Sign in to follow this  
Followers 0
லீனாரோய்

"ஸ்லீப் அப்னியா"

Rate this topic:

27 posts in this topic

"ஸ்லீப் அப்னியா"

இந்தப் பெயர் அதிகம் பேர் கேள்விப்படாதது. ஆனால் அதிகம் பேருடன் தொடர்புள்ளது.

ஆம்! இது ஒரு மிகவும் மதிக்கப்படக் கூடிய, மரியாதையான ஒரு நோய். எம்மை அறியாமலே எமக்குள் இருக்கும் ஒரு நோய்.

நோயில் என்னடா மரியாதை என்று உங்கள் 'நறநறப்பு' எனக்குக் கேட்கிறது.

இந்த நோய் உள்ளவர்கள் நிம்மதியாக எந்த ஒரு கஷ்டமுமின்றி உறக்கதிலேயே பரலோகம் செல்ல அதிகளவு சாத்தியங்கள் உண்டு.

நிம்மதியான தூக்கம், நிம்மதியான மரணம். மரியாதையான நோய் என்று நான் சொன்னது சரிதானே!

இந்த நோய் மரியாதையானது என்று நான் சொன்னதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு.

அந்தக் காரணம், இந்த நோய் எனக்கு வந்ததுதான்.

ஆனால் இந்தப் பதிவு அந்த நோயைப் பற்றியதல்ல.

அப்படியெனின் எதுபற்றி........?

சொல்கிறேன்..............

அடிப்படையில் நான் மிகவும் சுறுசுறுப்பானவன்.

ஆனால் சிலகாலமாக நான் மிகவும் சோம்பலாகக் காணப்பட்டேன்.

என் உடலின் எடை திரிஷாவும் சர்ச்சையும் போல நாளொரு மேனியும் பொழுதொரு கிலோவுமாக வளரத் தொடங்கியது.

சிறிது கவலையானேன். உடன் மருத்துவரைப் பார்த்தேன்.

மூக்கின் மேல் விரலை வைத்த மருத்துவர். அந்த மூக்கில் அமர்ந்த ஈயைத் தட்டிவிட்டு, என்னிடம் சொன்னார்.

உங்களுக்கு "ஸ்லீப் அப்னியா" என்னும் நோய் இருப்பதாக நான் சந்தேகப் படுகிறேன் என்றார்.

என் மனைவியே என்னில் சந்தேகப்படுவதில்லை. என்னடா இந்த மனிதன் சந்தேகப்படுகிறாரே என்று நினைத்துவிட்டு.

மருத்துவரிடம் கேட்டேன், " டாக்டர், எனக்கு ஸ்லீப் தெரியும். அது என்ன அப்னீயா" என்றேன்.

அதற்கு அவர், எனக்கு அரை மணி நேரம் விளங்கப் படுத்தியதை இங்கே நான் அரை மணிக்கு எழுத முடியாது.

எனவே சுருக்கமாகச் சொன்னால், நாம் நித்திரை கொள்ளும் போது எமது மூச்சை சில செக்கன்களுக்கு நிறுத்தி விடுகிறோம்.

அதனால் எமது இரத்தத்தில் உள்ள ஆக்சிசன் வாயுவின் அளவு குறைந்து, இதயத்தின் செயற்பாடு நிறுத்தப்பட்டு, மாரடைப்பால் இறந்துவிடுவோம் அவ்வளவுதான்.

என்னை சோகமாகப் பார்த்த மருத்துவரின் பார்வையில், என்ன சைஸில் பெட்டி எடுக்கலாம் என்ற சேதி அடங்கியிருந்ததை நான் அறிந்து கொண்டேன்.

"இப்ப நான் என்ன செய்ய" என்று தம்பி படத்தில் மாதவன் கேட்ட ஸ்டைலில் நான் மருத்துவரைக் கேட்டேன்.

