Sign in to follow this  
Followers 0
மதன்மித்ரன்

சுட்டதுதான்.. ஒத்துக்கிறேன்...(part -3)

Rate this topic:

1 post in this topic

தமிழ் எழுத்துகளின் பொருள்கள்..

"அ"

1. திருமால்

2. சிவன்

3. 'எட்டு' என்னும் எண்ணின் குறி

_____

ஆ'

1. தோன்று / உண்டாகு (Come into Existence)

2. நிகழ் (happen, Occur)

3.முடிவுறு (to be finished, be done)

4. ஒத்துப்போ, இணக்கமாகு (be fit or agreeable)

5. உயர்வடை, சிறப்படை (Prosper, flourish)

6. ஆகு, ஆமை (be)

7. ஒப்பாகு (equal, match)

8. பொருத்து, கட்டு ( tie, bind)

9. நிகழ்த்து, செய்வி (cause, bring about)

10. ஆகுதல் (becoming)

11. எருது, மரை, எருமை ஆகியவற்றின் பெண்பால் (female of OX, Sombar and Buffalo)

12. காளை (bull)

13. ஆன்மா ( Soul)

14. முறை, விதம், ஆறு ( Way, Manner)

15. பசு (Cow)

________

'ஈ'

1. தானமாகக் கொடு, வழங்கு ( give alms, gift, donate)

2. கொடு, தா (give, offer)

3. படிப்பி ( give instruction)

4. படை, உண்டாக்கு (create, bring into existence)

5. நேர், இணங்கு (agree, consent)

6. ஈன் (bring forth)

7. ஈ / தேனி (இறக்கைகள் உடைய சிறிய உயிரின வகை) (fly)

8. நீக்கம், அழிவு (eradication, destruction)

9. வியப்புக் குறிப்பு (an exclamation of wonder)

________

உ'

1. இரண்டு என்னும் எண்ணின் குறி (symbol for the number 2 & it's usually written with out the loop)

2. சிவனின் ஆற்றல் (Energy of Siva)

________

'ஊ'

1. மாமிசம், ( meat, flesh)

2. தசை (flesh)

3. ஊன் (meat, flesh)

_________

'எ'

1. ஏழி என்னும் எண்ணின் குறி (symblo for the number 7 in Tamil Arithmetic)

2. அகவினா (interrogative base of the interrogative pronoun)

3. புறவினா (an interrogative prefix before a noun, meaning 'what', 'which')

_________

'ஏ'

1. பெருக்கம் (increase)

2. மிகுதி ( abundance)

3. அடுக்கு ( pile, row, tier, series)

4. மேல் நோக்குதல் (looking upward)

5. இறுமாப்பு ( pride, self-conceit, arrogance)

6. எய்தல்ல் (shooting [as an arrow])

7. அம்பு (arrow)

__________

ஐ'

1. வியப்பு (wonder)

2. அழகு (beauty)

3. மென்மை (slenderness)

4. நுண்மை (minuteness, subtleness)

5. கோழை (phlegm)

6. மார்புச்சளி , கபம் (bronchitis)

7. தலைவன் (lord, master)

8. கணவன் (husband)

9. ஆசிரியர் (preceptor, teacher)

10. ஐந்து (five, as in ஐவகை)

_________

'ஒ'

1. போல இரு (resemble)

2. சமமாகு (be equal)

3. தகுதியாகு, பொருந்து (be suited to, be in agreemetn with, be appropriate)

4. முரண்பாடற்றிரு (be consistent)

5. ஒற்றுமைப்படி ( be harmonious)

6. இணக்கம் உடையதாக் ஆகு (be acceptable)

7. ஒழுக்கமுடையராகு (be well-behaved, of good character)

8. இல்லாததொன்று இருந்தாற்போலக் காண் (appear as if it were)

_________________

'ஓ'

1. இணை / கூடு / புணர் (be one, have sex, copulate)

2. சென்று தங்குதல் (going and staying)

3. மதகுநீரைத் தாங்கும் பலகை (a device to stop the flow of water, shutter)

_________________

'க'

1. ஒன்று என்னும் தமிழ் எண்ணின் குறி (the sign representing the number one in Tamil)

2. பிரமன் (Brahma)

3. அக்கினி (Agni)

_________________

'கா'

