களின் படிநிலைகள் யாவை?
  2. ஆசீவக நெறியின் பிற கோட்பாடுகள்

இக்கட்டுரைகளின் தரவுகளின் மேற்கோள்களுக்கு நன்றிகள்:
1. தமிழர் சிந்தனைப் பேரவை(தமிழர் உலகம்)

    ஆசீவக நெறியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள,
    Youtube User Page - http://www.youtube.com/user/tamilsantham/videos

2. ஆதி. சங்கரர், கோரக்கர் சித்தர் பீடம்மூலை ஆற்றங்கரை
3. முனைவர் க. நெடுஞ்செழியன்

--இது வேறு ஒரு தளத்திலிருந்து எந்த அனுமதியுமின்றி சுடப்பட்டது... இது தமிழ்வேந்தன் என்பவரால் பதிய பட்டதாகும்...

விவாதம் புரிய விருமபுபவர்கள் இங்கேயும் விவாதித்துக் கொள்ளலாம்...

ஆசீவகம் என்ற தமிழ் நெறிக்கு தெய்வங்கள் என்ன... தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்...

Edited by சிம்மகர்ஜனை

Share this post


Link to post
Share on other sites

சமணர், புத்த கோவில்களை இடித்துத்தான் இப்போது இருக்கும் கோயில்கள் கட்டப்பட்டது என்று திருமாவளவன் அவர்கள் கூறியதற்கு யாரோ ஒருவர் ஒரு செவ்வியில் முதலில் அவை தமிழர்களின் வழிபாட்டுத் தளங்கள் தான் என்றும் பின் சமணர், புத்த கோயில்களாக மாற்றப்பட்டதாகவும் கூறியிருந்தார். அந்த செவ்வியை வழங்கியவர் யார், அதை முகநூலில் பகிர்ந்தவர் யாரென்றும் மறந்து விட்டேன். அவரிடம் எப்படி இந்தக் கோயில்கள் கை மாறி கை மாறி வந்தன என்று கேட்க வேண்டும்.  'தமிழர் உலகம்' கூறுவதும் இவர் கூறுவதும் சேரும் புள்ளி ஒன்றாக உள்ளதே! 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now