அதற்கு அவர், "நீங்க ஒன்றும் செய்ய முடியாது. நான்தான் ஏதாவது செய்ய வேண்டும்" என்றுவிட்டு, டெலிபோனின் எண்களை அழுத்தினார்.

யாருடனோ மிகவும் பொறுப்பாகக் கதைத்துவிட்டு, என்னிடம் சொன்னார்,

"மிஸ்டர் லீனா, உங்களுக்கு வந்திருப்பது ஒரு சிக்கலான நோய். அதை நாங்கள் சரியான வகையில் அளவிட்டு அறிய வேண்டும்.

இதற்கென மிகவும் பிரத்தியேகமான பரிசோதனைச் சாலைகளுடன் கூடிய சிறந்த வைத்தியசாலை ஜேர்மனியிலேயே, மூன்றுதான் உண்டு.

அதிர்ஷ்டவசமாக எனது நண்பன் ஒருவன் அதில் ஒரு வைத்திய சாலையில் வைத்தியராக இருக்கிறான். சாதாரணமாக அந்த வைத்தியசாலைக்கு

இடம் எடுப்பதற்கு நீங்கள் மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் எனது நண்பன் மூலம் உங்களுக்கு எதிர்வரும் 15ம் திகதி இடம் எடுத்து விட்டேன்.

என்ன வைத்தியசாலை இங்கிருந்து 200 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ளது. நீங்கள் உடன் அங்கு செல்லவும்" என்றார்.

"சென்று....." என்று ஈனஸ்வரமாக இழுத்தேன்.

" அங்கே ஒரு ஸ்லீப் லாபரட்டரி ஒன்று உண்டு. அதில் நீங்கள் நித்திரை செய்வதை பலவிதமான கருவிகள் மூலம் அளப்பார்கள். அதன் மூலம் இந்த நோய் உங்களுக்கு எந்த அளவிற்கு உண்டு என்பதை அறியலாம்" என்றார்.

பெட்டி என் கண்முன் வந்து பயமுறுத்தியதால் உடன் சம்மதித்தேன்.

அட பெட்டிக்குள் போகுமளவிற்கு உள்ள விசயம் ஏன் நகைச்சுவைப் பகுதியில் என்றுதானே நினைக்கிறீர்கள்.

வருகிறேன்...........

அழகான மலைகள் இருந்த பகுதியில் ரம்மியமாக அமைந்த இடத்தினுள் எனது வாகனம் அந்த வைத்தியசாலையை நோக்கிச் சென்றது.

மலை உச்சியில் கறுப்புக் கோட்டை போல தனியே அந்த வைத்தியசாலை அமைந்த்திருந்தது.

அந்த வைத்தியசாலை மிகவும் கட்டுப்பாடான கிருஸ்தவ மிசனால் நடத்தப்பட்டு வருகிறது.

அங்கு சென்றதும்தான் கவணித்தேன். பலர் கறுத்த அங்கி அணிந்து கொண்டு முகத்தையும் மூடியவாறு முக்காடிட்ட உடை அணிந்திருந்தனர்.

விசாரித்ததில், அவர்கள் எல்லாரும் கிருஸ்தவப் பாதிரிமார்கள் என்றும், வைத்தியசாலையுடன் இணைந்து அவர்களுக்குரிய பயிற்சிக் கல்லூரியும் இருந்தது என்றும் அறிந்தேன்.

ஏதோ இனம் புரியாத ஒருவகை உணர்ச்சி என் வயிற்றினூடாகப் பரவினாலும், வைத்திய சாலைக்குள் நுழைந்த்தேன்.

வெளியே பழைய கோட்டை போல தெரிந்த கட்டடம், உள்ளே ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் போலக் காட்சியளித்தது.

எனது மனம் ஓரளவு நிம்மதிக்கு வந்தது. அங்கே எனக்கு சகல் வசதிகளுடன் கூடிய பெரிய அறை தரப்பட்டது.