1. காப்பாற்று / ஆதரவு கொடு (Protect, Shelter, Preserve)

2. காவல்செய் (Guard,Watch)

3. அனுசரி / கடைப்பிடி (observe (a vow etc), keep (a promise), maintain

4. தடு (restrain)

5. காப்பளி (rescue, safeguard)

6. சோலை (pleasure-grove)

7. பூ முதலியன வைக்கும் பெட்டி (receptacle or basket for flowers etc.,)

8. ஒரு நிறையளவு (a standard weight [ = 100 பலம்])

9. சரசுவதி (Sarasvati)

_________________

கூ'

1. பூமி / நிலம் (Earth)

2. கூவுதல் (Cooing [as of a dove])

_________________

கை'

1. உப்புச்சுவையாக இருத்தல், கரி (taste Salty)

2. கசப்பு (be bitter, unpleasant)

3. வேதனைப்படுதல், கடும்துண்பம் அடைதல் (be distressed, afflicted)

4. சினம்கொள்ளுதல், வெறு (be angry,hate)

5. ஒலி எழுப்புதல் (produce sound)

6. செலுத்து (propel, shoot [as an arrow])

7. ஊட்டுதல் (feed with the hand)

8. அணிசெய்தல், அலங்கரித்தல் (adorn, decorate)

9. தோளில் தொடங்கி மணிக்கட்டு வரையிலுள்ள பகுதி (arm)

10. சிறகு (wing of a bird)

11. மிதவை , தெப்பம் (raft)

12. படை (army)

13. ஒருவருடைய செல்வாக்கு, ஆதிக்கம் (one's influence, domination)

14.திறமை, ஆற்றல் (Strength, ability)

15. சிறுமை (samllness, littleness)

16. வழக்கு (custom, usage)

17. வரிசை , ஒழுங்கு (row, line)

18. ஒளிக்கதிர் (ray [of the sun])

9.

_________________

கோ'

1. நூல், கம்பி போன்றவற்றை ஒன்றில் நுழை, புகுத்து, நுழைத்து இணை (insert, thread, string)

2. இரு கை விரல்களைப் பினை (interlock the fingers)

3. ஒழுங்குபடுத்து (compose, order, arrange)

4. கணக்கிடு, தொகுத்துரை (enumerate, recount)

5. உடுத்து, அணி (wear, put on)

6. ஒன்று சேர் (unite, merge)

7. மூடு, கவி (envelop, cover)

8. எதிர் (oppose, resist)

9. (பயிர்) பால்பிடி (be in the milk [as grains)

10. பேரரசன், அரசன் (emperor, king)

11. தந்தை (father)

12. தலைமை (leadership)

13. மலை (mountain)

14. மண்பாண்டம் செய்பவர் (potter)

15. பசு (cow)

16. எருது (bull)

17. துறக்கம் (Heaven)

18. கண் (Eye)

19. நீர் ( Water)

_________________

சா'

1. இற, மரணமடைதல் (die, pass away)

2. வருத்திக்கொள்ளுதல், துன்பப்படுதல் (suffer, toil)

_________________

சீ'

1. கீறிக் கிளறு (Scratch [as fowls], tear up earth[as pigs], scrape)

2. துடை, துடைத்து அகற்று, தேய்த்து அலம்பு (sweep off, brush away, wipe off)

3. அகற்று, போக்கு (remove, expel, root out)

4. கூர்மையாக சீவு (sharpen)

5. சளி (mucous matter, phlegm)

6. சீழ் (pus)

7. இலக்குமி (goddess Lakshmi)

8. ஒளி, ஒளிர்வு (light, lustre)

9. இகழ்ச்சி, வெறுப்பு, சினம், அலட்சியம் போன்றவற்றை வெளிப்படுட்தப் பயன்படுத்தும் சொல்

_________________

'சே'

1. தங்கியிரு (abide, stay)

2. கிட, இருக்கைகொள் (lie)

3. உறங்கு (sleep)

4. அடை / எய்து ((get, obtain)

5. சிவப்பாகு (turn red, redden)

6. சினம் கொள் (get angry)

7. அழிஞ்சில் மரம் (marking-nut tree)

8. சிவப்பு (redness)

9. காளை (bull, ox)

_________________

சோ'

1. அரண் / கோட்டை (fortress, fortification)

