Sign in to follow this  
Followers 0
சராஜ்

'10'வது கோள்'

Rate this topic:

1 post in this topic

26kol.jpg

ஈரிஸ், மேற்பகுதியில் அதன் அருகே நிலவான டைஸ்னோமியா

பத்தாவது கோள்' என வானியலில் மட்டுமின்றி இந்தியா போன்ற நாடுகளில் சோதிட உலகிலும் பரபரப்பு ஏற்படுத்திய "ஸீனா'வுக்கு இப்போது நிரந்தரமான பெயர் -அதிகாரபூர்வ பெயர் சூட்டப்பட்டுள்ளது -ஈரிஸ் (உழ்ண்ள்).

இந்தக் "கோள் போன்றதொரு சிறு கோளை' 2005 ஜனவரி, 5 ஆம் தேதி கலிபோர்னியாவைச் சேர்ந்த மிக்கேல் ப்ரெüன் என்பவர் தலைமையிலான வானியலாளர்கள் குழுதான் கண்டறிந்தது.

2003 யுபி313 என்று குறிப்பிடப்பட்ட இந்தக் கோளுக்குத் தொலைக்காட்சிகளில் வரும் போரிடும் இளவரசியான "ஸீனா'வின் பெயரைத் தாற்காலிகமாகச் சூட்டியிருந்தார் அவள் ரசிகரான ப்ரெüன்.

இப்போதும் ட்ராஜன் போருக்குக் காரணமான கிரேக்கப் பெண் கடவுளான ஈரிஸ் பெயரையும் ப்ரெüன்தான் முன்மொழிந்தார்.

இதையேற்றுப் பெயர் சூட்டி, அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பன்னாட்டு வானியல் ஒன்றியம் (International Astronomical Union).

நெப்டியூன் சுற்றுப்பாதைக்கும் வெளியே க்யூபர் வட்டப் பகுதியில், (முன்னாள் ஒன்பதாவது கோளான) ப்ளூட்டோவைப் போன்றே, ஏறத்தாழ அதைவிட சற்றே பெரிதான (2,400 கி.மீ. விட்டம்) ஈரிஸ், கண்டறியப்பட்டபோது சூரியக் குடும்பத்தின் "பத்தாவது கோள்' என்று முன்வைக்கப்பட்டது.

பரவலாக நிலைகுலையச் செய்யும் அதிர்வினை ஏற்படுத்திக் கொண்டிருந்தது இந்தக் கண்டுபிடிப்பு.

ஆனால், கடந்த மாதம் செக் குடியரசின் பிரேக் நகரில் நடந்த மாநாட்டில், "க்யூபர் வட்டத்திலுள்ள இவையெல்லாம் கோள்கள் எனக் கருதக் கூடிய அளவில் இல்லாத சிறிய கோள்கள்; "கோள்களைப் போன்ற சிறுகோள்கள்' (dwarf planets),ஆனால், கோள்கள் அல்ல என்று வரையறுத்து, நிராகரித்து விட்டது பன்னாட்டு வானியல் ஒன்றியம்.

இந்த வரையறைதான், 76 ஆண்டு காலமாக இருந்துவந்த சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோள் என்ற தகுதி நிலையைச் "சின்னஞ்சிறு' ப்ளூட்டோவிடமிருந்தும் பறித்துவிட்டது.

ஒன்றியம் இப்போது புதிதாக உருவாக்கியுள்ள சிறுகோள்கள் பட்டியலில் "முன்னணியில்' ப்ளூட்டோ, ஈரிஸ் மற்றும் விண்பொருளான செரஸ்.

பெரிய மற்றும் மேலும் சிறப்பான தொலைநோக்கிகளைத் தற்போது வானியலாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் மேலும் "பொருள்கள்' கண்டுபிடிக்கப்பட, இந்தப் பட்டியல் விறுவிறுவென நீளும்!

கிரேக்க புராணக் கதைகளில் வருகிற தகராறுக்கும் சண்டை சச்சரவுக்குமான பெண் கடவுள்தான் ஈரிஸ்.

இந்தச் சிறுகோளும் வாக்குவாதங்களுக்கும் வரையறைக்கும், ப்ளூட்டோவின் தகுதியிழப்புக்கும் காரணமாக அமைந்ததால் பொருந்திப் போய்விட்டது இந்தப் பெயர்.

இந்தப் பெயர் அனேகமாக ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. அதிகாரபூர்வமான (முன்னாள் பத்தாவது!) இந்தச் சிறுகோளின் பெயர் (136199) ஈரிஸ்.

தாற்காலிகமாக காபிரியேல் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்த (136199) ஈரிஸ் 1 என்ற இதன் நிலவுக்கும் நிரந்தரமான புதுப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது -டைஸ்னோமியா.

கிரேக்க புராணக் கதைகளின்படி ஈரிஸின் இரு மகள்களில் கலகக்காரியான ஒருத்தியின் பெயர்தான் டைஸ்னோமியா. கலகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அமைதியான மற்றொருத்தியின் பெயர் யூனோமியா (விரைவில் இந்தப் பெயரைச் சூட்டவும் ஒரு நிலவு சிக்கக் கூடும்).

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0