மணியடித்தால் ஓடி வந்து சேவை செய்ய காத்திருப்பவர்கள் போல தாதிகள் இருந்தார்கள்.

எனக்குரிய ஆரம்ப வைத்திய நடைமுறைகள் அனைத்தும் முடிந்தன. எல்லாம் முடிந்ததும் தலைமை வைத்தியர் என்னிடம் வந்தார்.

நலம் விசாரித்தலுடன் அன்று இரவு நித்திரை கொள்ளும் சோதனைச் சாலைக்கு என்னை ஒரு தாதி அழைத்துச் செல்வார் எனவும்,

நான் எப்போது ஆயத்தமோ அப்போது சொல்லலாம் என்றும், நாளை நான் மீண்டும் வீட்டிற்குச் செல்லலாம் என்று கூறி, மாலை வணக்கத்துடன் விடை பெற்றார்.

ஏற்கனவே பயணக் களைப்பில் இருந்த எனக்கு அப்போதே நித்திரை கண்னைச் சுழட்டியது. நேரமும் ஒன்பது மணியை தாண்டி விட்டது.

மணியை அடித்து தாதியை அழைத்தேன்.

மாடல் அழகிகள் டி.வியில் மட்டும் வருவதில்லை, நேரிலும் வருவார்கள் என்பது போல, மிகவும் அழகான தாதி ஒருவர் வந்து, என்னை நித்திரை சோதனைக்கு அழைத்துச் சென்றார்.

விமான நிலையங்களில் நடந்து செல்வது போல, மிக நீண்ட தூரம் நடந்து சென்று சோதனைச் சாலையை அடைந்தோம்.

அங்கே இன்னுமொரு மாடலிடம், மன்னிக்கவும் தாதியிடம் என்னை ஒப்படைத்துவிட்டு அவர் சென்றார்.

அந்தப் புதிய தாதி, ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்று என்னை ஜன்னலருகே அமைந்த ஒரு கட்டிலில் படுக்கச் செய்து, தலை முதல் கால்வரை அந்தத் தாதி எனக்கு..............

வித்தியாசமாக ஒன்றுமில்லை, பல விதமான வயர்களால் என்னை இணைத்தாள்.

அப்போதுதான் நிமிர்ந்து அறையைப் பார்த்தேன் சுற்றி வர பல விதமான கருவிகள். சுவரின் நான்கு மூலைகளிலும் வீடியோக் காமராக்கள்.

அவள் சொன்னாள், "நான் விளக்குகளை அணைத்து விட்டு சென்றதும் நீங்கள் நித்திரை கொள்ளுங்கள்.

அடுத்ததாக இருக்கும் அறையிலிருந்து நாங்கள், காமராக்கள் மூலமாகவும் கருவிகள் மூலமாகவும் உங்களையும் நீங்கள் நித்திரை செய்வதையும் அவதானிப்போம்.

நல்ல இரவு" என்றாள்.

விளக்கை அணைத்ததும் அவள அறையை விட்டு வெளியே சென்றாள்.

நான் படுக்க முயற்சித்தேன். முடியவில்லை.

ஆயிரம் வயர் சுற்றிய அபூர்வ சிந்தாமணியான நான் எப்படி உறங்குவது.

அப்போது மீண்டும் அறைக் கதவு தட்டப் பட்டு அந்தத் தாதி அறைக்குள் வந்தாள். வந்தவள் எனக்கு ஏன் நித்திரை வரவில்லை என்பது தனக்குப் புரிகிறது எனவும்,

அது தன் தவறுதான் என்றும், அதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டு, கட்டிலுக்கு அருகே இருந்த ஜன்னலை நன்றாகத் திறந்து விட்டாள்.

அத்துடன் அவள் சொன்னாள்,

"இப்போது நல்ல காற்று வரும். நிங்கள் நிம்மதியாகத் தூங்கலாம்" என்று சொல்லிவிட்டு மீண்டும் நல்ல இரவுடன் விடை பெற்றாள்.