_________________

'ஞா'

1. பற்று

2. பொருந்து (stick, adhere to)

_________________

'தா'

1. கொடு (give, provide)

2. வழங்கு (Supply, present, offer)

3. அளி (furnish, hand over)

4. ஊட்டு (feed)

5. தெரிவி (deliver, pass on, transmit, convey)

6. பலன் கொடு (yied, bring forth produce,provide)

7. கற்பி, அறிவுறுத்து (Educate)

8. படை, உருவாக்கு (Create, form)

9. ஈன்றெடு (beget, procreate)

10. உணர்த்து, சுட்டு (denote, express)

11. பொருள் ஈட்டு, திரட்டு (acquire, gather)

12. கைப்பற்று (capture)

13. அழை (call, summon)

14. நுழை, சொருகு (insert)

15. வலிமை (strength, power, might)

16. பாய்ச்சல் (rushing, dashing, charging)

17. வருத்தம், துன்பம் (Pain, distress)

18. குற்றம், மாசு (fault, blemish)

19. கேடு (decay)

20. சிதைவு (destruction)

21. குறைபாடு (deficiency, defect)

_________________

'தீ'

1. அறிவு (Knowledge, intellect)

2. நெருப்பு (fire)

3. அனல் (heat)

4. விளக்கு (lamp)

5. வேள்வித்தீ (sacrificial fire)

6. சினம் (anger)

7. தீமை ((evil)

8. நஞ்சு (poison)

9. நரகம் (hell)

10. சுடு (scar, cauterize)

11. பொசுக்கு, வாட்டு, வதக்கு, காயச்செய் (burn, torch, burn up, parch, scorch, dru up)

12. அழி (be ruined, perish)

_________________

'தூ'

1. தூய்மை (purity, cleanliness)

2. வெண்மை (Whitness)

3. ஒளிர்வு (brightness)

4. வலிமை (strength, might)

5. ஆதரவு, பற்றுக்கோடு (support, Prop)

6. இறைச்சி (meat)

7. பறவையின் இறகு

_________________

'தே'

1. தெய்வம் (deity)

_________________

தை'

1. ஒரு தாளக்குறிப்பு (an expression of beating time)

2. பத்தாவது தமிழ் மாதத்தின் பெயர் (name of 10th month of the Tamil Calender)

3. அலங்காரம் (decoration)

4. புனைவு (embellishment)

5. உட்புகுதல் (enter, dart)

6. வருத்து (rankle)

7. துணி போன்றவற்றை ஊசியைச் செலுத்தி இணைத்தல் (sew, stich)

8.பொருத்து (join)

9. உடுத்து (put on, wear)

10. சித்திரி (paint)

11. சூழ் (surround, encircle)

12. இடு (place)

13. பதி (set, enchase)

_________________

நா'

1. நாக்கு (tongue)

2. சொல் (Word)

3. தராசுமுள், துலைநா (Pointer in a balance)

4. மணியின் நாக்கு (clapper of a bell)

_________________

நீ'

1. முன்னிலை ஒருமைப் பெயர் (you)

2. பிரித்தல், விலகுதல், நீக்கு, அகலுதல் (Part from, Separate from, be removed)

3. துறத்தல் (renounce)

4. விடு , தியாகம் செய் (give up, sacrifice)

5. தாழ்த்து, இழி (despise, detest, put to disagree)

6. வெறுத்தல் (hate, dislike)

_________________

'நே'

1. அன்பு (love, affection)

2. கருணை (pity)

3. இரக்கம் (compassion)

4. ஈரம் (mercy)

_________________

'நை'

1. இற்று போதல் (be frayed, worn out)

2. இழை இழையாக பிரி (become threadbare, wear through)

3. நசுக்கு (be crushed, bruised)

4. குறைத்தல், சுருங்கு (decline, decrease, dwindle)

5. தளர் (droop, wilt, sag)

6. வருந்து (be distressed, afflicted)

7. இரங்கு (pity, be compassionate)

8. தன்னிலை இழத்தல் (lose oneself)}

9. அழி (ruin, destroy)

_________________

நொ'

1. வருந்து (suffer smart)

2. துன்புறு, துயர் (grieve, suffering, grief, agony)

3. சிறிதான தன்மை (smallness)

4. இலேசு (lightness)