அவள் சென்றதும் படுக்கையில் படுத்தபடி எனக்கருகே ஆவெனத் திறந்த படி உள்ள ஜன்னலூடாக பார்க்கத் திரும்பினேன்.

அங்கே நான் கண்ட காட்சி...........!

ஆயிரம் சிவப்பு நிறத்திலான மெழுகுவர்த்திகள் காற்றில் சலசலத்தபடி வரிசையாக அடுக்கப்பட்ட கல்லறைகளுடன் கூடிய மயானம்.

நான் இதுவரை மயானத்திற்குச் சென்றிருக்கிறேன். ஆனால் மயானத்தில் படுத்ததில்லை.

கடும் இருட்டில் இவ்வளவு சமீபமாக, இவ்வளவு சாவாதனமாக நான் இதுவரை மயானத்தைப் பார்த்ததில்லை

க்ளோஸ்டர் என்று சொல்லப்படும் சர்ச்சிற்குச் சொந்தமான மயானம் அது.

அவர்களுக்கு அது ஒரு புனிதமான இடம். ஆனால் எனக்கு...........

என்னில் இணைத்த வயர்களெல்லாம் குடல்களாகி வாய்க்குள் வந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

கண்னை மூடியபடி என்னை நானே தேற்றிக் கொண்டேன். பயம் கொள்வது ஆணுக்கு அழகில்லையல்லவா?

மனதை ஒரு நிலைப் படுத்தினேன். நித்திரை கொள்ள முயற்சித்தேன். ஆனால் மனம் கண்ணைத் திறந்து பார் பார் என்றது.

இடையிடையே முக்காடிட்ட அந்த பாதிரிமார்களின் உருவம் கண்முன்னே தோன்றி மறைந்தது.

விடிந்ததும் தலைமை வைத்தியர் என்னைச் சந்தித்தார்.

எனது ரீடிங்குகளை தான் நன்கே பார்த்ததாகவும், கிடைத்த தரவுகள் ஒழுங்கற்றவையாக இருந்ததாகவும், தனக்கே சற்றுக் குழப்பமாக இருப்பதாகவும், அது ஏன் எனத் தனக்குப் புரியவில்லை எனவும்,

எப்படி இருந்தாலும் இந்த முடிவுகளில் திருப்தியில்லை எனவும், மீண்டும் ஒரு முறை நான் இங்கே வந்து சோதிக்க வேண்டுமெனவும் கூறினார்.

அப்போது நான்,

"அந்த அறை மயானத்தோடே இருக்கும் வரை உங்களுக்குச் சரியான ரீடிங்குகள் கிடைக்க வாய்ப்பில்லை டாக்டர்" என்று அவருக்குச் சொல்லவில்லை.

என் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

என் கார் வீடு நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கியது.................

Share this post


Link to post
Share on other sites

லினா அண்ணா.. மிகவும் மனதை கடினப்படுத்திவீட்டீர்கள். உங்கள் நல்ல மனதிற்கு ஏதும் பயப்படவேண்டியதில்லை. ஏதும் தாமதிக்காமல் விரைவில் நல்ல மருத்துவம் எடுக்கவும்.. காலதாமதம் வேண்டாம்.

Share this post


Link to post
Share on other sites

இப்பதிவை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வதா அல்லது உங்களுக்கு உடல் நலம் இல்லை என எடுத்துக்கொள்வதா என்று ஒரு சிறு குழப்பம். உடல் நலத்தை நன்றாக பார்த்துக்கொள்ளவும்.

Share this post


Link to post
Share on other sites

லீனா அண்ணா இதை நீங்கள் நகைச்சுவை பகுதியில் பதித்திருப்பதால் சீரியஸாக எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன்.

அந்த பரிசோதனைகள் மூலம் உங்களுக்கு அது போன்ற நோய் ஏதும் இல்லையென்றும் முடிவுகள் வந்திருக்கலாம் .துரதிர்ஷ்டமாக இருந்திருந்தாலும் நல்லபடியாக குணமாகிவிட்டதாக இருக்கவேண்டும்.