______________

'நோ'

1. வலி (feel pain, ache)

2. வருந்து, மனம் புண்படு (be grieved, distressed, anguished, get hurt)

3. குறை கூறு (blame, fault, complain against)

4. பதனலி (be spoiled [as fruit, boiled rice])

5. வறுமையுறு (be impoverished, become poor)

_________________

பா'

1. தூய்மை (purity)

2. புனிதம் (holiness)

3. பருகுதல் (drinking)

4. பாதுகாப்பு (protection, safeguard)

5. செய்யுள் (metrical verse)

6. பாட்டு (poem)

7. பரப்பு (expense)

8. கைமரம் (rafter)

9. பாவு நூல் (warp)

10. பங்கிடு (distribute, share, apportion)

11. பகு (divide)

_________________

பூ'

1. பூமி (earth)

2. மலர் (flower, blossom)

3. சேவலின் கொண்டை (cock's comb)

4. நிறம் (colour)

5. வனப்பு (richness)

6. பொலிவு (flourishing condition)

7. கண்ணின் கருவிழியில் தோன்றும் வெண்புள்ளி (web, film or cataract in the eye)

8. யானையின் நெற்றிப் பட்டம் (Ornamental plate on the forehead of an elephent)

9. யானையின் நெற்றிப் புள்ளி (spots on an elephent's forehead)

10. விளைச்சலின் ஒரு போகம் (crop)

11. தேங்காய்த்துருவல் (flake of scarped coconut)

12. மத்தாப்பு முதலியவற்றின் பொறி (spart [from sparklers])

13. நாணயத்தின் தலைபகுதிக்கு மறுபக்கம் (tail of a coin)

14. பூப்பு (menstruation)

15. கூர்மை (sharpness, pointedness)

16. மென்மை (tenderness, delicacy)

17. படை(த்தல்) (create)

18. பெற்றெடு (give birth to)

19. தோன்று(தல்) (appear, manifest)

20. வளம்பெறு, பொலிவடை (flourish, prosper)

21. பூஞ்சனம் பிடி, உப்புபடி (become mouldy)

22. புன்னகை புரி (give or wear a smile)

23. மாதவிடாய் வெளியேறு (menstruate)

24. இகழ்ச்சி, அலட்சிய உணர்வு போன்றவற்றை குறிக்கும் வியப்புச்சொல் (a term signifying pooh poohing sb or sth)

_________________

பே'

1. அச்சம் (fear, fright)

2. நுரை (froth, foam, scum)

_________________

'பை'

1. பசுமை, பசுமையாகு, பசுமைபடர் (greenness, freshness, become green)

2. இளமை (youth)

3. அழகு (beauty)

4. வலிமை (strength, might, vigour)

5. துணி, தோல், காகிதம் போன்றவற்றால் செய்யப்பட்டதும் திறப்பு உடையதுமான கொள்கலம் (bag, satchel, purse)

6. சட்டையில் எழுதுகோல் முதலியவற்றை வைக்கத் தைக்கபட்ட அமைப்பு (pocket in Shirt etc.,)

7. விலங்குகளின் பை போன்ற உள்ளுறுப்பு (pouch, pouch like part in animal bodies)

8. பாம்பின் படம் (hood of a cobra)

9. பொங்கு(தல்) (swell, surge, become tumultuous as the sea)

10. ஒளிர்(தல்), சோபி (shine, look bright)

'பொ'

1. துளை (puncture, perforate, make a hole)

2. கொப்புளி (be blistered)

_________________

'போ'

1. (ஓர் இடத்திலிருந்து புறப்பட்டு வேறோர் இடத்திற்க்குச்) செல், ஏகு, பயணம் செய் (go, advance, proceed, travel)

2. நீங்கு (leave, go off)

3. விட்டு அகலு (be off, be relieved)

4. ஓங்கு (be tall)

5. கழிக்கப்படு (be subtracted)

6. அதிகமாகு (exceed)

7. மறை (disappear)

8. இல்லாமல் போ, ஒழி (cease)

9. நேராகு (become stright)

10. நிரம்பு (be full)

11. பிற (be born)

12. புறப்படு (depart, leave, move out or away)

13. திறனடை (become well-versed in)

14. விற்பனையாகு (be sold)

Edited by செந்தில்நாதன்.ப

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0