நீங்கள் ஆரோகியத்துடன் நீடூழி வாழவேண்டும் அண்ணா....

Share this post


Link to post
Share on other sites

என்ன நகைச்சுவை பகுதியில் எல்லாம் இவ்வள்வு சீரியசாக வருத்தபடுகிறீர்கள்.

லீணா நீஜமாகவே இந்த களத்தில் பல பேருடைய நம்பிக்கையை பெற்று இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள். அடுத்த முறை கதை எழுதும் போது மூன்றாவது நபரை வைத்து எழுதுங்கள்.

இல்லை என்றால் எல்லாம் அழுவார்கள் போலிருக்கிறது. :)

ஒருவருக்கு உடல்நலமில்லை என்று வருத்தப்படுவது உங்களுக்கு சிரிப்பை வரவழைப்பது சற்று யோசிக்கவைக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

என் கார் வீடு நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கியது.................

ரெண்டு நாள் கண்முழித்து கார் ஓட்டினீர்களோ? :P

Share this post


Link to post
Share on other sites

லீனா அண்ணா என்ன இது விளையாட்டு இது எனக்கு பிடிக்கல....இனிமே இப்படி எல்லாம் எழுதா வேண்டாம்... :(

Share this post


Link to post
Share on other sites

லீனா அண்ணாஅ.... தங்களின் நல்ல மனதிற்க்கு எந்த விதமான கஷ்டமும் வராது. தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் :)

Share this post


Link to post
Share on other sites

என் அலுவலகத்தில் ஜோ என்ற பெயர் கொண்ட இயக்குனர் உள்ளார். அவரை தன் அறையைத்திறந்து வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டு இருப்பார்! நாங்கள் "இந்த ஆளுக்கு வேறு வேலையே இல்லையா" என்று சிரித்துக்கொள்வோம்... சமீபத்தில் தான் அவர் இந்த வியாதியால் அவதி படுகிறார் என்று எங்களுக்கு தெரிய வந்தது! அவர் நல்ல பருமனான உடல் வாகைக்கொண்டவர்!

பின் குறிப்பு: திரு.லீனா முழு குணம் அடைவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது! எப்ப பார்த்தாலும் திரிஷாவை நினைப்பதால் அவருக்கு கனவு வருகிறது- அதனால் தான் மேற்கண்ட பிரச்சனை உள்ளது. அவளை மறக்கவும் - எல்லாம் சரியாஇடும்..

Share this post


Link to post
Share on other sites

இந்த வியாதி பற்றி நான் எங்கேயோ படித்த ஞாபகம் இருக்கிறது. 40 வயதுக்கு மேல் நாம் நித்திரையில் சுவாசிக்கும் போது ஒட்சிசனின் அளவு குறைகிறதாகவும் பின்னர் படிப்படியாக அது குறைந்து வந்து ஒரு கட்டத்தில் அது முற்றாக நிற்கிறதாகவும் படித்தேன்.

இதற்கு சரியான மருத்துவம் இல்லை.

இரவில் நன்றாக தூக்கம் வர இரவில் நித்திரைக்கு போகும் முன்னர் கால்களை வென்னீரில் கழுவியபின் தூங்கினால் நித்திரை வரும். ஆழ்ந்த உறக்கம் பெரிதாக் எந்த பிரச்சனையையும் கொண்டுவராது.

ஒரு முறை இந்தியா சென்று உங்கள் உடல் நலத்தை பரிசோதியுங்கள் உலகிலேயே சிறந்த மருத்துவர்கள் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். சித்தர்கள் உட்பட

லீனா அண்ணன் சுகமடைய கோட்டுவாசல் பிள்ளையாரை வேண்டுகிறேன் ( ஞாபகம் இருக்கிறதா?)

Share this post


Link to post
Share on other sites

லீனா அண்ணா, உங்களுக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி மிக மிக வருந்துகிறேன். இதை ஏன் நகைச்சுவை பகுதியில் பதிந்தீர்கள்? கொஞ்சமும் சிரிப்பு வரவில்லை. இந்த நோயின் கொடுமை உங்களுக்கே தெரிந்திருக்கும், மதியம் ரிசர்ச் செய்து பார்த்ததில் ஸ்லீப் ஆப்னியாவை கட்டுப்படுத்த மூன்று முக்கியமான வழிகளை தெரிந்துக்கொண்டேன்.

* மது, புகை, தூக்க மருந்து இவை எல்லாம் ஒட்டு மொத்தமாக நிறுத்த வேண்டும்(இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருந்தால்). இவை நீங்கள் தூங்கும் போது உங்கள் மூச்சுக்குழாய் மேலும் மூடிக்கொள்ள உதவும்.

* உடனே உடல் எடை குறைய வேண்டும். உணவுக்கட்டுபாடுகளும், உடற்பயிற்சியும் மிக மிக அவசியம். சிறிய அளவு உடல் எடை குறைப்பு கூட ஸ்லீப் ஆப்னியாவை பெருமளவு கட்டுப்படுத்தும்.

* பக்கவாட்டில் படுத்து பழகவும். நேராக படுப்பதை விட இப்படி படுத்தல், மூச்சுக்குழாய் தொடர்ந்து திறந்திருக்க உதவுகிறது.

Share this post


Link to post
Share on other sites

If "ஸ்லீப் அப்னியா" has reached worrying level, just follow the two steps

1, Stitch a tennis ball on the back side of your shirt wearing in the night- that will prevent you from sleeping with face facing up wards - that is normal position for many.

2, Sleeping position to be changed - see the right side or left side of the bed - sideways sleeping.

This will solve almost all the problems related to this above referred "ஸ்லீப் அப்னியா"

Remember to follow your doctor advice along with this, if need just talk to doctor, as to whether this method will help you before trying.

Share this post


Link to post
Share on other sites

நலம் விசாரித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

உலகில் பலருக்கு எத்தனையோ நோய்கள் உண்டு அதில் இதுவுமொன்று.

இதை நினைத்து நாமேன் கவலைப் பட வேண்டும். வருவதை தைரியமாக எதிர் கொள்ளலாம்.

மீண்டும் கள நண்பர்களுக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

லீனா..இதென்ன விளையாட்டு..உடனே மருத்துவரை சென்று பாருங்கள்

Share this post


Link to post
Share on other sites

சறுக்கி கீழே விழுந்தால் முதலில் சிரிப்பதுதான் மனித குணம். உங்களுக்கு வந்த நோயை மிகுந்த நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறீர்கள். "மனைவியே சந்தேகப்படுவதில்லை" "தம்பி மாதவன் மாதிரி நான் என்ன செய்ய" "வயர்களே குடல்களாகி நெஞ்சுவரை வந்தது" போண்ற நயமான நகைச்சுவையை ரசித்தேன்.

இது கற்பனை என்றால் சிரித்துவிட்டு போய்விடுவேன். உண்மையிலேயே அந்த நோய் தாக்கம் இருக்கிறதென்றால் வருத்தமே மிஞ்சுகிறது.

மெலட்டூர். இரா. நடராஜன்

Share this post


Link to post
Share on other sites

தூயா மற்றும் நடராஜன் போண்றோர் கூட என்னில் அக்கறையாக இப்படி விசாரிப்பது எனக்கு மகிழ்ச்சொயகவே இருக்கிறது.

இதை நான் நகைச்சுவையாகவே இருக்க வேண்டும் என்றே பதித்தேன். ஆனால் கள உறவுகளை இது இவ்வளவு உணர்ச்சிபூர்வமாகப் பாதிக்கும் என்று நினைக்கவில்லை.

ஒரு தரம் இதை நான் எழுதியிருக்க வேண்டாமோ என நினைக்கப் பண்ணிவிட்டார்கள்.

இருந்தும் இவ்வளவு ஆதரவான இதயங்கள் உண்டு என்பது ஒரு நிம்மதி கலந்த மகிழ்ச்சியையே தருகிறது.

கண்ணதாசன் ஒருதரம் சொன்னார், "ஐயோ! உங்களை நம்பி நான் எப்படிச் சாவது. உங்களுக்கு அழக்கூடத் தெரியவில்லையே!!" என்று.

ஆனால் நான் உங்களை நம்பிச் சா.........ம்.

பின்னமூட்டு விசாரித்தவர்களுக்கும், பி.எம்.அனுப்பி விசாரித்தவர்களுக்கும் மீண்டும் நன்றி. எனக்கு எதுவுமே இல்லை. கவலை வேண்டாம்.

குறிப்பு: நான் எழுதியதை சரியாகப் புரிந்து லக்கி இரண்டு நாட்கள் நித்திரை இல்லாமல் கார் ட்ரைவ் பண்ணினீர்களா என எழுதியிருந்தார். அந்த நகைச்சுவையை எதிர் பார்த்தே இதை எழுதினேன்.

ஆனால் அது செண்டிமெண்டான பிற விழைவுகளைத் தந்துவிட்டது.

Share this post


Link to post
Share on other sites

லீனா நல்ல வார்த்தைகளை சொல்லுங்க..இப்படியான சொற்கள் வேண்டாம்...

Share this post


Link to post
Share on other sites

லீனா அண்ணா!

நான் சிலகாலம் முன்பு ஒரு கதை எழுதி இருந்தேன். கதாநாயகன் இறந்துவிடுவான். கதாநாயகனுக்கு என் பெயரில் பாதியை சூட்டியிருந்தேன். அதற்கே நண்பர் செந்தில் என்னிடம் மிகவும் கோபப்பட்டார்.

Share this post


Link to post
Share on other sites

எல்லோருக்கும் முடிவு என்பது முடிவான விஷயமானாலும் என்னால் என் நட்பையும் உறவுகளையும் பிரிவதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.. அது பெயரளவில் இருந்தாலும் கூட...

Share this post


Link to post
Share on other sites

எல்லோருக்கும் முடிவு என்பது முடிவான விஷயமானாலும் என்னால் என் நட்பையும் உறவுகளையும் பிரிவதை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.. அது பெயரளவில் இருந்தாலும் கூட...

True, it hurts our mind very much. What to do, only at these times we understand, how weak we are.

Share this post


Link to post
Share on other sites

லீணா அண்ணா

நீங்கள் நகைசுவையாக தான் இந்த பதிவை செய்தீர்கள் என்று நினைத்தேன்

உங்கள் மனத்திடம் பார்த்து பொறாமையாக இருக்குறது

நீங்கள் கண்டிப்பாக குணம் அடைவீர்கள் என்று சொல்லவும் வேண்டுமா??

Share this post


Link to post
Share on other sites

மரணம் என்பது என்ன? :o :o

"மண்டையை போடுவது" என்று சொல்ல வேண்டாம். :lol: :lol:

I could have laughed or answered to this "?" under normal situations

when mind is already disturbed due one of our friend health condition, I could not answer to this question.

காயபட்ட சொந்ததுக்கு கண்ணீர் விட்டா இந்த சாரம் பொன வாழ்க்கைஇலும் சாரம் இருக்கு

I wish that our friend "leenaroy" is not diagnosed with any complicated problems.

Share this post


Link to post
Share on other sites

லீணா அண்ண என்ன இது எதோ நகைச்சுவை பகுதினு படிக்காம விட்டுட்டேன்.கிமிரா அக்கா சொல்லிதான் தெரியும். உங்களுக்கு எதுவும் இல்லை. உடம்ம்பை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now
Sign in to follow this  
Followers 0